«

»


Print this Post

தமிழினியில்…


இன்றைய காந்தி

காந்திய சிந்தனைகளை இன்றைய நோக்கில் அணுகும் விவாதங்களின் தொகுதி இந்த நூல். சமகாலத்து இளைய தலைமுறை காந்தியை அணுகும்போது உருவாகும் ஐயங்கள் சிக்கல்கள் ஆகியவை இந்த உரையாடல்கள் வழியாக இயல்பாக உருவாகி வந்துள்ளன. காந்தியை முழுமையாக அணுகும் இந்நூல் அவர் மீது கறாரான ஒரு பரிசீலனையை நிகழ்த்துகிறது

அனல்காற்று

அனல்காற்று சட்டென்று வாழ்க்கையில் அடிக்க ஆரம்பிக்கிறது. அனைத்தையும் வரளச்செய்து வெடிக்கச்செய்து தாகம் தாகம் என தவிக்கச்செய்துவிடுகிறது. ஆனால் அனல்காற்று அடித்தால் அதன் உச்சத்தில் மழை கொட்டும். மண் நனைந்து அனல் பொய்யாய் கனவாய் எங்கோ மறைந்துவிடும்

பாலுறவின் நுட்பங்களுக்குள் அறுவைசிகிழ்ச்சைக் கத்தி என செல்லும் ஒரு நாவல்

எழுதும் கலை

கடந்த சில வருடங்களில் ஜெயமோகன் பல்வேறு இடங்களில் சிறுகதை கட்டுரை மற்றும் நாவல் எழுதுவதைப்பற்றி எழுதிய கட்டுரைகளின் தொகுதி இது. இது வடிவத்தையும் எழுதும் முறையையும் அறிமுகம் செய்கிறது. எழுத மட்டுமல்ல வடிவ போதத்துடன் வாசிக்கவும் உதவும் நூல்

இந்திய ஞானம்

இந்தியமெய்ஞான மரபின் சில கூறுகளை ஆராய்ச்சிநோக்கில் அணுகும் நூல்

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/6106/

3 comments

 1. chidambaram

  புத்தகங்களை இணையதளத்தில் வாங்க…

  http://www.udumalai.com/?name=%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D&auth_id=26

 2. ஜெயமோகன்

  திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,
  வணக்கம்.
  உங்களது எழுதும் கலை புத்தகத்தை சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்கினேன். இதை ஏற்கனவே இணையத்தில் படித்திருந்தேன். எனினும் புத்தக வடிவில், செறிவூட்டப்பட்ட நிலையில் படிக்க தோதாக உள்ளது. நன்றி.
  புத்தக இறுதியில் நீங்கள் கொடுத்துள்ள விமர்சகனின் சிபாரிசில், உங்கள் புத்தகத்தை தவிர்த்திருக்கலாம் என்பது என் அபிபிராயம்; உங்கள் மீது ஏற்கனவே பொழியப்படும் ‘சுயபுராண’ குற்றச்சாட்டுகளை கருத்தில் கொண்டே இதைச் சொல்கிறேன். உங்கள் படைப்புகளை நீங்களே முன்மொழியாவிட்டாலும் கூட, சரித்திரம் படைப்பவை தான்.
  எனது வலைப்பூ: http://kuzhalumyazhum.blogspot.com/
  உங்கள் விமர்சனத்தை எதிர்பார்க்கிறேன்.

  வா.மு.முரளி

  வா.மு.முரளி

  அன்புள்ள முரளி,

  பொதுவாக நான் இந்தமாதிரி குற்றச்சாட்டுகள் அல்லது அவநம்பிக்கைகள் எழும் என்பதற்காக எதையும் செய்யாமலிருக்க மாட்டேன். அது எனக்கே நான் விதித்துக்கொண்ட விதி. அப்படி அஞ்ச ஆரம்பித்தால் ஒரு கட்டத்தில் நம் செயல்களை நம் விமரிசகர்கள் தீர்மானிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

  என் மேல் ஆர்.எஸ்.எஸ் முத்திரை வலுவாக இருந்த நாட்களில் ‘விஷ்ணுபுரம்’ என்ற தலைப்பு வைத்தபோது என் ஆசிரியரான ஞானி சொன்னார் ‘நீங்க வேற பேரை வைக்கலாமே. இல்லேன்னா இதையே சொல்லிட்டிருப்பாங்க’ நான் பதில்சொன்னேன் ‘அப்படி சொல்பவர்கள் என் வாசகரகளோ நலம் விரும்பிகளோ அல்ல. அவர்கள் என் செயல்களை தீர்மானிக்கக் கூடாது. நாவலை எல்லாரும் சேர்ந்து ஒழித்தே கட்டினாலும் சரி..’

