«

»


Print this Post

தேடுபவர்கள்


என்னுடைய இணையதளத்தில் நுழைபவர்கள் எதை தேடுவதன் மூலமாக நுழைகிறார்கள் என்று கூகிள் காட்டுகிறது. நான் அடிக்கடி பார்க்கும் விஷயம் இது. பொதுவாக என்னுடைய பெயரை தேடுபவர்கள் அதிகம். என்னுடைய நூல்களை தேடி வந்தடைபவர்கள் கொஞ்சம் குறைவுதான். சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், சுஜாதா பெயர்களை தேடி என்னிடம் வருபவர்கள் உண்டு.

ஆனால் என்னை ஆச்சரியப்படுத்தும் தேடல்கள் பல. கூகிள் பற்பலர் ஒரே சொற்களை தேடினால் மட்டுமே முதன்மையாக எடுத்துக்காட்டும். அச்சொற்கள் மீளமீள தேடப்பட்டால்தான் முதலில் இருக்கும். ஆகவே இச்சொற்கள் தனிப்பட்ட முறையில் யாரோ எதற்காகவோ தேடியவையல்ல. இது பலருடைய பொதுத்தேடல்.

கவிதை , புதுக்கவிதை சரி. இயற்கை உணவு என்று ஒருவர் தேடியதும் சரி. ஆனால் மிகப்பெரும்பாலான தேடல்கள் பாலியல்சார்ந்தவையே. கூகிளில் தமிழில் எதை போட்டாலும் முதலில் வருவது பாலியல் சொற்களே. இணையநிலையங்களில் முன்னால் என்னென்ன இணையதளங்கள் மேயப்பட்டன என்று பார்த்தால் பெரும்பாலும் பாலியல்தளங்கள்தான். பாலியலின் அந்தரங்கமான தேடலுக்கு இணையம் ஒரு ரகசியப்புல்வெளி.

‘அவன் அவளை..’ ‘வருடினாள்’ ‘முலை’ ‘காமம்’ ‘ஆண்குறி’ போன்ற சொற்களை தேடி என் இணையதளத்திற்குள் வந்து விழும் வாசகருக்கு ஏற்படும் துணுக்குறலை என்னால் கற்பனைசெய்யவே முடியவில்லை. என்னடா உலகம் இது என்று பதைத்துப் போய்விடுவாரே. அவரது எளிய உலகத்துக்குள் இனம்புரியாத ஒரு கொந்தளிப்பு ஏற்படுமே. இந்த இணையதளத்தில் இருந்து கோபத்துடன் வெளியே போகும்போது என்ன சொல்வார்?

ஆனால் இன்னும் சில விபரீதமான சொற்றொடர்களுக்காக தேடியிருக்கிறார்கள். ‘கால்களை விரித்து’ தேடியவரின் கற்பனையை ஊகிக்க முடிகிறது. ‘ஆடைகளை களைந்தாள்’ சரிதான். ஆனால் சில தேடல்கள் விபரீதமானவை. ‘அக்கா உறவு’  அடிக்கடி தேடப்படுகிறது. அது வழக்கமான பாலியலெழுத்தின் ஒரு நிரந்தரக் கதை. ‘பெண்களின் சுய இன்பம்’ அதை பெண்கள் தேடுகிறார்களா ஆண்களா? ஆனால்  ‘அம்மா மகன் உறவு’ கொஞ்சம் அதிகப்படி.

திரும்பத்திரும்ப தொந்தரவு செய்யும் தேடல் ‘அப்பா என்னை..’ என்ற வரி. ஆச்சரியமாக இருக்கிறது. அனேகமாக தினமும் பலர் அந்த வரியை தேடி என் இணையதளத்திற்குள் வந்துகொண்டே இருக்கிறார்கள். அந்த வரியை தேடுபவர்களில் மிகச்சிலரே என் இணையதளத்திற்குள் வர முடியும். கூகிள் என் இணைத்தளத்தை கொஞ்சம் தயங்கித்தான் சிபாரிசு செய்யும். அதிகளவு வருகைகள், அதிகளவு அச்சொல் புழங்குதல் ஆகியவையே அதன் அளவுகோல். உள்ளே வருபவர்கள் சம்பந்தப்பட்ட கட்டுரையின் தலைப்பையும் வாசித்தபின்னரே தேர்வுசெய்கிறார்கள்.

அப்படியானால் தினமும் பலநூறுபேர் தமிழில் இச்சொற்களை அந்தரங்கமாக கூகிளில் அடித்து தேடுகிறார்கள். எதை? தேடுபவர்கள் யார் ஆண்களா பெண்களா?

