மலைச்சாரல்,கடிதங்கள்

அன்புள்ள ஜெ

மலைச்சாரலில் கேட்டேன். என்ன ஒரு இனிமையான நாஸ்டால்ஜியா! நாற்பதுகளின் பிற்பகுதியில் வருவது தப்பில்லை.

செய்யும் வேலையை விட்டுவிட்டு கொஞ்சம் கிறங்கிப் போனேன். எங்கள் வீட்டின் பின்புறம் இருக்கும் மரங்கள் அடர்ந்த கொல்லையும், கிணற்றடியும், மழை கால மாலைகளும், ஈரம் மின்னும் புல்லும் – துவைக்கும் கல்லில் எதையுமே யோசிக்காமல் நேரம் போவது தெரியாமல் உட்கார்ந்து இருந்ததும், யாரையும் காதலிக்காத போதும் காதல் வயப்பட்ட மனநிலையும் எந்த நிர்பந்தமும், அவசரமும் இல்லாமல் எல்லாவற்றையும் அப்பா அம்மாவிடம் அவுட்சோர்ஸ் செய்துவிட்டு

சுஜாதா மேற்கோள் காட்டிய கிளர் ஒளி இளமை…

அன்புடன்
மங்கை

ஜெ,

ஆச்சரியம்தான். நீலம் படித்த விளைவு. நானும் அதே வரிசையில் இந்தப்பாடலை மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருந்தேன்

https://www.youtube.com/watch?v=QqHEGs6Iu_M

எழுபதுகளின் பாடலில் உள்ள வரிகளின் இதம் பின்னர் இல்லாமலாகிவிட்டதென்று நினைக்கிறேன். அதற்குக்காரணம் புதுக்கவிதை எழுதுபவர்கள் பாடலெழுத வந்ததுதான். அவர்களின் மனசுக்குள் சந்தம் இல்லை. ஒலியழகு இல்லை. ஆகவே வலிந்து உருவாக்கிய சொற்சேர்க்கைகள்தான் உள்ளன. அப்பாடல்கள் மெட்டு கொஞ்சம் பழகியதும் செத்துப்போகின்றன

சிவராமன்

முந்தைய கட்டுரைவெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 16
அடுத்த கட்டுரைஇணையமும் வாழ்க்கையில் வெற்றியும்