கடிதங்கள்

பெருமதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

ஆழ்ந்த மன எழுச்சியுடன் இக்கடிதத்தை எழுதுகிறேன். தற்செயலாக வாசிக்க நேர்ந்த இக்கட்டுரையில் கிட்டத்தட்ட ஏசுவையே தரிசித்தேன் என்று சொல்லலாம். எழுந்து வாருங்கள் வெளியே என்று பாப்பரசரை மானுவேல் அழைக்கும் தருணம் ஒரு ஜென் தருணம் போல் உள்ளது. இக்கணம் என் வாழ்விலும் ஒரு மகத்தான தருணம்.

பணிவன்புடன்,
அறிவுடை நம்பி.

அன்புள்ள அறிவுடைநம்பி,

ஆம், ஏசுவை அற்புதமாகக் காட்டும் முக்கியமான நாவல்களில் ஒன்று அது. கிட்டத்தட்ட மறக்கப்பட்டுவிட்ட நூல்

ஜெ

அன்புள்ள ஜெயமோகன்

தங்கள் இலக்கிய கட்டுரைகள் மூலம் “மீசான் கற்கள்” மற்றும் ” விபுதிபூஷன் அவர்களின் ” காட்டில் நடந்த கதை” வாசித்தேன்.

குறிப்பாக விபுதிபூஷன் கதைக்களங்களும் உரையாடலும் மிகவும் புதிதாக இருந்தது – புனத்தில் மற்றும் விபுதிபூஷன் இருவருக்கும் இப்படி விஷயங்களை எழுத மிகப் பெரிய வரமாக இளைப்பாறும் சூழ்நிலை அமைந்திருக்கும் என்று தோன்றுகிறது.

நன்றி
மணிகண்டன்

அன்புள்ள மணிகண்டன்

விபூதிபூஷன் இந்திய இலக்கிய வரலாற்றில் ஒளிமிக்க விண்மீன்களில் ஒருவர். மொழி, சூழல், வாழ்க்கை நோக்கு அனைத்தும் மாறிவிட்ட இன்றும் கூட அவரது ஒளி குறையவில்லை

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 3
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 4