வண்ணக்கடல் வாசிப்பரங்கம்

நண்பர்களே,

முன்பு நடந்த காரைக்குடி விஷ்ணுபுரம் முகாம் வெற்றிகரமாக நடைபெற்றது. அதுவரை அறியப் படதாத வாசிப்புகள் புலனாயின. விஷ்ணுபுரத்தை மேலும் நெருங்குவதற்கு அது உதவிகரமாக அமைந்தது .

அதே போல 2 நாட்கள் முகாம் ஒன்றை வண்ணக்கடலுக்கு நடத்துவது அவசியம் என எண்ணுகிறோம் , கோவை அருகே உள்ள அட்டப்பாடி “சத் தர்சன்” அமைதிப் பள்ளத்தாக்கில் சிறுவாணி நதிக்கரையில் ஒரு வனத்தில் அழகிய விருந்தினர் இல்லம் ஒன்றில் 2014 செப்டம்பர் 13,14 சனி ஞாயிறு ஆகிய தேதிகளில் நடைபெறும். சனி காலை 9 க்குத் துவங்கி ஞாயிறு மாலை 6 க்கு நிறைவு பெறும். இடவசதியின்மை காரணமாக குழுமம் வாயிலாக ஏற்கனே பதிந்தவர்கள் போக குறைந்த அளவில் தான் வாசகர்கள் இதில் பங்கு பெற முடியும். ஜெயமோகனும் வருகை தர ஒப்புக் கொண்டுள்ளார்.

கலந்து கொள்வோர் அனைவரும் வண்ணக் கடல் மீது தங்கள் நோக்கில் ஒரு கட்டுரை எழுதி அனுப்ப வேண்டும். அத்துடன் அதன் குறுக்கிய வடிவமும் இணைக்கப்படவேண்டும்.  குறுக்கிய வடிவத்தை முன்பே பங்கேற்பாளர்களுடன் பகிர்ந்து கொள்ளப்படும். கட்டுரையின் சாராம்சத்தை அரங்கில் கூற வேண்டும் , பின் அதன் மீதான விவாதம் நடை பெறும். வருவதற்கு முன்னரே பிறர் அளிக்கும் கட்டுரைகளின் சுருக்கு வடிவத்தை வாசித்து விட்டு வந்து விடவேண்டும்.

முகாமின் நோக்கம் ஒருவர் சாதாரணமாக தொட இயலாத இடத்தை ஒரு கூட்டு வாசிப்பின் மூலமும் உரையாடலின் மூலமும் தொட்டு விடுவது, வாசிக்கத் தவறிய இடங்களை கண்டு கொள்வது, இதில் கூறப்பட்டுள்ள தொன்மம், தத்துவம் மற்றும் வரலாறு போன்றவற்றின் பின்னணியை பகிர்ந்து கொள்வது, அது போக இதன் மீதான கற்பனை மற்றும் கவித்துவ வாசிப்பு . அரங்கில் கலந்து கொள்ளாதவர்களும் கட்டுரைகளை அனுப்பலாம்.

வர விரும்புபவர்கள் தங்கள் சுய விபரங்கள் அடங்கிய கடிதத்துடன் என்னைத் தனி மடலில் தொடர்புகொள்க. தொலை பேசியிலும் அழைக்கலாம். இது நீங்கள் முதல் முறை கலந்து கொள்ளும் இத்தகைய முகாம் தானா அலது ஏற்கனவே பங்கேற்றுள்ளீர்களா என்பதையையும் தவறாமல் குறிப்பிடுக.

விதிகள் வழக்கம் போல, பதிந்து விட்டு வர இயலவில்லை என்றால் முன்பே தகவல் தெரிவித்து விடுங்கள். இருப்பிடம் இலவசம், உணவுக்கு மட்டும் நாம் பணம் செலுத்த வேண்டும், குறித்த தேதிக்குள் கட்டுரை அளிப்பபவர்கள் மட்டுமே வருகை தரப் போகிறவர்கள் எனக் கொள்ளப் படும்.

உங்கள் பதிவு ஏற்கப்பட்டால் உங்களுக்கு தனி மடலில் அழைப்பு அனுப்பப்படும், அதில் பிற விபரங்கள் இருக்கும்.

அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம், சந்திக்க மகிழ்ச்சியுடன் காத்திருக்கிறோம்.

கிருஷ்ணன்,
ஈரோடு .
விஷ்ணுபுரம் வாசகர் வட்டம்.

மின்னஞ்சல் : salyan.krishnan@gmail.com

பேச : 98659 16970.

முந்தைய கட்டுரைஆசுரம்
அடுத்த கட்டுரைஇமயச்சாரல் – 21