அன்புள்ள ஜெயமோகன்
தாமஸ் வருகையைப்பற்றிய உங்கள் கட்டுரையையும் அதற்கு வந்த எதிர்வினைகளையும் படித்தேன். எனக்கு ஆச்சரியம் ஏதும் ஏற்படவில்லை. ஏனென்றால் இது உலகம் முழுக்க கிறித்தவ மதப்பரப்புனர்களால் [இவாஞ்சலிஸ்டுகள்] செய்யப்பட்டு வருவதுதான். அதை நீங்களே சொல்லிவிட்டீர்கள்.
பொதுவாக அவர்கள் இரு தேசத்தை கையிலெடுக்க முயலும்போது அத்தேசத்தின் பண்பாட்டு உள்விவகாரங்களை ஆழமாக கவனிக்கிறார்கள். பழைய சேசுசபை கடிதங்களில் இதற்கான ஆழமான முயற்சிகள் இருப்பதைக் காணலாம். அதன்பின்னர் அங்கே நட்புசக்தி பகைசக்தி என்று இரு வகைகளைக் கண்டுகொள்கிறார்கள். நட்புசக்திகளுக்கு ஆதரவான தொனியில் பகைச்சக்திகளை முழுமையான எதிர்களாக சித்தரித்து வரலாறுகளை உருவாக்குகிறார்கள். உடனடியாக ஒரு பெரும் கூட்டத்தின் உனர்ச்சிபூர்வமான ஆதரவு கிடைத்துவிடுகிறது.
ஒரு இனம் இன்னொரு இனத்தை முழுக்க அழித்து அடிமைப்படுத்தி அனைத்து துயரங்களுக்கும் காரணமாக இருந்துள்ளது என்று வரலாறுகளை உருவாக்குவார்கள். இந்தப் பிரிவினையை எப்போதுமே பிறப்பு அடிப்படையில்தான் நிகழ்த்துவார்கள். மொழி போன்ற மாறுதன்மை உடைய அடையாளங்களின் அடிப்படையில் செய்ய மாட்டார்கள். டுட்சி – ஹ¥டு இனப்பிரிவினை இவ்வாறு உருவாக்கப்பட்டதே. இவ்வாறு ஆப்ரிக்கா முழுக்க எல்லா நாடுகளிலும் இனப்பிரிவினைகளைச் செய்திருக்கிறார்கள். இன்று ரவாண்டா முதலிய நாடுகளில் ஒழுகும் குருதி இவ்வாறு தொடங்கப் பட்டதேயாகும். இந்தப்போர்கள் இன்றுவரை ஐரோப்பிய நாடுகளுக்கு ஆயுதச்சந்தைகளை உருவாக்கி பெரும் செல்வத்தை ஈட்டித்தருகின்றன.
எங்கும் எப்போதும் கிறித்தவ அன்பு என்பது போதிக்கப்பட்டதில்லை. முழுக்கமுழுக்க வெறுப்புப் பிரச்சாரத்தின் அடிப்படையிலேயே அனைத்தும் நிகழ்ந்தன என்பது மேலைநாட்டிலேயே பலநூறு ஆய்வுகளால் நிரூபிக்கப்பட்ட வரலாறு. அவற்றுக்கு எதிரான மனசாட்சிக்குரல் இன்று ஐரோப்பாவில் எழ ஆரம்பித்துள்ளது. இன்னும் சில வருடங்களில் கத்தோலிக்க சபை மன்னிப்பு கோரத்தான் போகிறது.
இந்தச் சந்தர்ப்பத்தில் நீங்கள் இழிவுபடுத்தப்பட்டு புண்படுத்தப்பட்ட ஆப்ரிக்காவை நினைவுகூர வேண்டும் என்றும் அவர்களைப்பற்றி நாம் கொண்டுள்ள தவறான பிம்பங்களுக்காக வெட்கப்படவேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். ஆப்ரிக்கர்களின் வரலாறு மதப்பரப்புநர்களால் திரிக்கப்பட்டது. அவர்கள் வெறும் காட்டுமிராண்டிகளாகவும் மனிதமிருகங்களாகவும் உலகின் முன் காட்டப்பட்டார்கள். ஆப்ரிக்கா கண்டுபிடிக்கப்பட்டது என்றும் அது இருண்ட கண்டம் என்றும்தான் நாம் இன்றும் நம் பாடநூல்களில் படிக்கிறோம்
ஏராளமான பயணக்கட்டுரைகள்,நாவல்கள், திரைப்படங்கள் வழியாக ஆப்ரிக்க மக்கள் பற்றிய இச்சித்திரம் கட்டமைக்கப்பட்டது. உயிருடன் மனிதனைப்பிடித்து பானையில்போட்டு வேகவைத்து தின்னும் ஆப்ரிக்கப் பழங்குடிகளைப்பற்றிய எத்தனை சினிமாக்களை நாம் கண்டிருப்போம். அவர்கள் அப்படிப்பட்டவர்கள்தாமா, யார் அந்த சித்திரங்களை உருவாக்கினார்கள் என்று சிந்தித்திருக்கிறோமா? ‘டார்ஜானை’யும் ‘·பான்ற’த்தையும் உருவாக்கியவர்களின் மனநிலையை பற்றி ஆராய்ந்திருக்கிறோமா?
