«

»


Print this Post

கோவையில் வாசகர் சந்திப்பு


கோவையில் வாசகர் சந்திப்பு நடத்துவதைப் பற்றி நண்பர்கள் பலர் சொன்னார்கள். [வாசகர் சந்திப்பு ஒரு கடிதம்] ஆர்வத்துக்கு நன்றி. ஏற்பாடு செய்யலாம். நான் கோவையில் ஏதேனும் கூட்டத்தில் பேசி பல வருடங்கள் ஆகின்றன. கிட்டத்தட்ட பத்து  வருடங்கள்கூட இருக்கும் என்று நினைக்கிறேன். மீண்டும் கோவை வருவதில் மகிழ்ச்சி

 

தமிழில் எனக்காக நிகழ்த்தப் பட்ட முதல் கூட்டம் 1991 ஜனவரியில் விஜயா வேலாயுதம் ஏற்பாட்டில் கோவையில் நடைபெற்றது. ரப்பர் வெளியானபோது, அதன் மீதான விமரிசனக்கூட்டம் அது. அதன்பின்னர் அடிக்கடி வர நேரவில்லை. தோப்பில் அண்ணாச்சியின் துறைமுகம் நாவல் வெளிவந்தபோது அதன் வெளியீட்டுவிழாவுக்கு வந்திருக்கிறேன். அப்படி சில கூட்டங்கள்.

 

தமிழினி வெளியீடாக வரும் ‘இன்றைய காந்தி’ நூலின் ‘வெளியீட்டு’விழா ஈரோட்டில் ஜனவரி 24 ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. அதன் பின்னர் ஜனவரி 27 முதல் பிப்ரவரி 5 வரை நான் மலேசியா, சிங்கப்பூருக்கு ஒரு பயணம் செய்ய விருக்கிறேன். பிப்ரவரி இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை பரீக்ஷா ஞாநி அவரது கேணி அமைப்பு சார்பில் சென்னையில் பேச அழைத்திருக்கிறார்.

 

ஆகவே பிப்ரவரி இறுதியில்தான் இப்போது வசதிப்படும். பிப்ரவரி மூன்றாம் வார சனி அல்லது ஞாயிறு நண்பர்களுக்கு வசதி என்றால் வைத்துக்கொள்ளலாம். பிப்ரவரி இறுதி ஞாயிறு என்றபோது பையன் வேண்டாம் என்கிறான். மார்ச் மாதம் ஒன்றாம் தேதி அவனுக்கு தேர்வு ஆரம்பிக்கிறது. ஒரு திகிலோடு இருக்கிறான்.

 

இந்த தேதி இல்லையென்றால் மார்ச் 20க்குப்பின் வைத்துக் கொள்ளலாம். அல்லது ஜனவரி முதல் அல்லது இரண்டாவது சனி ஞாயிறுகளில் வைத்துக் கொள்ளலாம். அதிக அவகாசம் இல்லை என்பது பரவாயில்லை என்றால் எனக்குப் பிரச்சினை இல்லை.

 

கூட்டத்தை இரு பகுதிகளாக நடத்தலாம். ஒருநாள் மாலை எல்லா வாசகர்களுக்காகவும் ஒரு ‘ஆசிரியரைச் சந்தியுங்கள்’ போன்ற நிகழ்ச்சி. அதாவது கேள்வி – பதில். அனைவருக்கும் அழைப்பு அனுப்பி பொதுவாக நடத்தலாம். மறுநாள் ஆர்வமுள்ள நண்பர்களை மட்டும் சந்திக்கும் ஓர் உரையாடல் நிகழ்ச்சி, அதை அறை நிகழ்ச்சியாக எங்காவது ஏற்பாடு செய்யலாம்.

 

நண்பர்கள் கூடிப் பேசித் தெரிவித்தால் நல்லது. சந்திப்போம்

 

ஜெ

வாசகர் சந்திப்பு ஒரு கடிதம்

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/6041/

20 comments

Skip to comment form

 1. ragunathan

  உங்களைச் சந்திக்க வேண்டும் என்ற ஆவல் அவ்வப்போது எழுவது உண்டு. பெரும்பாலான எழுத்தாளர்களின் வாசகர் சந்திப்புக் கூட்டம் சென்னையில் மட்டுமே நிகழ்கிறது. கோவை போன்ற நகரங்களில் பெரும்பாலும் நடப்பதில்லை. அதனால் நீங்கள் கட்டாயம் கோவை சந்திப்பை நடத்த வேண்டும். அப்படியே எனக்கும் ஒரு சீட்…. :)

