«

»


Print this Post

சிறில் அலெக்ஸ் இசை


நண்பர் சிறில் அலெக்ஸ் இசையமைப்பாளார் என்று நம்புவதற்கான வலுவான ஆதாரங்கள் உள்ளன. இசை தெரிந்தவர்கள்தான் அதை மேற்கொண்டு பரிசீலிக்க வேண்டும். அவரது இணையதளத்தில் அவர் சமீபத்தில் போட்ட சில இசைத்துணுக்குகளைக் கேட்டேன். எனக்கு பொதுவாக எல்லா இசையுமே பிடிக்கும் என்பதனால் மனதுக்கு நிறைவாக இருந்தது.

மேற்கொண்டு ஷாஜி, ராமச்சந்திரஷர்மா போன்ற இசை விமரிசகர்கள்தான் பிச்சு பீராய்ந்து ஏதாவது சொல்ல வேண்டும். மற்றபடி நான் அவர் திருக்குறளைப்பற்றி எழுதிய நக்கல்களை ரசித்தேன்

http://cyrilalex.com/?p=489

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/6060

8 comments

Skip to comment form

 1. K.R அதியமான்

  http://www.wgbh.org/listen/classical.cfm

  இது Bostonஇல் இருந்து இயங்கும் ரேடியோவின் தளம். அருமையான கிளாசிக் இசை கேட்க்கலாம்.

 2. தள மேலாளர்

  அன்புள்ள ஜெ,
  என் தளத்தை பார்வையிட்டு விளம்பரப்படுத்தியதற்கு நன்றி. நான் இசையமைப்பாளரா என்றெல்லாம் அவசரமாக முடிவு செய்துவிடக் கூடாது அதற்கு இன்னும் பல காலங்கள் பிடிக்கும். பிடிக்காமலும் போகலாம். சில சிறு முயற்சிகளை செய்து வருகிறேன். நேரம் போகிறது. ஷாஜி ஏற்கனவே இசையை கேட்டு கருத்து சொல்லிவிட்டார். பரவாயில்லை என்பதுதான் பரவலான அபிப்பிராயம். அதுவே தற்’போதை’க்கு போதுமானது.

  இன்னொரு இசை வெளியீடு இங்கே http://www.supload.com/sound_confirm.php?get=352564842.wma

  குறள் பதிவு எனக்கும் பிடித்தமானது. இணைப்பு இங்கே http://cyrilalex.com/?p=467

 3. ஜெயமோகன்

  சிறில், நீங்கள் இசையமைப்பீர்கள் என்று தெரியாது. (இன்று காலைதான் ஜெமோ தளம் வழியாகத் தெரிந்தது). தெரிந்திருந்தால் இசைச்சிறப்பிதழில் உங்களையும் பிடித்துப் போட்டிருக்கலாம் :-) உங்கள் இசைத்துணுக்கைக் கேட்டேன். முதல் முயற்சிக்குப் பரவாயில்லை.

  என் நண்பன் கார்த்திக் வடிவமைத்துப் பாடிய இணைக்கப்பட்டிருக்கும் இந்தப் பாடலைக் கேட்டுப்பாருங்கள். ஒரே ஒரு கீபோர்ட், ஒரு ஓட்டை மைக் வைத்து ரெகார்ட் செய்தது. இவன் ஒரு அட்டகாசமான கீபோர்டிஸ்ட். கார்த்திக்ராஜா இவன் வாசித்ததைப் பார்த்து/கேட்டு அசந்துபோனார். இசைப்பக்கம் தீவிரமாக இறங்கியிருந்தால், ஒரு ரவுண்ட் வந்திருப்பான். ஆனால் எலெக்ட்ரானிக்ஸிலும் அளவற்ற ஆர்வம் கொண்டிருப்பதால் டெக்ஸாஸ் இன்ஸ்ட்ருமெண்டில் பல பேடட்ண்களுடன் தீவிரமாகக் குப்பை கொட்டிக்கொண்டிருக்கிறான் :-).

  அன்புடன்,
  சேதுபதி

 4. ஜெயமோகன்

  பிடிக்கும். பிடிக்காமலும் போகலாம்.

  யாருக்கு?

 5. Ramachandra Sarma

  கேட்டுத்தான் பார்ப்போமே என்றுதான் நினைத்தேன். முதல் முயற்சிக்குப் பரவாயில்லை என்றே தோன்றுகிறது. (அட, ஆரம்பத்துலயே அடியை போடக்கூடாது என்பது பத்ததி) இன்னும் கொஞ்சம் க்ரியேடிவாக முயற்சிக்கலாம். இந்த இசையை எப்படி வகுப்பது என்று தெரியவில்லை. தொடக்க காலங்களில் மெலடிகளில்/ஹார்மனிகளில் கவனம் வைப்பது பிற்காலத்திற்கு நன்மை பயக்கும் என்று சொல்லத்துணிகிறேன்.

  அது சரி சிறில், உங்களுக்கு பின்னவீனத்துவ இசையும், ஸ்பானிஷ் இசையும், உலக இசையும் தெரியுமா? இளையராஜாவின் இசைகுறித்து ஏதாவது உங்களுக்குத் தெரிய வேண்டும் என்றால் எனக்குத்தெரிந்த ஒரு உலக மகா இசை மேதை இருக்கிறார், அவரிடம் வேண்டுமானால் உங்களுக்கு உதவச் சொல்கிறேன். என்ன கொஞ்சம் செலவாகும் பரவாயில்லையா?

 6. ஜெயமோகன்

  ரொம்ப புகழாதீங்க, கூச்சமா இருக்கு

 7. sethuarun

  //ராம்: உங்களுக்கு பின்னவீனத்துவ இசையும், ஸ்பானிஷ் இசையும், உலக இசையும் தெரியுமா? இளையராஜாவின் இசைகுறித்து ஏதாவது உங்களுக்குத் தெரிய வேண்டும் என்றால் எனக்குத்தெரிந்த ஒரு உலக மகா இசை மேதை இருக்கிறார், அவரிடம் வேண்டுமானால் உங்களுக்கு உதவச் சொல்கிறேன். என்ன கொஞ்சம் செலவாகும் பரவாயில்லையா?//

  //ஜெமோ: ரொம்ப புகழாதீங்க, கூச்சமா இருக்கு//

  :–))))))

 8. ஜெயமோகன்

  என்னது எல்லாருமே ஆவரேஜ் என்று சொல்கிறார்கள் சிறில்?

  சுந்தர ராமசாமி நினைவின் நதியில் நூலில் ஒரு விஷயம் வரும். சுராவுக்கு பிச்சுவையர் என்ற மூத்த நண்பர் இருந்தார். அதி தீவிரமான இசை ரசிகர். எவரையுமே எதிர்ம்றையாகச் சொல்ல மாட்டார். பாடகர் ரொம்ப மோசம் என்றால் ‘நல்ல உழைப்பாளி’ என்று சொல்வார்

  சும்மா ஞாபகம் வந்ததனால் சொன்னேன்

Comments have been disabled.