என்.எச்.47- தக்கலை

தேசிய நெடுஞ்சாலை தக்கலையை நெருங்கும்போது இன்னும் பசுமை கொள்கிறது. விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படங்களைப் பார்க்கும்போது ஆரல்வாய்மொழியை ஒட்டிச் செல்லும் மேற்குமலைகளின் சுவருக்கு அப்பால் தமிழ்நாடு இளம் தவிட்டு நிறத்திலும் இப்பால் குமரிமாவட்டம் அடர்பச்சை நிறத்திலும் துல்லியமாக பிரிக்கப்பட்டிருப்பதைக் கண்டு வியப்பு ஏற்படுகிறது. அதை ஒவ்வொரு குமரிமாவட்டத்தினரும் உணர்ந்திருப்பார்கள். தமிழ்நாட்டில் இருந்து ஆரல்வாய்மொழிக் கணவாயை நெருங்கும்போதே ஈரம் நிறைந்த குளிர்ந்த காற்று வந்து முகத்திலறைவதை உணர முடியும்.

ஆனால் குமரிமாவட்டத்தினருக்கு இந்த மாவட்டத்துக்குள்ளேயே ஒர் எல்லைப்பிரிவினை உண்டு. தோட்டிகோடு -சுங்கான்கடையில் ஒரு மலைக்கணவாய் வருகிறது. அதற்கு தெற்கே உள்ள விளவங்கோடு கல்குளம் பகுதிகளில் பெய்யும் மழையில் முக்கால்பங்குதான் இப்பால் உள்ள தோவாளை அகஸ்தீஸ்வரம் பகுதிகளில் பெய்யும். வெயிலில் வந்து தோட்டிகொட்டை தாண்டும்போது சாரலுக்குள் நுழையும் அனுபவம் அடிக்கடி நிகழும். சிலசமயம் மழையின் அந்த எல்லைக்கோட்டையே கண்ணால் காண முடியும்.

வேளிமலை ஒரு கிண்ணம்போல தென்மேற்கு பருவக்காற்றை தடுத்து நீரை நிறைக்கிறது இப்பகுதியில். வேளிமலையின் கீழே எப்போதும் பசுமை கொப்பளிக்கும் வயல்வெளிகளை பார்ப்பது கண் நிறையும் அனுபவம். கண் ஆத்மாவின் வாசல்.

தக்கலை அருகே ஒரு நீர்நிலை

சாலையோர இயக்கி

ஆயிரப்பறை கண்டம். தக்கலை. மகாராஜாவால் அளிக்கபப்ட்ட வயல் ஒரு ப்றை என்பது நூறு மரக்கால்

மகாராஜா காலத்து வாய்க்கால். தக்கலை. இப்போது ஆறுபோல ஆகிவிட்டது. தெக்கே புதுக்கால் என்று பெயர்

குளங்கள். மலைநீரை சேமிக்க மலையைச்சுற்றி குளங்கள் வெட்டுவது அக்கால மன்னர்கள் வழக்கம். தூர்த்து பிளாட் போடுவது ஜனநாயகம்

 புலியூர்குறிச்சி அருகே பிரியும் கிராமச்சாலை

பத்மநாபபுரம் தாண்டிச்சென்று முடிகிறது வேளிமலை. ஒரு காட்சி

வேளிர்மலை முருகன் கோயில் அல்லது குமாரகோயில் செல்லும் பாதை

தோட்டிகொடு அருகே மலை. வேளிமலையின் குழந்தைகளில் ஒன்று

 வேளிமலையும் அதன் ஊற்றுநீர் பெருகும் ஒரு குளமும்

மூலம்திருநாள் சத்திரம். மகாராஜா மூலம் திருநாள் தன் ராமேச்வர யாத்திரையின் நிறைவாக குளங்களையும் சத்திரங்களையும் வழியோரமாகக் கட்டினார். நாகர்கோயில் தக்கலை வழியோரமாக மூன்று சத்திரங்கள் உள்லன. ஒன்று கோயிலாக. மீதி இரண்டும் தனியார் நிலங்களில். இடிந்த நிலையில்

வரலாற்று சிறப்பு மிக்க உதயகிரி கோட்டைக்குச் செல்லும் வழி.

கடந்த சில வருடங்களாக போக்குவரத்து பெருகி இச்சாலையில் ஒருகணம்கூட வாகன ஓட்டம் நிலைப்பதில்லை

புகைப்படங்கள் ஜெ.சைதன்யா

என்.எச்.47 என் பாதை

ஒவ்வொருநாளும்

முந்தைய கட்டுரைவைரமுத்து:ஆளுமைச்சித்திரம்
அடுத்த கட்டுரைஒவ்வொரு நாளும்:கடிதங்கள்