 2. ஜெயமோகன்

  sure

 3. Marabin Maindan

  வணக்கம்.ஈரோட்டில் ஜனவரி 24 மாலை நிகழ்ச்சி நடக்கிற பட்சத்தில் அன்று காலை கோவையில் நிகழ்ச்சி வைத்துக் கொண்டால் என்ன? அரங்க அமைப்பு & ஒருங்கிணைப்பு குறித்த என் உத்திரவாதம் அப்படியே இருக்கிறது.
  இது ஜெ.நிகழ்ச்சி நிரலுக்கு சரிப்படும் பட்சத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டில் இறங்கலாம்.
  அமைப்புக்குழுவில் இடம்பெற விரும்பும் நண்பர்கள் 98430 63572 என்கிற என் செல்லிடப்பேசிக்கோ [email protected] எனும் என் மின்னஞ்சலுக்கோ தொடர்பு கொள்ளலாம்.(மிஸ்டு கால்கள் பாலினத்தைப் பொறுத்து பரிசீலிக்கப்படும் :-))உப்பு பிஸ்கட் + உருப்படாத டீ பொறுத்துக் கொள்ளும் தீரர்கள் நேரில் வரலாம்

 4. ஜெயமோகன்

  அன்புள்ள முத்தையா

  அது ஒருவகையில் நல்ல யோசனை, எனக்கு ஒரே பயணமாக முடியும். ஆனால் நடைமுறையில் நிறைவை அளிக்காது. இருபக்கமும் தேவையில்லாத பதற்றம். நான் இக்கூட்டங்களுக்கு வருவதே சாவகாசமாக நண்பர்களிடம் அளவளாவத்தான். அது முடியாமல் போய்விடலாம். தனிப்பட்ட உரையாடல்களுக்கு வாய்ப்பே இல்லாமல் அவசரமாக இருக்க வேணியிருக்கும். ஈரோட்டிலும் நல்ல நண்பர்கள் பலர் வருகிறார்கள். அப்படி முடிந்தால் அது ஏமாற்றமாக அமையும்

  ஒரு வாரம் முன்னதாக, ஜனவரி இரண்டாவ்ம் வாரம் 9,10 அல்லது 16,17 ஆம் தேதிகளில் வைத்திக்கொள்ளலாம். சாவகாசமாக இருக்க முடியும். யோசியுங்கள்
  ஜெ

 5. jeevartist

  ஜனவரி 11 வரை கோவை விழா என்று ஒன்று நடைபெறுவதால் அரங்குகள் கிடைப்பது சிரமம்…பொங்கல் விடுமுறை சரியான நேரம்தான்!!

 6. Arangasamy.K.V

  முத்தையா அண்ணன் ஜனவரி 23 வைத்துக் கொள்ளலாம் என்றிருக்கிறார் , இன்று முடிவு செய்யலாம் ,

  அப்படியெனில் ஜனவரி 22 , 23 (வெள்ளி , சனி இங்கிருக்கலாம் ) உங்கள் வசதியை பொருத்து…

 7. ஜெயமோகன்

  சரிதான், 23 ஜனவர் வைத்துக்கொள்வோம். அனைவருக்கும் வசதி…மற்ற விஷயங்களை ஃபோனில் பேசலாம். நண்பர்கள் சேர்ந்துசெய்தால் நல்லதுதான். 22 அன்றே வருகிறேன். நண்பர்களை சாவகாசமாக சந்திக்கலாமே
  ஜெ

 8. Arangasamy.K.V

  ஜெயமோகனுடன் வாசகர் சந்திப்பு அல்லது ஜெயமோகனுக்கு ஆறுகால பூஜை (உபயம் : நாஞ்சில் அண்ணாச்சி)

  நேற்று மாலை மரபின் மைந்தன் அலுவலகத்தில் உப்பு பிஸ்கட் மற்றும் உண்ணியின் டீயுடன் முத்தையா அண்ணன், நண்பர் அருண் மற்றும் நான் ,

  திருப்பூரிலிருந்து சங்கரன் எனும் வாசகரும் அழைத்திருந்தார் , ஜனவரி 23 மாலையில் வாசகர்கள் மட்டுமேயான சந்திப்புக்கு என்ன செய்யலாம் என முத்தையா அண்ணன் ஆலோசனை சொன்னார் ,

  முழுமையான விபரங்கள் பின்னர் முத்தையா அண்ணன் பதிப்பார் .

 9. Marabin Maindan

  ஜெயமோகன் மீது எனக்கு மதிப்பும் நேசமும் உண்டு.அவரும் அவருடைய எழுத்துக்களைப் போலவே சிநேகமானவர் என்ற நிலையில் அவருடன் பழகுவது ரயிலின் ஜன்னலோர இருக்கை போல் சௌகரியமானதாகவே இருந்திருக்கிறது.

