சென்னை பச்சையப்பா கல்லூரி எதிரே உள்ள செயின்ட் ஜான்ஸ் பள்ளி வளாகத்தில் புத்தகத் திருவிழா டிசம்பர் 30 முதல் ஜனவரி 10ம் தேதி வரை நடைபெறுகிறது. விடுமுறை நாட்களில் காலை 11-30 மணிமுதல் இரவு 8-30 மணிவரையிலும், மற்ற நாட்களில் மதியம் 2 மணி முதல் இரவு 8-30 மணிவரையிலும் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்த புத்தகத்திருவிழாவில் பூவுலகின் நண்பர்கள் சார்பில் அரங்கு (எண்: 233) அமைக்கப்பட்டுள்ளது.
பூவுலகு சுற்றுச்சூழல் மாத இதழுடன் பல்வேறு சுற்றுச்சூழல் நூல்களும் அரங்கில் விற்பனை செய்யப்படுகின்றன.
100 பக்கங்கள், சிறப்புக் கட்டுரைகள், சூழலுக்கு இணக்கமாக வாழ்வது
தொடர்பான சிறப்புப் பக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் “பூவுலகு”
சிறப்பு மலர் வெளியாகியுள்ளது. இந்த மலர் அரங்கில் கிடைக்கும். அத்துடன்
சூழலியல் தொடர்பான தமிழ், ஆங்கில நூல்கள், விழிப்புணர்வு குறும்படங்கள்
உள்ளிட்ட அனைத்தும் கிடைக்கும். மேலும் பல புத்தகங்கள் தயாராகிக்
கொண்டிருக்கின்றன.
இந்த அரங்குக்கு வருமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். தாங்கள்
வருவது மட்டுமின்றி நண்பர்கள் அனைவருக்கும் இந்தத் தகவலைக் கடத்துங்கள்.
பூவுலகு இதழுக்கு சந்தா செலுத்த விரும்புவோரும், இந்த அரங்கில் சந்தா செலுத்தலாம்.
புத்தகத் திருவிழாவிற்கு நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் வருக.
-பூவுலகின் நண்பர்கள்.
சென்னை புத்தகத் திருவிழாவில் பூவுலகின் நண்பர்கள்
அன்புடையீர்,
வணக்கம்.
சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் சமூக அக்கறையும், செயல்திறனும் கொண்ட சில இளைஞர்கள் இணைந்து “பூவுலகின் நண்பர்கள்” என்ற அமைப்பை தொடங்கினர். உலகளவில் செயல்படும் சுற்றுச்சூழல் அமைப்புகளான Friends of the Earth, World Wide Fund, Greenpeace ஆகிய அமைப்புகளோடும், பினாங்கு பயனீட்டாளர் சங்கம் போன்ற அமைப்புகளோடும் இணைந்தும், தனியாகவும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் “பூவுலகின் நண்பர்கள்” ஈடுபட்டனர்.
தமிழ்நாட்டில் தற்போது சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் அனைவரும், ஏதாவது ஒரு வகையில் “பூவுலகின் நண்பர்கள்” அமைப்பின் தாக்கத்திற்கு உட்பட்டவர்களாகவே இருப்பார்கள்.
“பூவுலகின் நண்பர்கள்” அமைப்பு சமூக உணர்வுள்ள அரசியல் தலைவர்கள், அதிகாரிகள், அறிவியலாளர்கள், கல்வித்துறையினர், மருத்துவர்கள், பொறியாளர்கள், ஊடகவியலாளர்கள், மாணவர்கள், அறிவுத்துறையினர் என பலதரப்பினரிடமும் நல்லுறவோடு இயங்கிவந்தது.
“பூவுலகின் நண்பர்கள்” அமைப்பு சார்பில் சுற்றுச்சூழல் குறித்து சுமார் 25க்கும் அதிகமான நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் “ பூவுலகு” என்ற இருமாத இதழும் நடத்தப்பட்டது. அனைத்து துறைகளிலும் உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் மாணவர்களின் பேராதரவோடு “பூவுலகு” இதழ் வெளியானது. இந்நிலையில் “பூவுலகின் நண்பர்கள்” அமைப்பில் முக்கிய பங்கு வகித்த தோழர் நெடுஞ்செழியன், தோழர் அசுரன் ஆகியோர் உடல்நலம் குன்றி அடுத்தடுத்து இயற்கை எய்தியதால் பதிப்புப் பணியில் பெரும் தேக்கம் ஏற்பட்டது.
தற்போது, “பூவுலகின் நண்பர்கள்” அமைப்பின் முன்னோடிகளாக வாழ்ந்து மறைந்த தோழர்கள் நெடுஞ்செழியன், அசுரன் ஆகியோரின் நண்பர்கள் சார்பில் “பூவுலகின் நண்பர்கள்” அமைப்பு மீண்டும் முழுவீச்சுடன் செயல்பட தொடங்கியுள்ளது. இந்த அமைப்பு சார்பில் பல்வேறு கருத்தரங்குகளும், பயிற்சிப்பட்டறைகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அண்மையில் சென்னையில் நடைபெற்ற புத்தகத்திருவிழாவில் பாரம்பரிய பொங்கல் விழாவும், அதையொட்டி “மரபணு மாற்று தொழில்நுட்பமும், மறைக்கப்படும் உண்மைகளும்” என்ற புத்தக வெளியீடும் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது. மேலும் இயற்கை விளைபொருட்களால் சமைக்கப்பட்ட பொங்கல் சுமார் 2,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.
