காமரூபிணி: மேலும் கடிதங்கள்

வணக்கம் ஜெயமோகன்

இன்று உங்களது காமரூபிணி கதை படித்தேன்.

தமிழ் உரைநடையின் ஆகப்பெரிய சாத்தியங்களை உங்கள் மொழி எட்டிப் பிடித்திருக்கிறது. பல விஷயங்கள் காடு மற்றும் கொற்றவையின் வரிகளை நினைவூட்டினாலும் யட்சியின் வசீகரத்தை தன்னில் வரித்துக்கொண்டட மொழியில் இக்கதை ஒரு நீள் கவிதை ஆகிறது.

தூரன் குணா.

 ****************

அன்புள்ள ஜெயமோகன்

காமரூபினி படித்தேன். உங்கள் வழக்கமான ஆற்றொழுக்கான நடையில் சிறுசிறு விவரங்களைக்கூட விட்டுவிடாமல் பதிவு செய்யப்பட்ட சிறப்பான கதை. குமரி மண்ணின் படைப்பாளிகள் எவருக்கும் தப்ப முடியாதொரு முடிச்சாக கண்டும் கேட்டும் வளர்ந்த மந்திரவாதக் கதைச்சூழலை சொல்லலாம். வெறும் கற்பனையில் முகிழ்த்த மாயாஜாலக் கதைகளாக அவை இருப்பதில்லை. நிகழ்கால வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்ததாக, அதேசமயம் முற்காலத்தின் சுவடுகளாகவும்  அவை நம்முன் காட்சியளிக்கிறது. குமாரசெல்வாவின் உக்கிலு, பொன்னீலனின் படைப்புகள் போன்றவற்றிலும் சுந்தரராமசாமியின் படைப்புகளிலும் கூட இந்தக் கதைச்சூழலை காண முடிந்திருக்கிறது.

சிறுவயதில் என் பாட்டி கூறி யட்சிகளின் கதை கேட்டிருக்கிறேன். நீலியின் கதை கூறும்போது தன் அம்மாச்சன் தான் அந்த மந்திரவாதியென்று அவர் கூறக் கேட்டிருந்தேன். பிற்காலத்தில் மீனவப் பெண்மணியொருவர் நீலியின் கதையை தன் மூப்பாட்டனோடு தொடர்புறுத்தி கூறக் கேட்டேன். பின்னும் வேறொரு கிழவர் தன் தகப்பனாரோடு தொடர்பு படுத்தி கூறினார்.  வெவ்வேறு சாதி மதப் பின்னணி கொண்ட இவர்கள் தங்களோடு அடையாளப் படுத்திக் கொண்டு நீலியின் கதையை வெவ்வேறு தளங்களில் கூறக்கேட்டபோது கற்பனையின் சிறகுகள் மட்டுமல்ல சமூகத்தின் அடையாளமாகவும் கலாச்சாரவேர்களில் ஊறிப்போனதாகவும் இந்த பாரம்பரியக் கதைகளை நாம் அடையாளம் காணமுடிகிறது. அது போன்ற கதைகளை பின்னணியாகக் கொண்டு, பல கதைகளை தொடுத்துக்கொண்டு சென்றிருக்கும் காமரூபினி தரும் நுட்பமான கதானுபவம் மிகவும் ரசமானது.

காமரூபினி என்ற இந்த நீண்ட சிறுகதையின் இடையே இரண்டுவரிகளில் நீங்கள் குறிப்பிட்டுள்ள  இடலக்காட்டு நீலி கதையை நான் கேட்டிருந்த வடிவங்களை அடியொற்றி முன்னொரு சமயம் சிறு தொடராக ஒரு வலைப்பதிவில் எழுதியிருந்தேன்.

http://ava-1.blogspot.com/2006/09/blog-post.html
http://ava-1.blogspot.com/2006/09/1.html

*
தளத்தில் வெளியிட்டுள்ள ஜெ.சைதன்யாவின் படங்கள் அருமை. நாம் அடிக்கடி காணும் இடங்களைக்கூட மூன்றாவது கண் ;) வழியாக காணும்போது புதுசாகத்தான் இருக்கிறது.
அன்புடன்

۞ சிந்தாநதி
http://valai.blogspirit.com/
☆ எண்ணச்சுழலில் எதிர்நீச்சலிட்ட எழுத்துப்படிமங்கள்…!
☯ Views, News, Thoughts and Writings in Tamil.

*
தமிழ்.கணிமை.காம்
http://tamil.kanimai.com
இது திரட்டிகளின் திரட்டு, தமிழ்ச் செய்திகளின் தொகுப்பு
*
=

***************

அன்பிற்கினிய ஜெ சார்

உயிர்ம்மையில் தங்களின் காமரூபிணி சிறுகதையை ஒரே மூச்சில் வாசித்து  முடித்தேன்.பிறகு உணர்ந்து கொண்டேன். தாங்கள் தான் நிச்சயமாக தமிழின் ஆகசிறந்த எழுத்தாளர் என்று. இதில் எந்த ஒரு சந்தேகமும் எனக்கு இல்லை.
 
என் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை உங்களிடம் சொல்கிறேன். இது எதனால் நடந்தது என்று தாங்களால் மட்டுமே விளக்கமுடியும் என்று நினைக்கிறேன். தயவு செய்து இந்த சம்பவங்களை எழுத்தில் கொண்டுவரவேண்டாம். அப்படியே கொண்டுவந்தாலும் எனது உண்மையான பெயரையும் ஊரையும் மாற்றிவிடவும்.

இனி அந்த சம்பவம்.

ஒரு 6 வருடங்களுக்கு முன்னாள் எனது மனநலம் பாதிக்கப்பட்டிருந்த சமயம் எனது அப்பா ஒரு ஐயரிடம் கூட்டிச்சென்றார். ஐயர் திருநீறு மந்திரித்து பார்த்து விட்டு எனக்கு பேய் குணம் இருப்பதாகவும் சோட்டானிக்கரை பகவதியம்மன் கோவிலுக்கு  கூட்டிசென்றால் சரியாகிவிடும் என்று கூறினார்.

மேலும் அந்த ஐயரின் துணையுடன் ஒரு வாடகை காரில் சொட்டானிக்கறைக்கு ஒரு மாலை வேளையில் சென்று இறங்கினோம். அங்கு தெவஸ்த்தாந அறை எடுத்து குளித்து முடித்து கோவிலுக்குள் சென்றோம். முதலில் மேல்காவில் பகவதியை வணங்கிவிட்டு ஐயரின் அறிவுரையின் பேரில் கீழ்காவு காளியை வணங்க சென்றோம். சாமியை வணங்கியதும் ஐயரின் சொற்படி காளியின் முன்னாள் நான் அமர வைக்கப்பட்டேன். நான் அமர்ந்து காளியை நோக்கிக்கொண்டிருந்த சமயம் எனது பின்னால் ஒரு வயதான பக்தை காளியை நோக்கி மலையாளத்தில் பாடினர். அப்பாடலும் குராலும் மிகவும் அருமையானதாக இருந்தது.அப்போது திடீரென் என் தொப்புளுக்கும் கீழ் எதோ ஒன்று என்னை முன்னும் பின்னும் ஆட்டியபடியே மேலே வந்தது. அது தலைக்கு வந்ததும் என்தலை வலது புறமாக சுற்ற ஆரம்பித்து விட்டது. நானும் பேயாடுபவர்களை போல என்தலையை சுழற்றி ஆடினேன். எனது தலையின் வலது புறம் படீர் என்று ஒரு சத்தம் கேட்டது. பின்பு நான் கீழே சரிந்து விட்டேன்.நான் சகஜ நிலைக்கு திரும்பினேன்.

மீண்டும் மேல்காவில் பகவதி முன்பு நான் நிறுத்தப்பட்ட சமயம் கதவுசாத்தபட்டு உள் பூஜை நடந்து கொண்டிருந்தது. ஒரு கால் மாநிநேரம் பொறுத்து நடைதிராக்கப்பட்டது. அதுவரை ஒற்றை மேளம் மட்டும் அடிக்கபட்டுகொண்டிருந்தது. நானும் முன்னும் பின்னும் ஆடிகொண்டிருந்தேன். நடை திறந்ததும் எனது வாயும் திறந்து கொண்னடது. திறந்த வாயுடன் நான் பகவதியை நோக்கி முன்னேறினேன். இதைக்கன்ண்ட மேல்சாந்தி என்னை வெளியே கொண்டுபோகும்படி கூறினார். பிறகு கீழ்காவில்  குருதிபூஜையில் நிறுத்திவைக்கப்பட்டேன்.   அப்போது பூஜையி நடைபெற்ற சமயம் செண்டாவின் இசையில் நான் எனது தலையை சுழற்றி ஆடினேன். என்னால் அப்படி செய்யாமல் இருக்க முடியவில்லை.பூஜை முடிந்ததும் நான் சகஜ நிலைக்கு திரும்பினேன். அடுத்தநாள் காலை பூஜையில் கொடுக்கப்படும் நெய்யை சாப்பிட்டுவிட்டு கோவிலிலேயே தங்கிவிட்டோம். மறுநாள் ஊருக்கு திரும்பும் பொழுது மேல்சாந்தி கொடுத்த நெய்யுடன் வீட்டிற்க்கு திரும்பினோம். அந்த நெய் டப்பா எனது படுகையின் அறிகில் இருந்தது. இரவு தூங்கும் பொழுது நான் சுயமைதுனம் செய்ய ஆரம்பித்தேன். அப்பொழுது என் கை தானாகவே நெய் டப்பாவை நோக்கி சென்று நெய்யை எடுத்து எனது லிங்கத்தின் மேல் பூசியது. பின்பு நான் சுயமைதுனம் செய்துமுடித்தேன். செய்யும்பொழுது நான் பகவதியையே நினைத்துக்கொண்டேன். இவ்வாறாகவே அந்த நெய் டப்பா காலியானது.