‘புண்படுத்தப்பட்ட கண்டம்’ என்றுதான் ஆப்ரிக்காவைச் சொல்லவேண்டும். 1980 களுக்குப் பிறகு மிகமிகத்தாமதமாகவே ஆப்ரிக்கா தன்னை மெல்லமெல்ல கண்டடைய ஆரம்பித்திருக்கிறது. ஆப்ரிக்காவைப்பற்றி நம்மிடம் உள்ள அதே மனப்பிம்பம் தான் நம்மைப்பற்றி ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உருவாக்கப்பட்டுள்ளது. பாம்¨ப்பம் யானையையும் எருமையையும் பசுவையும் கும்பிடக்கூடிய, சிந்தனைத் திறனும் ன் இல்லாத, அசுத்தமான, பண்படாத மக்கள் என்று. தாமஸ் என்ற தனிமனிதர் இந்தியப்பண்பாட்டையும் சிந்தனைகளையும் உருவாக்கினார் என்று சொல்லும்போது அதை எப்படி ஹிலாரி கிளிண்டனோ மற்றவர்களோ நம்புகிறார்கள்? காரணம் இதுதான்.
சமீபகாலமாக இந்திய பேரிலக்கியங்கள் எளிதில் கிடைக்கின்றன. அவற்றைப்பற்றிய எளிய அறிமுகம் சராசரி வெள்ளையனுக்குக் கிடைக்கிரது. ·ப்ரிஜோ காப்ராவின் ‘தாவோ ஆ·ப் ·பிசிக்ஸ்’ போன்ற பிரபல நூல்கள் இதற்கு முக்கியமான காரணம். ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் பெருகிவரும் ஏராளமான யோகா பள்ளிகள் இன்னொரு காரணம். ஆகவே ஐரோப்பிய பதப்பரப்புநர்கள் உருவாக்கியதே இந்தியப்பண்பாடு என்று இனிமேல் சொல்ல முடியாது. ஆகவே தாமஸை கண்டெடுக்கிறார்கள். அனைத்து நூல்களும் வெளியே இருந்து வந்த பாதிப்பின் விளைவே என்றும் ‘திரிக்கப்பட்ட கிறித்தவ ஞானம்தான் அவை’ என்றும் சொல்ல முயல்கிறார்கள். இதற்காக பெரும் பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் இந்த வேலை நடைபெறுகிறது.
இந்த கருத்தியல் ஆதிக்கத்தை மதப்பரப்புநர்கள் ஒருபோதும் விவாதங்கள் மூலம் செய்வதில்லை. தீவிரமான ஒட்டுமொத்தமான உலகுதழுவிய சலியாத நெடுங்காலப் பிரச்சாரம் மூலமே செய்வார்கள். ‘நட்பு’சக்திகளை தங்களுடன் சேர்த்துக் கொள்வார்கள். அப்படி அவர்கள் சேர்த்துக்கொள்ளக்கூடிய எளிய இலக்கு இங்குள்ள தமிழாய்வாளர்கள்தான். தாழ்வு மனப்பான்மை காரணமாக இந்தியாவே தமிழர்களால் உருவாக்கப்பட்டது என்று இவர்கள் சொல்கிறார்கள். ஆமாம், அந்த தமிழர்களுக்கு தாமஸ்தான் சொல்லிக்கொடுத்தார் என்றால் ஒப்புக்கொள்வார்கள். ஆகவேதான் இந்த வியூகம் வகுக்கப்பட்டுள்ளது.
