காசா வில் இஸ்ரேலின் தாக்குதலைப்பற்றிய இக்கட்டுரை வழக்கமான என் எண்ணத்தை வலுப்படுத்துகிறது. தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியாகும் அனைத்துச் செய்தித்தாள்களையும், இதழ்களையும் ஒருவர் வாசித்தால் கூட ஒரே குரலைத்தான் அவர் கேட்கமுடியும். திட்டமிட்டு ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே மொழியில் ஒரே வகை தரவுகளுடன் அளிக்கப்படும் தரப்பு அது. பெரும்பாலும் ஒரே மூலம் கொண்டது.
இணையம் என ஒன்று இருப்பதனால்தான் ஐநூறுபேருக்காவது மாற்றுத்தரப்பு வாதம் என ஒன்று உள்ளது என்றாவது தெரியவருகிறது
தமிழ் அறிவுஜீவிகளின் பக்கச்சார்பு தலையங்கங்களில் இஸ்ரேல் அரபு பிரச்னை பற்றிய பொய்களின் காரணமென்ன?