 நான் பகவத்தியை திருமணம் செய்ய முடிவெடுத்து நானாக சோட்டானிக்கரை சென்றேன். அங்கு வரும் பெண் பக்த்தைகள் அனைவரும்  எனக்கு பகவத்தியை போன்றே தோற்றம் தந்தனர்.பின்பு நான் கொஞ்சம் தெளிவு பெற்று ஊருக்கு திரும்பினேன்.கொஞ்சநாள் அமைதியாக இருந்தேன். பின் எங்கள் ஊர் செல்லும் வழியில் உள்ள ஒரு வேப்ப மரத்தின் மீது காமம் கொள்ள ஆரம்பித்தேன். நான் வேலைக்கு சென்று வரும் வழியில் உள்ள அந்த மரத்தை கட்டிபிடிப்பதும் அதன் கீழ் சுயமைதுனம் செய்வதும் எனது வாடிக்கையாக இருந்து வந்தது .

இப்போதும் நான் அடிக்கடி சோட்டானிக்கரை செல்வது உண்டு.அங்கு வரும் பெண்களில் பலர் எனக்கு பகவதியாகவே தோன்றுகிறார்கள். நான் உங்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் போது இது பற்றி மிக விரிவாக சொல்கிறேன்.

தயவு கூர்ந்து மேற்சொன்ன சம்பவங்களுக்கு என்ன அர்த்தம் என்று விரிவாகவும் ஆழமாகவும் பதில் அனுப்புங்களேன்.

இதை தங்களின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய விரும்பினால் எனது பெயரையும் முகவரியையும்  போடவேண்டாம்.

அன்புடன்
உங்கள் வாசகன்


xxx

கரூர்.                    

********

அன்புள்ள ஜெயமோகன்

காமரூபிணி படித்தேன். மனதை குழப்பி பலவகையான எண்ணங்களுக்கும் புராதனமான கனவுகளுக்கும் கொண்டு சென்ற விசித்திரமான கதை. கதை அல்ல கதைக் கொத்து. கதைகளை வைத்து எழுதபப்ட்ட கவிதை. மனித உடலிலும் இயர்கையிலும் நின்று எரியும் ஐ அல்லது பசியை அற்புதமாகச் சொல்லியிருக்கிறது இந்தக் கதை. எல்லாவகையான பசியையும் சொல்கிறது. காமம் மட்டுமல்ல குரோதமும் கூட ஒருவகை பசிதான் என்று சொல்கிறது. அற்புதமான கதை. மீன்டும் வாழ்த்துக்கள்
அருண்
சென்னை

***************

பிரியமுள்ள ஜெயமோகன் சார்,

உங்கள் வாசகி. காமரூபிணி படித்தேன். அதில் நீங்கள் குறிப்பிடும் காமவசப்பட்ட நிலை ஒரு நோய். நிம்போமேனியா என்று அதற்குப் பெயர். ஆனால் உண்மையில் அந்த நோய் அபூர்வத்திலும் அபூர்வம். கிளிடோரிஸில் வரும் கான்சர் போன்ற சிக்கல்களினால்தான் அது உருவாகிறது. [தமிழில் இது கந்து என்று சொல்லபப்டுகிறது] மிதமிஞ்சிய  Hormone   ஊற்றினாலும் கந்து வளர்ச்சி உருவாகலாம். ஆனால் இந்தியப்பெண்களில் மிக மிக அபூர்வமாகவே நுண்ணோக்கியால் பார்க்கக் கூடிய அளவில் கந்து காணப்படுகிறது. ஆப்ரிக்க பெண்களில் சற்ரே ப்ரிதாக இருக்கும். நம்முடைய காம நூல்களும் காம எழுத்துக்களும் மிகவும் விரிவாக இந்த உறுப்பைப்பற்றியும் காமநோயைப்பற்றியும் பேசுவது அவற்றை உருவாக்கிய ஆண்களின் மிதமிஞ்சிய அச்சத்தைப்பற்றி மட்டுமெ சொல்கிறது. இந்தியப்பெண்களில் கந்து தன் காம உறுப்பு என்று அறிந்த பெண்களும் சரி, ஆண்களும் சரி தமிழ்நாட்டில் மிகவும் குறைவுதான். பெண்களில் அனேகமாக யாருமே சுய இன்பத்துக்கு அதைக் கையாள்வதும் இல்லை. இப்படிப்பட்ட ‘இலக்கிய முக்கியத்துவம்’ அதற்கு எப்படி வந்தது என்று பார்க்கும்போதுதான் ஆண்களின் பயம் புரிகிறது

தங்கள்

XX

காமரூபிணி

காமரூபிணி-கடிதங்கள்

முந்தைய கட்டுரைஇந்துத்துவம்:ஒரு கேள்வி
அடுத்த கட்டுரைகுறளும் கிறித்தவமும்