பாரம்பரியத்தை போற்றும் அதே நேரத்தில், நவீன தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தும் நோக்கத்தில் “பூவுலகின் நண்பர்கள்” அமைப்பு சார்பாக நவீன ஊடகங்களான இணையதளம், வலைப்பூ ஆகியவையும் HYPERLINK “http://www.poovulagu.org” www.poovulagu.org, HYPERLINK “http://www.poovulagu.blogspot.com” www.poovulagu.blogspot.com ஆகிய பெயர்களில் நடத்தப்பட்டு வருகிறது . இளைஞர்களையும், மாணவர்களையும் சென்றடைவதற்காக ஆர்குட் சமூகம், கூகுள் மின்னஞ்சல் குழுமங்கள் ஆகியவற்றிலும் “பூவுலகின் நண்பர்கள்” செயல்பட்டு வருகிறது.
காலத்தின் தேவை கருதி “பூவுலகு” இதழை மீண்டும் அச்சில் கொண்டுவர “பூவுலகின் நண்பர்கள்” அமைப்பு திட்டமிட்டுள்ளது. உலகமயமாக்கல் என்ற புதிய சூழலில் இந்தியாவின் இறையாண்மையை பாதுகாக்கவும், இந்தியர்களின் உரிமைகளை மீட்டெடுக்கவும் “பூவுலகு” இதழ் மிகவும் தேவை என்று “பூவுலகின் நண்பர்கள்” பதிப்பித்த நூல்களை படித்து பயனடைந்த பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இதை பரிசீலித்து கடந்த ஜூன் மாதம் முதல் “பூவுலகு” இதழ், வெளிவந்து கொண்டிருக்கிறது.. சுற்றுச்சூழல் அறிவியல், சுற்றுச்சூழல் பொருளியல், சுற்றுச்சூழல் சட்டவியல், சமூகவியல், இயற்கை வேளாண்மை, இயற்கை மருத்துவம், சுற்றுச்சூழல் சார்ந்த கதை, கட்டுரை, சாதனையாளர்களின் பேட்டி, கேள்வி-பதில், கவிதை, நூல் விமர்சனம், திரைப்பட-குறும்பட விமர்சனம், சமகால பிரச்சனைகள், சிறுவர் பகுதிகள் ஆகியவற்றுடன் வெளிவந்து கொண்டிருக்கும் பூவுலகு, கடந்த இரு இதழ்களிலேயே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது..
சுமார் 48 பக்க அளவில் வண்ண அட்டையோடும், தரமான தாள் மற்றும் அச்சோடும் வெளிவரும் இந்த இதழ், தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் குறித்த அக்கறையும், ஆர்வமும், கரிசனமும் கொண்டோரின் கவனத்தை பெரிதும் கவர்ந்துள்ளது..தற்போது ஏறத்தாழ 5000 சந்தாதரர்களைச் சென்றடையும் பூவுலகு, விரைவில் 10,000 சந்தாதாரர்களை எட்டும் இலக்குடன் பணிபுரிகிறது .
மற்ற வணிக இதழ்களைப் போல படித்து முடித்தவுடன் மறந்துவிடும் இதழாக அல்லாமல், அனைவரும் போற்றிப் பாதுகாக்கும் இதழாக “பூவுலகு” இதழை வெளிக்கொணர ஆசிரியர் மற்றும் ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றுள்ள பல்துறை சார்ந்த அறிஞர்களும் உறுதி ஏற்றுள்ளனர். இந்த ஆசிரியர் குழுவினர் அனைவரும் ஊதியம் பெறாமல் முழுமையாக சேவை எண்ணத்துடனே பணிபுரிய உள்ளனர். எனினும் “பூவுலகு” இதழுக்கு தேவையான மற்ற தொழில்நுட்ப தேவைகள் அனைத்தும் பொருள் சார்ந்தே உள்ளது.
எந்த ஒரு நிறுவனத்தின் ஆதரவும் இல்லாமல் “பூவுலகின் நண்பர்கள்” அமைப்பினரின் ஆர்வம் ஒன்றை மட்டுமே முதலீடாக கொண்டு வெளிவரவுள்ள “பூவுலகு” இதழுக்கு தாங்கள் ஆதரவு மிகவும் அத்தியாவசியமானது. “பூவுலகு” இதழின் பின் அட்டை மற்றும் உள் அட்டைகள், ஏனைய பக்கங்களில் சில விளம்பரங்களை வெளியிட திட்டமிட்டுள்ளோம். இதற்கான கட்டணப்பட்டியல் இணைக்கப் பட்டுள்ளது.
அறம் சார்ந்து வணிகம் புரிவதுடன் மக்கள் நலனுக்காகவும் பல செயல்பாடுகளில் ஈடுபட்டுவரும் தாங்கள், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் நடத்தப்படவுள்ள “பூவுலகு” இதழுக்கு விளம்பரங்களை வழங்கி “பூவுலகின் நண்பர்கள்” இயக்கத்தின் செயல்பாடுகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
கோ. சுந்தர்ராஜன்
ஆசிரியர் குழு-பூவுலகு
A2, அலங்கார் பிளாசா, 425 கீழ்பாக்கம் கார்டன் சாலை, சென்னை – 10
தொ.பே: 044-26601562, 98410 31730
—
RR Srinivasan,
29/8/1,2nd floor, Gangai Amman koil street,
Vadapalani,
Chennai – 600 026.Tamilnadu India.
PH-94440-65336 , 044-42874434
Mail: [email protected]