«

»


Print this Post

கோவை சந்திப்பு


எழுத்தாளர் ஜெயமோகனுடன் வாசகர்கள் சந்திப்பு .

நாள் : 23. o1.2010 ஜனவரி,  சனிக்கிழமை மாலை 5.30 மணி .

இடம் : சன்மார்க்க சங்கம் – கோவை (தேவாங்கர் பள்ளி மற்றும் அர்ச்சனா, தர்ச்சனா தியேட்டர் அருகில் )

இது எழுத்தாளருடன் வாசகர்களின் சந்திப்பு , மேடை நிகழ்வு அல்ல , அனைத்து வாசகர்களையும் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.

நம்முடன் நாஞ்சில் நாடன் அண்ணாச்சி , மரபின்மைந்தன் முத்தையா, பர்வீன் சுல்த்தானா ஆகியோரும் கலந்து கொள்கின்றனர் ,

சனிக்கிழமை காலையிலிருந்தே ஜெயமோகன் நம்முடன் இருப்பார் ,ரேஸ்கோர்ஸ் அன்னலட்சுமி உணவகத்தில் மதியம் உணவுடன் கூடிய வட்டமேஜை சந்திப்பும் உண்டு. நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.

வெளியூர் நண்பர்களுக்கு ஏதும் உதவி தேவையெனில் தொலைபேசியில் அழைக்கலாம் .

அன்புடன்

கோவை வாசகர்கள் .

தொடர்புக்கு

அருண் : 9750985863  அரங்கசாமி : 9344433123

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/6114/

9 comments

Skip to comment form

 1. ragunathan

  சந்திப்புக்கு வெகு நாட்களுக்கு முன்பே அறிவித்து விட்டீர்கள். அதனால் திட்டமிட வசதியாக இருக்கும். தங்களை சந்திக்க ஆவலுடன் இருக்கிறேன். :)

 2. ஜெயமோகன்

  sorry date is corrected…

 3. nm_vassan

  (பதிவுக்குச் சம்பந்தமில்லாமல் ஒரு ஐயம்)

  இது உண்மையிலேயே நீங்களா..?

  http://twitter.com/jeyamohanwriter

  வாசன்

  நியு மெக்ஸிக்கோ

  யூ எஸ் ஏ

 4. ஜெயமோகன்

  நான் தான்…சும்மா ஒரு ஆர்வத்துக்காக கை சும்மா இருக்காமல் பதிவுசெய்துவிட்டேன்..இத்தனை பிந்தொடர்வர்கள் இருப்பார்கள் என நினைக்கவில்லை. பீதி அடைந்து பின் வாங்கிவிட்டேன். அதைப்போல ஆர்க்குட். அதிலும் நான் செல்வதே இல்லை. நேரமில்லை. மன்னிக்கவும்

 5. Sanjeevi

  அன்புள்ள ஜெயமோகன்

  Orkut உங்களுக்கு ஒத்து வராது. ஆனால் Twitter நீங்கள் try பண்ணலாம் என்று நினைக்குறேன். உங்கள் ப்ளாக் அப்டேட் விபரத்தையாவது தெரிவிக்கலாமே. மேலும் நீங்கள் எழுத நினைக்கும் இதெற்கெல்லாம் ஒரு ப்ளாக் போஸ்ட் என்று புறக்கணிக்கும் விசயங்களை ட்வீட் செய்தால் என்ன.

  ஒரு பரிந்துரை மட்டுமே :)

 6. ஜெயமோகன்

  டியர் சார்,

  வணக்கம்.

  நலமாக இருக்கிறீர்களா?

  கோவை சந்திப்பு குறித்து மிக்க மகிழ்ச்சி. நானும் கலந்து கொள்கிறேன். உங்களுடன் நிறைய பேச வேண்டியிருக்கிறது. கவிதைகள் குறித்தும், கவிதைகள் மீதான விமர்சனம் குறித்தும்.

  இப்பொழுது கவிதை விமர்சனம் பக்கமாக மனம் சாய்கிறது. இதனால் கவிதைகள் குறித்தான என் பார்வை விசாலமடையலாம் என்ற சுயநலம் கூட காரணமாக இருக்கும் என்று நம்புகிறேன்.ஆனால் எப்படியிருந்தாலும்- படிக்கிறார்களோ இல்லையோ கவிதை பற்றி பேசினால் கொஞ்சம் சந்தோஷமாக இருக்கிறது.

  அன்புடன்,
  வா.மணிகண்டன்.
  http://www.pesalaam.blogspot.com

  அன்புள்ள மணிகண்டன்

  உலகின் நல்ல கவிஞர்களில் கணிசமானவர்கள் கவிதை விமரிசனத்தில் ஆர்வம் கோண்டவர்கள், எழுதியவர்கள். மிகச்சிறந்த உதாரணங்கள் கூல்ரிட்ஜ், டி.எஸ்.எலியட். நவீனக் கவிதையின் விமரிசனத்துக்கான அடித்தளம் இவர்களால் உருவாக்கப்பட்டதே.

  ஆனால் நீங்கல் கவிஞர். எந்தவகையான தர்க்கமுறையிலும் அதீதமாக ஈடுபடுவது கவித்துவத்தை பாதிக்கும். எங்கே நிறுத்திக்கொள்வது என்பது முக்கியமானது

  கவிஞன் கவிதைவிமரிசனத்தில் புறவயமான ஆய்வுக்கோ ,நிலையான கோட்பாட்டுச் சட்டகத்துக்கோ செல்லக் கூடாது. அது அவனை உறையச்செய்துவிடும். செல்லமாட்டேன் என்று ஒவ்வொரு முறையும் சொன்னபடித்தான் அவன் எழுதவேண்டும். அதர்கும் கூல்ரிட்ஜும் எலியட்டுமே மிகச்சிறந்த உதாரணங்கள். முழுக்க முழுக்க அந்தரங்க அனுபவம்சார்ந்தே பேசுங்கள். கவிதையை வகுத்துவிடக்கூடாது என்று சொல்லிக்கொள்ளுங்கள்

  மேலும் ஆய்வுமொழியை கவிதைமேல் போடாதீர்கள். கவிதையின் கருவிகளைக் கொண்டே கவிதையை விமரிசனம் செய்யலாம் -படிமங்கள் உருவகங்களால். என் கவிதை விமரிசனங்கள் அப்படிப்பட்டவை. அந்த எல்லை நம்மைக் காப்பாற்றும்

  வாழ்த்துக்கள். கோவையில் சாவகாசமாகச் சந்திப்போம்

  ஜெ

 7. Niranjan

  hello sir!If we meet it is our second meet.I had a chance to meet you once at in kuttralam “Pathivugal” on Oct’2008.The moments in our lunch are unforgettable.I am more that once again i have that chance with our favorite Mr.Nanjilnadan.

  by,
  Sivakumar,
  Avinasi.

 8. Marabin Maindan

  மதிய உணவுடன் கூடிய சந்திப்புக்கு அரங்கின் கொள்ளளவு 25-30, ஏற்கெனவே 15 வரை பதிவாகிவிட்டன.தயவு செய்து அரங்கசாமி/அருண் எண்களில் முன்பதிவு செய்துகொள்ளுங்கள் .மாலை நிகழ்ச்சிக்கு முன்பதிவு அவசியமில்லை

Comments have been disabled.