இன்றைய சூழலில் நாம் என்ன செய்ய முடியும்? பொதுவாக நாம் எதுவுமே செய்வதில்லை. நமக்குள் சண்டைபோடுவோம். செய்யவேண்டுமென்றால் உடனடியாகச் செய்யவேண்டியது ஒன்று உண்டு. இன்று கிறித்தவ பதப்பரப்பிய [இவாஞ்சலிசம்] செயல்பாடுகளுக்கு எதிராகப் பேசக்கூடிய ஏராளமான பிரபலமான இணையதளங்கள் உண்டு. ஆய்வுக்குழுக்கள் உண்டு. அவற்றுக்கு இந்த மோசடிகளைப்பற்றி எழுதலாம். ஏன், நீங்கள் எழுதிய கட்டுரையைக்கூட மொழியாக்கம் செய்யலாம். தொடர்ச்சியாக இந்த மோசடிகளை வெளிப்படுத்தியபடியே இருக்கலாம்
செல்வக்குமார்
சென்னை
[தமிழாக்கம்]
***
அன்புள்ள ஜெயமோகன்,
உங்கள் கட்டுரை படிந்தேன். இது குறித்து சில விஷயங்கள் சொல்ல விரும்புகிறேன்.
1.நீங்கள் ஜெகத் கஸ்பார் என்ற பெயரை விட்டுவிட்டிர்கள். இன்றைய தாமஸ்கிறித்தவப் பிரச்சார திட்டத்திற்கு ஒரு முக்கியமான முனையில் அவரும் இருக்கிறார் என்று ஐயப்படவேண்டியுள்ளது. இந்த அரசுக்கு மிக நெருக்கமானவர். பெரும் பணம் அவரிடம் இருக்கிறது. கனிமொழியுடன் இணைந்து சென்னைசங்கமம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்துகிறார்.
இளையராஜா இசையமைத்த ‘திருவாசகம்’ முழுக்கமுழுக்க இந்த ‘தாமஸ்கிறித்தவ’ கருத்துப்பிரச்சாரத்துக்காக உருவாக்கப்பட்டதே. அது தமிழ்நாட்டில் பிரச்சாரம் செய்யப்படவில்லை. ஆனால் அமெரிக்க மதம்பரப்பு நிறுவனங்களில் அது திரும்பத்திரும்ப சைவம் என்பது திரிக்கப்பட்ட கிறித்தவமே என்ற கூற்றுக்கு ஆதாரமாக முன்வைக்கப்படுகிறது. அதற்குரிய பாடல்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக ஆங்கில மொழிபெயர்ப்பு பைபிள் மொழியில் செய்யப்பட்டுள்ளது. காஸ்பல் இசை அதற்கு போடப்பட்டுள்ளது
2. தமிழ்நாட்டில் எல்லா பல்கலைகளிலும் ஒரு ‘கிறித்தவ ஆய்வு மையம்’ [செயர்] அமைக்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன. ஆசியவியல் நிறுவனத்தில் அமைக்கப்பட்டுவிட்டது. சமீபத்தில் துணைவேந்தர் சிந்தியா பாண்டியன் [பீட்டர் ஹென்றி பாண்டியனின் மனைவி] முயற்சியால் மனோன்மணியம் பல்கலையில் அது அமைந்துள்ளது.எல்லா இடங்களிலும் தோமாகிறித்தவ கருத்துக்கான ஆய்வுகள் தொடங்கப்படவுள்ளன.
ஜெ.சிவசுப்ரமணியம்
நெல்லை [மொழியாக்கம்]
****
ஜெயமோகன்,
உங்கள் கட்டுரையில் தாமஸ் பிராமணர்களால் கொல்லப்பட்டது பற்றிய கிறித்தவப்பிரச்சாரத்தின் பொய்யை சுட்டிக் காட்டியிருந்தீர்கள். இந்தப்பொய் மிகச்சமீபமாக- முக்கால் நூற்றாண்டுக்குள்- புனையப்பட்டதாகும். அதாவது பிராமண எதிர்ப்பு அரசியல் தமிழ்நாட்டில் உருவான பிறகு.
இந்தப்பிரச்சாரத்தின் அபாயத்தை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். பொதுவாகவே கிறித்தவ பிரச்சாரகர்கள் அவர்கள் மதம் மாற்றச்சென்ற மக்கள் மிகவும் காட்டுமிராண்டிகள் என்று காட்டுவார்கள். அவர்களிடம் ஏசுவைப்பற்றிச் சொல்லப்போய் கடுமையான துயரங்களை அவர்களின் அப்போஸ்தலர்களும் புனிதர்களும் அடைந்ததாகச் சொல்வார்கள் , அதைப்பற்றிய கொடூரமான கதைகளை புனைவார்கள். அந்தப் புனிதர்களின் படங்களை வைத்து வழிபடுவார்கள்.
