அன்புடன் நண்பர் ஜெயமோகனுக்கு
பின்வரும் அறிவிப்பைத் தங்கள் இணையத்தில் வெளியிட வேண்டுகிறேன்
அ.ராமசாமி
நாள் : 22-12-09
அன்புடையீர்
வணக்கம்.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் “தொல்காப்பியக் கவிதையியல் கோட்பாடும் பிந்திய இலக்கியங்களில் அதன் தாக்கமும்” என்னும் தலைப்பில் 10 நாள் பயிலரங்கம் நடத்துவதற்கு நிதியுதவி செய்துள்ளதுள்ளது. இப்பயிலரங்கினை 2010, மார்ச்,1 முதல் 10 தேதி வரை நடத்துவது எனத் திட்டமிடப்பட்டுள்ளது.
செவ்வியல் வரையறைகளுக்கு ஏற்பக் கவிதை இலக்கணத்தை எழுதிய தொல்காப்பியத்தின் நீட்சியைப் பிந்தையப் படைப்பாளி களிடமும் காணமுடிகிறது. பக்தி, சிற்றிலக்கியங்கள் மட்டுமல்லாது நவீனக் கவிதைகளுக்கும் பொருந்தக் கூடிய இலக்கிய கோட்பாடு களைத் தொல்காப்பியரின் வரையறைகளுக்குள் காணமுடியும். இன்று எழுதப்படும் பல்வேறு வகையான நவீனக்கவிதைகளையும் தொல்காப்பியத்தின் வரையறைகளைக் கொண்டு வாசிக்கும் வாசிப்பு முறையை உருவாக்குவது நவீன தமிழ்க் கவிதைக்கான மரபுத் தொடர்ச்சியை உருவாக்கும் முயற்சி. இப்புரிதலோடும் நோக்கத்தோடும் திட்டமிடப்பட்டு நடத்தப்படவுள்ள இப்பயிலரங்கில் கல்வித் துறைச் சார்ந்த மாணாக்கர்களும், கவிதைத் தளத்தில் இயங்கக்கூடிய படைப்பாளிகளும் பங்கேற்பாளர்களாக அழைக்கப்படவுள்ளனர்.
இப்பயிலரங்கில் பங்கேற்கும் பங்கேற்பாளர்கள் பத்துநாட்களும் காலை 10 மணி முதல் மாலை 05 மணி வரை நடைபெறும் அமர்வுகளில் பங்கேற்க வேண்டும். அவர்களுக்குச் செம்மொழி நிறுவன விதிப்படி இரண்டாம் வகுப்புப் பயணக்கட்டணம் வழங்கப்படும். மதிய உணவும் தேநீரும் ஏற்பாடு செய்யப்படும். பயிலரங்கின் மையப்பொருளோடு தொடர்புடைய நூல்கள் வழங்கப்படும். நாட்படியாக நாளொன்றுக்கு ரூ.200/ வழங்கப்படும். வெளியூரிலிருந்து வருபவர்கள் தங்குமிடம், காலை, இரவு உணவு போன்றவற்றினைத் தங்கள் பொறுப்பில் ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். பயிலரங்கின் நிறைவு நாளில் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்படும்.
கடிதம் வழியாகவோ, இணையம் வழியாகவோ பங்கேற்பு விருப்பத்தைத் தெரிவிக்கலாம். விருப்பம் தெரிவித்துத் தகவல் வந்து சேரக் கடைசி நாள் : 2010, பிப்ரவரி 10
அனுப்ப வேண்டிய முகவரி:
பேரா. அ.ராமசாமி
செம்மொழிப் பயிலரங்க ஒருங்கிணைப்பாளர்
தமிழியல் துறை
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்
திருநெல்வேலி -627012
அலைபேசி: 9487999603
ramasamy_ [email protected] / [email protected]