புறப்பாடு ஒரு கடிதம்

ஜெயமோகனின் எழுத்துலகம் வித்தியாசமானது. அவர் – அவர் சார்ந்த தேசம் – சிந்தனைகள் – முதலானவற்றுடன் நின்றுவிடுபவர் அல்ல.

அயல்நாடான ஈழத்தின் அரசியல் மற்றும் இலக்கியப்போக்குகளையும் கூர்ந்து அவதானித்து எழுதுபவர். ஈழத்தின் உரைநடை முன்னோடி ஆறுமுகநாவலர் தொடக்கம் ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து அந்நிய நாடுகளிலிருந்து இலக்கியம் படைப்பவர்கள் வரையில் தெரிந்து வைத்திருக்கிறார்.

அவரது ஈழ இலக்கியம் நூலில் மு.தளையசிங்கம். எஸ்.பொன்னுத்துரை, கார்த்திகேசு சிவத்தம்பி, கவிஞர் சேரன் பற்றியெல்லாம் தனது விரிவான பார்வையை பதிவுசெய்திருப்பவர்.

நாம் தற்பொழுது வாழும் அவுஸ்திரேலியா கண்டத்துக்கு அவர் ஒரு பயணியாக வந்து எழுதிய புல்வெளி தேசம் மிகவும் முக்கியமான நூல். தமிழில் பயண இலக்கியம் எழுதுபவர்களுக்கு அதனை முன்மாதிரியாகவும் கொள்ளலாம்.

அவர் ஈழத்து இலக்கிய உலகை கூர்ந்து அவதானித்தமையினால்தான் ஈழத்து மலையக படைப்பாளி தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு தாம் வழங்கும் விஷ்ணுபுரம் விருதை பரிந்துரைத்து அவரை அழைத்து வழங்கினார். மேடைகளில் காற்றிலே இலக்கியப்பாலம் கட்டுவதாகச் சொல்பவர்களுக்கும் நிஜத்தில் அதனை அமைத்துக்காண்பித்தவர் ஜெயமோகன்.

அவரது புறப்பாடு பற்றிய நடேசனின் பார்வை வாசகர்களை அந்த நூலுக்குள் நிச்சயம் அழைத்துச்செல்லும்.

முருகபூபதி
அவுஸ்திரேலியா

முருகபூபதி பக்கம்

==============================================================================

விஷ்ணுபுரம் இணையதளம்
[விஷ்ணுபுரம் சம்பந்தமான அனைத்துக்கட்டுரைகளும் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. நாவலை புரிந்துகொள்வதற்கான பிற கட்டுரைகளும் உண்டு]

வெண்முரசு விவாதங்கள் இணையதளம்

கொற்றவை விவாதங்கள் இணையதளம்

பின் தொடரும் நிழலின் குரல் இணையதளம்

பனிமனிதன் இணையதளம்

காடு இணையதளம்

ஏழாம் உலகம் இணையதளம்

அறம் இணையதளம்

வெள்ளையானை இணையதளம்

இவை தவிர

விஷ்ணுபுரம் வாசகர் வட்ட இணையதளம்

நண்பர்களால் நடத்தப்படுகிறது.

விஷ்ணுபுர நண்பர்களால் இரு இணையதளங்கள் நடத்தப்படுகின்றன.

காந்தி இன்று இணையதளம் நண்பர் சுநீல் கிருஷ்ணனால் தொடங்கப்பட்டு அவரது நண்பர்களால் நடத்தப்படுகிறது.

குருநித்யா இணையதளம் நண்பர் ஸ்ரீனிவாசனால் நடத்தப்படுகிறது.

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 23
அடுத்த கட்டுரைஅன்னை