ஜெயமோகனின் பத்து நூல்கள்
நாள் 19-12-2009 சனிக்கிழமை
நேரம் மாலை 5 30
இடம் தேவநேயப்பாவாணர் மாவட்டமைய நூலகம் [LLA Building ]
735 அண்ணா சாலை சென்னை 2
வரவேற்புரை: மனுஷ்யபுத்திரன் உயிர்மைபதிப்பகம்
தலைமை
டாக்டர் வி. ஜீவானந்தம் [பசுமைவாதி, ஈரோடு]
சிறப்பு விருந்தினர் உரை
திரு விவேக் ஷன்பேக் கன்னட எழுத்தாளர்
திரு கல்பற்றா நாராயணன் மலையாளக் கவிஞர் விமரிசகர்
கருத்துரைகள்
இந்திராபார்த்தசாரதி ‘ புதியகாலம்’ சிலசமகால எழுத்தாளர்கள்
மதன் மேற்குச்சாளரம் சில இலக்கிய நூல்கள்
யுவன் சந்திரசேகர் பண்படுதல் பண்பாட்டு விவாதங்கள்
வசந்தபாலன் லோகி நினைவுகள் மதிப்பீடுகள்
பர்வீன்சுல்தானா முன்சுவடுகள், சில வாழ்க்கைவரலாறுகள்
செல்வபுவியரசன் சாட்சிமொழி -சில அரசியல் குறிப்புகள்
ஏற்புரை
ஜெயமோகன்
10 நூல்களின் மொத்தவிலை 1180 அரங்கில் தள்ளுபடி விலை ரூ 1000
உயிர்மைபதிப்பகம்
11-29 சுப்பிரமணியம் தெரு
அபிராமபுரம் சென்னை 18
தொடர்புக்கு:
[email protected]
www.uyirmmai.com
தொலைபேசி 044 24993448
ஜெயமோகன் நூல்வெளியீடு,முகங்கள்
‘சிலுவையின் பெயரால்’ கிறித்தவம் குறித்து..
‘புதியகாலம்’ சில சமகால எழுத்தாளர்கள்
‘பண்படுதல்’ பண்பாட்டு விவாதங்கள்
2 comments
ஜெயமோகன்
December 17, 2009 at 6:55 am (UTC 5.5) Link to this comment
அன்புள்ள எழுத்தாளர் திரு.ஜெயமோகன் அவர்களுக்கு .,
திரு. விவேக் ஷன்பேக் அவர்களின் வேங்கைச்சவாரி படித்தேன். லாபம் ஒன்றே குறிக்கோள் என்ற நோக்குடன்
இயங்கும் எந்த ஒரு அமைப்பிற்கும் மற்றதெல்லாம் இரண்டாம் பட்சம் தான் என்பதை மிக அருமையாக
சுட்டிக்காட்டிய சிறுகதை. எந்த மண்ணில் இயங்குகிறதோ அந்த மண்ணின் சட்ட திட்டங்களுக்கு புறம்பாக இல்லாத
வகையில், நிர்வாகம் வகுத்த நெறி முறைகளே வேலை செய்வோரின் செயல்களை வழிநடத்துகின்றன என்பதையும்,
உன்மனதுக்கும் என்மனதுக்கும் சரி என்று படுவதெல்லாம் ஒரு அளவுக்கே அங்கு எடுபடும் என்ற உண்மையை
தெளிவாக சொல்லிய படைப்பு. சவாரி செய்யவும் மனமில்லாமல், இறங்கினால் வரும் விளைவுகளை சந்திக்கவும்
முடியாமல் இருதலைக்கொள்ளி எறும்பாய் தவிக்கும் மனநிலையை ஆசிரியர் வெகு அழகாய் சித்தரித்துள்ளார்.
வேங்கைச்சவாரி என்ற தலைப்பிலேயே முழுக்கதைம் உள்ளது.!
கதையில் சித்தரிதிருக்கும் சூழல் லாப நோக்குடன் இயங்கும் பெரிய நிறுவனங்களில் ஓரளவு மேலிடத்தில் வேலை
செய்யும் அனைவரும் அடிக்கடி சந்திப்பதும், இந்த கதையில் சொல்லி இருப்பது போல் ஏதோ ஒரு வகையில் கடந்து
போவதும் நடப்பவையே. ஆனால் ஆசிரியர் போல ஒரு நொடி நின்று, உண்மையோ, உணர்ச்சியோ குறையாமல் பதிவு
செய்வது மிக குறைவு.அதை செய்ததற்காகவே திரு.ஷன்பேக் அவர்களுக்கு நன்றி.
இந்த சூழலில் முன் அனுபவம் இல்லாதவர்கள் கூட எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் விபரங்கள் சொல்லப்பட்டு
கதையின் உள்ளே இழுத்துசெல்லபடுவதும், கடைசியில் கதாபாத்திரங்களின் மன நிலையை சரியாக உணரவைத்ததும்
ஆசிரியரின் திறமைக்கு சான்று. நீங்களும் மற்றோரும் தரும் பாராட்டிற்கு முழு தகுதி உடையவர் ஆசிரியர் என்பதை உணர்கிறேன்.
தமிழில் மொழியாக்கம் செய்து அளித்தமைக்கு உங்களுக்கும் நன்றி.
அன்புடன்.
பாலாஜி கோனார் ( ஆனந்தகோனார்
ஜெயமோகன்
December 17, 2009 at 7:03 am (UTC 5.5) Link to this comment
அன்புள்ள ரத்தன்
தொடர்ந்து எழுதுவதாகஏ இருக்கிறேன். விட்டுவிட்டால் இப்போதிருக்கும் ஒரு வாசகத்தொடர்பு ஊடகம் இல்லாமலாகிவிடும் என்றார் வசந்தகுமா.
ஆனால் குறைவான நேரத்தைச் செலவிட எண்ணுகிறேன். தனிப்பட்ட மின்னஞ்சல்களில் அதிக நேரம் செலவழிக்கவோ விவாதங்களை முன்னெடுக்கவோ செய்தால் நேரமும் கவனமும் திசைதிரும்பும். அசோகவனம் நாவலைஎ ழுதி முடித்துவிட எண்ணுகிறேன்
அதற்காகவே இந்த பின்னூட்டப்பெட்டி
ஜெ