அனந்தமூர்த்தி- ஒரு கடிதம்

அதிகாலை ஒரு பயணத்துக்குக் கிளம்பிக் கொண்டிருந்த போது படிக்க நேர்ந்தது. சு.ராவுக்கும் அனந்தமூர்த்திக்கும் உள்ள ஒற்றுமைகள் – வியக்க வைத்தன.

நேற்று அவருக்கு அரசு மரியாதையுடன் தகனம். எனது ஆசான் எனச் சொல்லி இறுதி மரியாதை நிகழ்வில் பங்கு பெற்றிருக்கிறார், சித்தராமையா.. தமிழகத்தை நினைத்துப் பெருமூச்சு விட்டேன். ஒரு நாள் அரசு விடுமுறை மக்களை ஒன்றும் பெரிதாகப் பாதிக்கவில்லை. வழக்கத்தை விட அதிக ட்ராஃபிக்..

இன்று, டைம்ஸில் ஷிவ் விஸ்வநாதனின் அஞ்சலிக் கட்டுரை

timesofindia.indiatimes.com/city/bangalore/UR-Ananthamurthy-Storyteller-Sociologist-sage/articleshow/40810287.cms

http://ramachandraguha.in/archives/a-writer-among-his-people-the-telegraph.html – குஹாவின் பழைய கட்டுரை.

ஞாயிறு டைம்ஸில் முழுப் பக்க அஞ்சலி.. பேப்பரை நன்றாக முகர்ந்து பார்த்து ஞாபகம் வைத்துக் கொண்டேன்.

பாலா

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 8
அடுத்த கட்டுரைதாய்மை