எச்சில் ஒரு கடிதம்

அன்புக்கும் மதிப்புக்குமுரிய ஐயா அவர்களுக்கு

கணவனது எச்சிலிலையைமனைவி சாப்பிடுவதனைப்பற்றி நீங்கள் விளக்கமாக எழுதியிருந்த கட்டுரையினை வாசிக்கும் வாய்ப்பைப் பெற்றேன். என்னுடைய நண்பர் ஒருவர் லிங்கு கொடுத்து வாசிக்கும்படியாகச் சொல்லியிருந்தார். நீங்கள் சொல்வதுபோல ஏராளமான விஞ்ஞான விளக்கங்கள் அதற்கு இருக்கலாம். வெள்ளைக்காரர்கள் அதனை ஒப்புக்கொண்டிருப்பதும் உண்மையானதாக இருக்கலாம். ஆனால் அப்படிச் சாப்பிடுவது சுகாதாராமான பழக்கவழக்கம் கிடையாது. அதன்மூலம் உடல்நலம் குறையும் என்றுதான் நினைக்கிறேன்

அந்தக்காலத்திலே சாப்பாடு குறைவாக இருந்தகாலத்திலே சாப்பாடு மீதீயாகி மிஞ்சிவிடக்கூடாது என்றும் வீணாகக்கூடாது என்றும் இத்தகைய ஒரு ஏற்பாட்டினைச் செய்திருக்கின்றார்கள் என்று நினைக்கிறேன். அதோடு ஆணுக்குப் பெண்டிர் அடக்கமாக நடக்கவேண்டும் என்றும் நினைத்திருக்கலாம். ஆணுக்குப்பெண் அடங்கினால்தான் நல்லபடியாக குடும்பம் நடக்கும் என்று உறுதியாக நினைக்கிறேன். ஆனால் அதற்கு பல வழிகள் உள்ளன.பெண்களுக்கு நல்ல மத அறிவுரையினை பெரியவர்ர்கள் சொல்வதும் அவர்களுக்கு வழிகாட்டுவதும் அவசியம். குழந்தைகளுக்கு கொடுப்பதுபோல சிறிய தண்டனைகளை அளிப்பதனாலும் அவர்களை நல்வழிப்படுத்தலாம். ஆனால் அவர்களை எச்சில்சாப்பிட வைத்து இழிமுறைப் படுத்துவது சரியல்ல. அதன் வழியாக மனக்கசப்புதான் உண்டுபண்ணும்

நீங்கள் சிறந்த எழுத்தாளர் என்று சொன்னார். உங்களைப்போன பிரபல எழுத்தாளகள் இப்படி கேவலமான பழக்கங்களை நியாயம் சொல்லி எழுதுவது வருந்தக்கூடியது. மிகவும் பிழையானது. விஞ்ஞானம் என்ன சொன்னாலும் அதை மக்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும்போதுதான் நீடிக்கும்.

வருத்ததுடன்

முகமது ஜலீல்

அன்புள்ள ஜலீல்

அறிவியல் அப்படிச் சொல்லும்போது நான் என்ன சொல்லமுடியும்? ஆண்கள் வாழையிலையிலே மிச்சம் வைக்கிற எச்சிலிலே ph2 என்கிற புரோட்டீன் இருப்பதாகவும் நவீன அறிவியல் சொல்கிறது. ஆனால் இதை நாய் சாப்பிட்டால் அதற்கு செரிக்காதாம்

ஜெ

முந்தைய கட்டுரைகிரிகாமி
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 43