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/6115/

7 comments

Skip to comment form

 1. devarajvittalan

  காமம் ஆண் , பெண் என்ற இருவருக்கும் பொதுவானதுதானே ..அனால் இணையத்தில் தமிழில் தேடுவதற்கு ஒரு எழுத்தை இட்டாலே , எத்தனையோ பாலியல் இச்சைகள் நிறைந்த தளங்கள் வந்து மனதை சலனபடுத்துகிறது . அம்மா மகன் , அப்பா மகள் , என்ற வார்த்தைகள் நம் பண்பாட்டையே சீர் அழிகின்றது . உங்கள் தளத்தை வாசித்து மன நிறைவு அடைகிறேன் .
  http://vittalankavithaigal.blogspot.com/

 2. நவீன்

  சரியா போச்சு போங்க. இசகு பிசகான எல்லா சொற்களையும் ஒரே பக்கத்தில போட்டு பதிவு பண்ணிடிங்க. கூகிள் அட்டவணையில நீங்க இப்ப நீங்க ‘எங்கேயோ’ போயிருவீங்க. :-)

 3. sureshkannan

  இதுவோர் பொதுவான புகார். தம்முடைய தளத்தில் வாசிக்க வந்தவர்களின் தேடு சொற்களை கவனித்திருப்பவர்களின் பெரும்பாலான அனுபவம் இதுவே.வேறு ‘ஏதோ’ தேடலில் ஈடுபட்டவர்களை இலக்கியத் தேடலுக்கு வழிகாட்டிய கூகுளை நீங்கள் பாராட்டியே தீர வேண்டும்.

  என்னுடைய பதின்மங்களில் பெரும்பாலோனாரைப் போல நானும் இம்மாதிரியான தேடல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவன்தான். ‘பக்கத்து வீட்டு மாமி’ யொட்டி அமைந்த படைப்புகளே அதிக கிளர்ச்சியைத் தரும். அம்மா – மகனெல்லாம் திடுக்கிடலையும் அசெளகரியத்தையும் ஏற்படுத்தும்.

  ஆனால் எனக்குப் புரியாத விஷயம், இந்த நவீன கணினி யுகத்தில் பளிங்கு மாதிரி பல ஒளித்துணுக்குகள் இணையத்திலேயே கிடைக்கும் போது எதற்கு இப்போதும் வார்த்தைகளைக் கட்டிக் கொண்டு மாரடிக்கிறார்கள் என்பதே. :-)

 4. ratan

  எனக்குத் தெரிந்து பாலியல் கதைகளில் நாட்டமுள்ள பெண்கள் மிக அதிகம்… Men are visually stimulated and women are verbally stimulated…

  வார்த்தைகளைப் போல் பெண்களை மாயலோகத்தில் உலவச் செய்யும் கருவி வேறில்லை… அந்த ‘அப்பா என்னை…’ கதைகள் பெண்களால் தேடப்படுவதற்கே வாய்ப்பு அதிகம் என்று தோன்றுகிறது… அப்பா மகள் கதையில் ஆண்கள் அவ்வளவு நாட்டம் காட்டுவதில்லை…

 5. Ramachandra Sarma

  அப்படிப்போடு…இதையெல்லாம் கூட ஆராய்ச்சி செய்யறாங்கப்பா…!
  “எதற்கு இப்போதும் வார்த்தைகளைக் கட்டிக் கொண்டு மாரடிக்கிறார்கள்” – என்னங்க இப்படி கேட்டுப்புட்டீங்க? சினிமா வந்ததுக்கப்புறம் எதுக்கு நாவல் படிக்கிறாங்கன்னு கேக்கறமாதிரி இருக்கு.

 6. karthik_s1

  May be off topic, but still..google does not recommend sites based on the site’s hits. hits never matter much for google. It uses an algorithm they call page ranking. basically it calculates a site’s incoming links – each link carries a weight (e-x if yahoo refers your site it gives you more points than a reference from charuonline would give). And for a given keyword it finds N pages and lists them in the order of their weight.

  And if the keyword is “kalkalai virithu” google will also accept links which has words like “kalkalai nagarthinan…..pathirikkayai virithu vaithan”.

 7. stride

  அன்புள்ள ஜெ,

  இதைப்படித்வுடன் என்ன செய்தேன் என்று உங்களுக்கே தெரியும். கூகிளில் “அப்பா என்னை” தேடினேன். முதல் ஹிட் நீங்கள் தான் போங்கள். “அவன் அவளை”க்கு பதினோராவது இடம்.

  ஒருவேளை சிறில் இது போன்ற பலான பதங்களுக்கு வெய்ட்டேஜ் குடுத்து ட்ராஃபிக் கூட்டுகிறார என்ன :)

  இன்னமும் தேட வேண்டிய நீங்கள் சொன்ன சில பதங்கள் பாக்கி. சும்மா இருந்த சங்கை.. நல்லா இருங்க.

  சிவா

Comments have been disabled.