நூல்கள்,கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,
   நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். தங்களின் ஏழாம் உலகம் நேற்று படிதேன். அதை பற்றிய பல விதமான உணர்ச்சிகளும் எண்ணங்களும் ஓடியபடியே உள்ளன. முதலில் திருநெல்வேலி மொழியில் பேசுகின்ற கதாபாத்திரங்களை தொடர்வது கொஞ்சம் கடினமாகவே இருந்தது. அடிக்கடி அகர முதலி பார்க்க நேர்ந்தது. பின்னர் கதை ஓட்டம் போக போக ஏதோ பேசி தெரிந்த வார்த்தைகள் போன்ற உணர்வே இருந்தது. 
 நான் உடுமலைபேட்டையில் வளர்ந்தேன். அதனால் அடிக்கடி பழனி போவதுண்டு. சிறு வயதில் பிச்சைகாரர்களுக்கு காசு போடுவது ஒரு வேடிக்கையாகவும், கொஞ்சம் வயது வந்தவுடன் அவர்களுக்கு காசு போடுவது ஒரு பெரிய தான செயல் போலவும், பின்னர் அவர்களை ஒரு தொந்தரவாகவே பார்த்து வந்திருக்கிறேன்.  அவர்களின் உலகம் பற்றி நான் நினைத்ததும் இல்லை,கவலை பட்டதும் இல்லை. இந்த கதையின் பகுதி பழனியில் நடப்பதும், அதன் குரூரங்களும், இதன் புறவுலகில்  நானும் சுற்றி வந்தேன் என்ற எண்ணமும் ஒரு மிகையான குற்ற உணர்ச்சியை ஏற்படுத்துகின்றன. அவர்களுக்கு ஊடாக இருக்கும் நேயமும், சரடாக ஓடும் நகைச்சுவையும் இல்லாட்டி இந்த கதை ஒரு பெரும் மன அழுத்தத்தையும் நம்பிக்கையின்மையையும் மட்டுமே எனக்கு  கொடுத்திருக்கும். கருப்பு வெள்ளை என இரு உருவகங்களாக பிரித்து பார்க்க இயலாதவாறு செய்து விட்டது பண்டாரத்தின் கதா பாத்திரம். ராசப்பனும் போத்தியும் மட்டும் மிகையாகவே என் மனதில் நிற்கின்றனர், ஏன் என்று தெரியவில்லை.
முத்தம்மை தன் குழந்தைகளை பற்றி பேசும் போதே, தன் மகனுடுன் புணர்ச்சி கொள்ளும் படி குரூரமான ஒரு சந்தர்பம் நேரிடும் என்று தோன்றியது. அதன் படி கடைசியில் நடந்தது எனக்கு ஏமாற்றமே. இது கொஞ்சம் செயற்கையாக கதைக்கு அதீத குரூரதன்மை கொண்டு வருவதற்காக அமைக்கப்பட்டது போல் இருந்தது. மற்றபடி மிக யதார்த்தமாக, அருகில் உள்ளவர்கள் பேசி வாழும் வாழ்கை போன்ற எண்ணமே உருவாகியது. 
 நான் சொல்ல நினைத்ததில் பாதி கூட சொல்ல முடியவில்லை. ஆனால் அருமையாக இருந்தது என்பது கூட ஒரு குறைவான மதிப்பீடாகவே இருக்கும். 
மதிப்புடன்,
ராஜ்

அன்புள்ள ராஜ்குமார் சுந்தரம்

உங்கள் கடிதம் கண்டேன் ஏழாம் உலகம் குறித்த கருத்துக்களுக்கு நன்றி. அதன் மீதான உங்கள் மன ஓட்டங்கள் வழியாக நீங்கள் சென்று சேரும் இடமே முக்கியமானது. அதுவே உங்கள் இடம். அது உருவாக்கும் அரப்பிரச்சினைகள் சார்ந்து

ஜெ

இனிய புத்தாண்டு (வாழ்த்துகள்) சார் .., சுமார் இரண்டு  வருடமாக வாங்கவேண்டும் என்று நினைதது கிடைக்காமல் தள்ளி போன புத்தகம் இது ;; இந்த புத்தக காட்சியில் கிழக்கு பதிப்பகம் இதை  வெளி யிட்டு உள்ளது . வரபோகும் ஆண்டினை பனி மனிதனில் இருந்து தொடங்க உள்ளேன்.வாசித்து விட்டு உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைபடுகிறேன். 


Regards
dineshnallasivam

அன்புள்ள தினேஷ்

கிழக்கு பதிப்பகம் நான்கு நூல்களை வெளியிடுகிறது. 1. இந்துஞான மரபில் ஆறுதரிசனங்கள் 2 பனிமனிதன் 3 வாழ்விலே ஒருமுறை 4 நாவல்

வம்சி பதிப்பகம் ‘ஜெ.சைதன்யாவின் சிந்தனை மரபு’ நூலை வெளியிடுகிறது

ஜெ

முந்தைய கட்டுரைதிரிச்சூர் நாடகவிழா- 3
அடுத்த கட்டுரைதிலீப்குமாருக்கு விருது