என்.எச்.47 என் பாதை

பார்வதிபுரம் முதல் தக்கலை வரையிலான என்னுடைய பயணம் என் வாழ்க்கையின் இன்பங்களில் முக்கியமானது. தேசிய நெடுஞ்சாலை நாற்பத்தேழு கன்யாகுமரி முதல் திருவனந்தபுரம் வழியாகச் செல்வது. என் இளமைநாட்களில் இப்பாதை முழுக்கமுழுக்க இருபக்கமும் வயலும் மலையுமாக இருந்தது. மெல்ல மெல்ல கட்டிடங்கள் வந்து அனைத்தையும் மறைக்க ஆரம்பித்திருக்கின்றன.

 அதிலும் கடந்த ஐந்துவருடங்களில் சாலையோரத்தின் பாதிப்பங்கு மறைந்து விட்டது. ஆனாலும் இன்னும் பசுமையும் அழகும் கொண்ட பகுதிகள் எஞ்சியிருக்கின்றன. சாலையிலிருந்து அரைகிலோமீட்டர் விலக முடிந்தால் பேரழகான இடங்கள் பல விரிந்துகிடக்கின்றன. பார்வதிபுரத்தின் பஸ்நிலையத்தில் இருந்து பார்த்தாலே வேளிமலையின் முகம் தெரிய ஆரம்பிக்கும். பசுமை மண்டிய வயல்களுக்கு அப்பால்.

வேளிமலை- முதல் தரிசனம்.பார்வதிபுரம்

 

பார்வதிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து

****

ஸேவியர் கல்லூரி குன்று

ஸேவியர் கல்லூரி குன்று.சாலையில் இருந்து

குதிரை பாய்ஞ்சான்குளம். பிரிட்டிஷ் வீரன் ஒருவன் குதிரையுடன் பாய்ந்ததாக கதை. சோழர் கால ஏரி

 வேளிமலை,  அல்லது வேளிர் மலை வயல்களுக்கு அப்பால். அங்கே ஆய்மன்னர்களின் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன

 

 சுங்கான்கடை மலை. இதுவே நாஞ்சில்நாட்டுக்கும் வேணாட்டுக்கும் எல்லை. முன்னால் இங்கே சுங்கம் வசூலிக்கபப்ட்டது

 

வயல்வெளி தோட்டிகோடு

 

காரவிளை


 

வயல்வெளி தோட்டிகோடு

காரவிளை சாலை ஓரம் ஒரு குளம்

காரவிளையில் வேளிமலை

புகைப்படங்கள் ஜெ.சைதன்யா

முந்தைய கட்டுரைஉயிர் எழுத்து:ராஜமார்த்தாண்டன் சிறப்பிதழ்
அடுத்த கட்டுரைஆதிமூலம் படைப்புகளைப் பாதுகாக்க…