இமயம் நோக்கி மீண்டும்…

மழைப்பாடல் எழுதிக்கொண்டிருந்தபோது ஆரம்பித்த எண்ணம். அர்ஜுனன் பிறந்ததாகச் சொல்லப்படும் புஷ்பவதியின் சமவெளிக்குச் செல்லவேண்டும் என்று. உடனே, இக்கணமே, கிளம்பிவிடவேண்டும் என மனம் எழுச்சிகொண்டது. ஆனால் உடனே செல்லமுடியாது. ஜூலை ஆகஸ்ட் மாதங்களில்தான் அச்சமவெளிக்குச் செல்லமுடியும். அரங்கசாமிதான் துடிதுடித்தார். உடனே விமானப்பயணச்சீட்டு போட்டோம்.

ஆனால் இந்த ஜூலையில் பருவமழை தள்ளிவந்து இப்போது உக்கிரமாகப் பெய்துகொண்டிருக்கிறது. உத்தரகண்டின் பல இடங்கள் மூடப்பட்டுவிட்டன. பல இடங்களில் பாதைகள் துண்டிக்கப்பட்டுவிட்டன. ஆகவே புஷ்பவதிக்கரை உட்பட நாங்கள் திட்டமிட்ட இடங்களுக்குச் செல்லமுடியவில்லை.

ஆனால் பயணத்துக்கான மனநிலை வந்துவிட்டது. கொஞ்சநாள் மலையேற்றத்துக்காக உடற்பயிற்சிகளும் செய்தாகிவிட்டது. வீணாகக்கூடாது. ஆகவே திட்டமிட்டபடியே பயணம் செய்கிறோம். நாளை 26 அன்று மாலை கிளம்பி கோவை. 27 அன்று விமானத்தில் டெல்லி. நேராக சண்டிகர் வழியாக ஜம்மு. இமயத்தின் சில சரிவுகள். சில மலைகள்.

நான், கிருஷ்ணன் [ஈரோடு], விஜயராகவன் [ஈரோடு] ராஜமாணிக்கம் [திருப்பூர்] பிரசாத் [சேலம்] ராஜகோபாலன் [சென்னை] சுதாகர் [பட்டுக்கோட்டை] ஆகியோர் பயணத்தில் சேர்ந்துகொள்கிறோம். ஜம்முவிலும் மழை உண்டு. மலையேறுவதெல்லாம் கடினம் என்றார்கள். பார்ப்போம்.

சுதாகர்
பிரசாத்
ராஜகோபாலன்
விஜயராகவன்
ராஜமாணிக்கம்
கிருஷ்ணன்

jey42[8] [நான் – மலையேறுவதற்காக இளமை அடைந்திருக்கிறேன்]

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 56
அடுத்த கட்டுரைவெண்முரசு – மிகுபுனைவு, காலம், இடம்