  அந்நாவல் வந்தபோது அது எதிர்கொண்ட ஆரம்ப கட்ட அர்த்தமில்லாத வெறுப்புப் பிரச்சாரத்துக்கு தன் தலைப்பு ஒரு காரணம். கண்டிப்பாக அது ஒரு தற்காலிக இழப்பே. ஆனால் அது எனக்கு ஒரு பொருட்டே அல்ல. உன்னால் முடிந்ததைப் பார் என்றுதான் இத்தகைய கிசுகிசு, அவதூறு, அவநம்பிக்கையாளர்களிடம் மானசீகமாகச் சொல்வேன். அப்படி ஒரு நல்ல எழுத்தை, எழுத்தாளனை அழிக்க முடியும் என்றால் நான் இலக்கியம் என்று சொல்லிக்கொண்டிருக்கும் விஷயத்துக்கே எந்த மதிப்பும் இல்லை என்றுதானே அர்த்தம்?

  நான் என் நாவல்களைப் பெயர் சொல்லாவிட்டால் மட்டும் ஆகா என்ன ஒரு தன்னடக்கம் என்பார்களா என்ன? பொறாமைக்கும் கசப்புக்கும் காழ்ப்புக்கும் நிபந்தனைகள் இல்லை. கடந்த காலங்களில் நான் எனன் செய்தாலும் என்ன எழுதினாலும் அதை காழ்ப்புடன் விமரிசனம் செய்திருக்கிறார்கல். காலச்சுவடு இதழ் ஒரு ஐந்துவருடம் முழுநேர வேலையாகவே அதைச் செய்திருக்கிறது. இனிமேல் உயிர்மை ஆரம்பிக்கும் என நினைக்கிறேன். ‘இளம்’ படைப்பாளிகள் அதற்கு வரிசையாக போய் நிற்பார்கள். அதனால் என்ன ஆகுமோ அது ஆகட்டும் என்பதே என் எண்ணம். ஆனால் ஒன்றுமே ஆகாது என்பதே என் அனுபவம். நல்ல வாசகன் ஒருவனைக்கூட திசை திருப்ப முடியாது.

  என்னுடைய நூல்கள் தமிழின் இலக்கியப் பட்டியலில் எங்கே உள்ளன என்று ஒரு விமரிசகனாக எனக்குப் படுகிறதோ அங்கே அதை வைப்பதே என் கடமை. சுயவிளம்பரம் என்று சொல்பவர்கள் சொல்லட்டுமே. சொல்லி எனக்கு ஏதாவது ஆகுமென்றால் ஆகட்டும். என்னை அனைவருமே வாசிக்காமலானால் அப்படியே ஆகட்டும். சுயவிளம்பரப்பிரியனான ஒரு ஆசாமி நாவல்கள் எழுதுகிறான், இருந்துவிட்டுப்போகட்டுமே. தருமி நாகேஷ் சொன்னது மாதிரி ‘ சரி, அதுக்கு கொஞ்சம் குறைச்சிட்டு குடுங்க’

  ஜெ

 3. K.R அதியமான்

  ///////கடந்த காலங்களில் நான் எனன் செய்தாலும் என்ன எழுதினாலும் அதை காழ்ப்புடன் விமரிசனம் செய்திருக்கிறார்கல். காலச்சுவடு இதழ் ஒரு ஐந்துவருடம் முழுநேர வேலையாகவே அதைச் செய்திருக்கிறது. இனிமேல் உயிர்மை ஆரம்பிக்கும் என நினைக்கிறேன். ‘இளம்’ படைப்பாளிகள் அதற்கு வரிசையாக போய் நிற்பார்கள். அதனால் என்ன ஆகுமோ அது ஆகட்டும் என்பதே என் எண்ணம்/////

  அன்புள்ள ஜெ,

  இல்லை. அப்படி எல்லாம் நடக்காது என்றே கருதுகிறேன். மனிதர்களை புரிந்து, எடை போடும் திறன் உங்களுக்கு பத்தவில்லை என்றே கருதுகிறேன். மன்னிக்கவும்.

Comments have been disabled.