ஆனால் இந்தியா வந்த கிறிஸ்தவ மதப்பிரச்சாரகர்கள் முழுக்க முழுக்க மரியாதையாக நடத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் எளிய மக்களால் மரியாதையாக நடத்தப்பட்டிருக்கிறார்கள். வீரமாமுனிவர், கால்டுவெல்,சீகன்பால்கு, ரிங்கல் தௌபே போன்று எல்லாருமே மக்களால் மதிக்கவே பட்டிருக்கிறார்கள். இத்தனைக்கும் அவர்கள் இம்மக்கள் வழிபடும் கோயில்களை அவமதித்திருக்கிறார்கள். சாமிகளை உடைக்க முற்பட்டிருக்கிறார்கள். இழிவுசெய்து பேசியும் இருக்கிறார்கள். இதை அவர்களே விரிவாக பதிவும் செய்திருக்கிறார்கள். எவருமே அவற்றை வாசிக்கலாம். ‘இந்திய மக்கள் மரியாதையாக நடத்துகிறார்கள், சொன்னால் கேட்டுக்கொள்கிறார்கள், கிறித்தவ மதக்கருத்துக்களை மட்டும் ஏற்றுக்கொள்வதில்லை’ என்றே இவர்கள் எழுதுகிறார்கள்.
இந்தியாவில் கிறித்தவ மதபோதகர்கள் பல்லாயிரம்பேர் வந்து பல வருடம் பணியாற்றியபோதும் கொல்லப்பட்டவர்கள் மிகமிகக் குறைவே. அதுவும் கூட உள்ளூர் அரசியலில் ஈடுபட்டமையினால்தான். அவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். இந்தியாவை பெரும்பாலும் இழிவான மொழியில் வர்ணித்த சேசுசபை பாதிரிமார்களின் கடிதங்களில் எங்குமே இங்கே தாக்குதல்கள் நிகழ்ந்ததாக இல்லை.
ஆனால் சவேரியார் போன்ற புனிதர்கள் இந்தியாவில் கோவா இன்குவிசிஷன் போன்ற கொடூரமான சித்திரவதைக் காலங்களை உருவாக்கியிருக்கிறார்கள். பல்லாயிரம்பேர் வதைக்கப்பட்டு கொல்லப்பட்டார்கள். பல்லாயிரம்பேர் கோவாவை விட்டு ஓடினார்கள். இன்று மேற்கு கடற்கரை முழுக்க சிதறி வாழும் கொங்கணிகள் அப்போதைய அடக்குமுறையின் சாட்சிகள். கிறித்தவ ஆவணங்களில் இருதே இன்குவிசிஷன் பற்றிய தகவல்கள் எடுத்து விரிவாக வெளியிடப்பட்டுள்ளன.
ஆகவேதான் புராண காலத்துக்குப் போய் வராத தாமஸை பிரார்த்தனை வேளையில் பிராமணர் பின்னாலிருந்து குத்திக் கொன்றார்கள் என்று ஒரு கொடூரமான கதையை உருவாக்குகிறார்கள். அந்தப் பிராமணர் பின்னர் ஒரு சுவிசேஷகரைக்கூட கொல்லவில்லை! பிராமண அதிகாரம் மூத்து நின்ற நாயக்கர் ஆட்சியில்கூட அப்படிச் செய்யவில்லை! என்ன ஆச்சரியம்!
இந்த தாமஸ் கொலை கட்டுக்கதை பலகோடி ரூபாய்செலவில் உலகம் முழுக்க கொண்டுசெல்லப்படும். திரைப்படம் மூலம் நமக்கே சொல்லித்தந்து நம் மக்களே நம்புவார்கள். விளைவாக இந்தியாவும் சுவிசேஷகர்களை கொடுமைப்படுத்திய காட்டுமிராண்டி நாடுதான் என்று சித்தரிக்கப்படும்
பிராமணனைத்தானே சொல்கிறார்கள், சொல்லட்டும் என்று நினைக்கும் நம்முடைய அறிவுஜீவிகள் இதன் மூலம் தமிழகம் களங்கப்படுத்தப்படுவதை உணர்வதில்லை. வந்தாரை வரவேற்ற தமிழ்ப்பண்பாடு கேவலப்படுத்தப்படுவதை புரிந்து கொள்வதில்லை. காரணம் கண்மூடித்தனமான வெறுப்பு. இதுதான் அறியாமையின் கொடுமை என்பது!
சாரநாதன்
சென்னை[மொழியாக்கம்]