சேவை வணிகர்கள்

அன்புள்ள ஜெயமோஹன்

இந்த நிகழ்ச்சி சம்பந்தமாக நானும் உங்களுக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தேன்.

உங்கள் மனப்பதிவுபடி பார்த்தால், சட்டரீதியாக தொழில் செய்கிறவர்களாக ஆசிரியர்களும் மருத்துவர்களும் வந்தால், அவர்கள் மதிப்பீடுகளின் ( Exams, Results, Lab tests) அடிப்படையில் தானே செயல்பட முடியும்.

பிறகு அவர்கள் அளவுக்கு மீறிய பரீட்சை வைக்கிறார்கள் என்றும், மதிப்பெண்களால்/மதிப்பீடுகளால் மாணவர்களின்/நோயாளிகளின் மனச்சுமை கூடுகிறது என்றும் ஏன் ஒப்பாரி வைக்க வேண்டும்.

மாணவர்களையும்/ நோயாளிகளையும் முதலாளித்துவத்தின் ஒரு மாற்றிகொள்ளும் பொருளாக(commodities) உருவாக்கும் நிலை தானே சமூகத்தில் மிஞ்சும்.

அவர்கள் வியாபாரிகள் என்று அங்கீகரித்துவிட்டால், பிறகு அவர்கள் நோயையும் அறியாமையையும் அதிகரிக்கத்தானே ஆசைப்படுவார்கள்.

புதுவிதமான நோய்களையும், கல்வி முறைகளையும் இப்போதே கொண்டுவந்துவிட்டார்களே!

உங்கள் அஜிதனுக்கு அளிக்கும் கல்வி முறைபற்றியும் பதிந்துள்ளீர்கள்.

உங்கள் பதிவு அதிர்ச்சி அளிக்கிறது நண்பரே!

இராஜசேகரன், சென்னை.

#

திரு. ஜெயமோகன்,

உங்கள் கட்டுரையில் சொன்னது சரியே.

ஆனாலும் நடுத்தர வர்க்க மனம் போலவே ‘அநியாயத்துக்கு நல்ல’ மருத்துவர்களும் இருக்கிறார்கள்.

அன்புடன்
செல்வராஜ்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 10
அடுத்த கட்டுரைபிரிவின் துயர்