  தன்னுடைய வாசகர்கள் பலர் தன்னை குரு நிலையில் வைத்து மதிக்கிறார்கள் என்று அவரே சொல்லிக் கேட்டிருக்கிறேனே தவிர அவருடைய தீவிர வாசகர்களை நேரில் சந்தித்ததில்லை.ஜெயமோகனின் நண்பர்களை மட்டுமே சந்தித்துள்ள நான் வாழ்வின் வெவ்வேறு நிலைகளில் உள்ளவர்கள் அவரை எப்படி உள்வாங்கியுள்ளார்கள் என்பதை உணர ஆவலாயிருந்தேன்

  கோவை கூட்டம் என்று வந்த பிறகு ஏதேனும் ஒரு புள்ளியில் ஏற்பாடுகள் தொடங்க வேண்டுமே என்பதால் என் செல்லிடப்பேசி எண்ணையும் மின்னஞ்சல் முகவரியையும் இந்த இழையில் தந்தேன்.

  ஜெயமோகனின் வாசகர்கள் எவ்வளவு ஒழுங்கானவர்கள் என்பதைப் பறைசாற்றும் விதமாக அரங்கசாமி,அருண் என்று அகர வரிசையிலேயே அழைக்கத் தொடங்கினார்கள்.க.நா.சு.வைப் பார்க்கப்போன எழுத்தாளர் ஒருவர் க.நா.சு.விற்கு இருக்கும் கடமை ஒன்றைச் சொன்னாராம்.”மௌனிக்கு ஒரு மாடம் கட்டி ஆறுகால பூசைக்கு ஏற்பாடு செய்யணுமில்லையா” என்று.

  அரங்கசாமி,அருண் ஆகிய இருவருமே ஜெயமோகனுக்கு அப்படியொரு கோயில் கட்டும் தீவிரத்துடன் இருக்கிறார்கள்.ஜெயமோகனின் எழுத்தும் தொடர்பும் அவர்களின் வாழ்வை அழுத்தமாகத் தொட்டிருப்பதற்கு அவர்களுடைய ஆர்வமே ஆதாரம்.
  திருப்பூரில் இருந்து அழைத்த சங்கரனும் செல்லிடப்பேசி வழியாகவே வந்து சேர்ந்து
  விடுவார் போல….
  ஜெயமோகனின் உறவு வட்டப் பானைக்கு மூன்று பருக்கைகள் பதமாகவும் இதமாகவும் இருந்தன.

  ஜெயமோகனிடம் பேசி உறுதி செய்தது போல ஜனவரி 23ம் தேதி கோவையில் சந்திப்புக்கான ஏற்பாடுகள் நடக்கின்றன.மதியம் 11-3 வரை உணவுடன் கூடிய சிறு அளவிலான கலந்துரையாடலும் மாலை வாசகர் சந்திப்பும் அமையக்கூடும்.

  நாஞ்சில் நாடன் அன்று கலந்து கொள்வதாகச் சொல்லியுள்ளார்.பேச்சாளரும் ஜெயமோகனின் வாசகருமான பர்வீன் சுல்தானா அன்று வேறு நிகழ்ச்சிக்காக கோவையில் உள்ளார்.அவரும் பங்கேற்கிறார்

  ஆனாலும் இந்த வாசகர் சந்திப்பு சொற்பொழிவு மேடையாகி விடக்கூடாது என்பதில் கவனமாயிருக்கிறோம். எனவே சடங்குகள் முகமன்கள் இல்லாமல் இயல்பான சங்கமமாய் இந்த சந்திப்பு நிகழும்.இடம் நேரம் குறித்த விபரங்கள் ஒரிரு நாட்களில் வெளியாகும்.
  ஏற்பாடுகளில் ஒத்துழைக்க விரும்புவோர் குறிப்பாக கோவை நண்பர்கள் என் எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.உப்பு பிஸ்கெட் உருப்படாத டீயுடன் உங்களை
  சந்திக்கவும் தயார்தான்

 10. Arangasamy.K.V

  மரபின் மைந்தன் முத்தையா

  ரசனை இதழ் http://www.jeyamohan.in/?p=558

  வைரமுத்து:ஆளுமைச்சித்திரம் http://www.jeyamohan.in/?p=594

  இளங்கோவடிகள்தான் ஐயப்பன்: கொற்றவையில் ஜெயமோகன்:மரபின் மைந்தன் முத்தையா http://www.jeyamohan.in/?p=466

 11. ஜெயமோகன்

  நன்றி முத்தையா அப்படியே வைத்துக்கொள்வோம். நல்லது. மண்டகப்படி பூஜை எல்லாம் நல்லதுதான் ஸர்க்கரைப்பொங்கல் வேண்டாம்

  ஜெ

 12. Arangasamy.K.V

  மாடனுக்கு சக்கரை பொங்கல் பிடிக்காது என நாங்கள் கேள்விப்பட்டுள்ளோம் , ஆனால் அன்னலச்சுமியில் சைவம்தான் .

  //ஆனாலும் இந்த வாசகர் சந்திப்பு சொற்பொழிவு மேடையாகி விடக்கூடாது என்பதில் கவனமாயிருக்கிறோம். எனவே சடங்குகள் முகமன்கள் இல்லாமல் இயல்பான சங்கமமாய் இந்த சந்திப்பு நிகழும்//

  தன் புத்தகத்தை தன் வாசகர்களுக்கு டெடிகேட் செய்யும் எங்கள் எழுத்தாளர் சார்பாக நன்றி முத்தையா அண்ணா ,

 13. Marabin Maindan

  சுடலைமாடனை பீடத்துடன் கட்டிவைத்த பாவி அய்யன் போல ஜெயமோகனை நாற்காலியுடன் கட்டிப்போட்டு சர்க்கரைப்பொங்கல் ஊட்டும் உத்தேசம் உண்டு.

  அரங்கசாமி கசியவிட்ட ராணுவ ரகசியம் உண்மைதான்.காலை 11 முதல் 2 வரை மதிய உணவுடன் கூடிய சந்திப்பு கோவை பந்தயச்சாலையிலுள்ள அன்னலட்சுமி உணவகத்தின் முதல் தளத்தில் உள்ள அரங்கில் நடைபெறும்.மாலை 6.00 மணிக்கு வாசகர் சந்திப்பு,வடகோவை சென்ட்ரல் திரையரங்கம் அருகிலுள்ள குஜராத் சமாஜத்தில் நடைபெறும்.இது 95% உறுதியாக்கப்பட்ட நிகழ்ச்சிநிரல்.மேற்குறிப்பிட்ட நேரங்களுக்கு முன்னும் பின்னும் கூட ஜெயமோகன் இடையறாது பேசிக்கொண்டிருப்பார் என்பது வெள்ளிடைமலை.

  பின்குறிப்பு : பதட்டமடைகிறபோது தன் மீசையை தானே கடிப்பது ஜெயமோகனின் பூர்வாசிரமப் பழக்கம்.அதற்கான சாத்தியக்கூறுகள் மழிக்கப்பட்டுவிட்ட நிலையில் மாற்று ஏற்பாடாக ஜெயமோகன் என்ன செய்திருக்கிறார் என்று அரங்கில் காண ஆவல்.

 14. ஜெயமோகன்

  ஜெ.எஸ்.மில்,வால்ட்டேர்,ரஸ்ஸல் போன்ற மேதைகள் பலருக்கும் நகம் கடிக்கும் வழக்கம் உண்டு. மேதைகள் அப்படி பலதையும் செய்வார்கள் முத்தையா

 15. Marabin Maindan

  ஜெ.யின் பத்து விரல்களில் உள்ள நகங்களின் இருப்புகள் விரைவில் தீரும் என்பதால் வாசகர்களும் நண்பர்களும் பாதுகாப்புக் காரணங்களுக்காக கையுறை
  அணிந்து வரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

 16. Marabin Maindan

  நிகழ்ச்சி உறுதியாகிவிட்டது.விழா அரங்கில் ஒரு சிறு மாற்றம்.கோவை தேவாங்கர் பள்ளி அருகே (அர்ச்சனா த்ர்சனா திரையரங்குக்கு பக்கம்)உள்ள
  சன்மார்க்க சங்கக் கட்டிடத்தில் 23.01.2010 சனி மாலை 5.30 மணிக்கு ஜெயமோகன் வாசகர் சந்திப்பு நடைபெறும்.இது ராஜாங்க அறிவிப்பு.

 17. ஜெயமோகன்

  are u sure? no doubt? can we lock?

 18. Marabin Maindan

  நீங்கள் குரோர்பதி ஜெயமோகன்.இந்தக் கேள்விகள் உங்களுக்குக் கட்டுப்படியாகும்!!
  அரங்கிற்கு வாடகை கட்டிய ரசீதை மீண்டும் சரிபார்த்துவிட்டேன்.உறுதி.உறுதி.உறுதி.எனவே கம்ப்யூட்டர்ஜீ…லாக் செய்யலாம்

 19. saran76

  அன்புள்ள ஜெயமோகன்,
  >>>> ஜனவரி 27 முதல் பிப்ரவரி 5 வரை நான் மலேசியா ,சிங்கப்பூருக்கு ஒரு பயணம் செய்யவிருக்கிறேன்.>>>
  சிங்கப்பூரில் என்ன என்ன நிகழ்ச்சிகளில் பங்குகொள்கிறீர்கள். உங்கள் நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள, சந்திக்க ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருக்கிறோம்… எவ்வளவு நாள்கள் சிங்கப்பூரில் இருப்பீர்கள்?

  சரவணன்
  சிங்கப்பூர்

 20. hemikrish

  பெங்களூர் க்கு எப்போ சார் வருவீங்க? :(

Comments have been disabled.