ஜெ
இந்த விளம்பரத்தை ஃபேஸ்புக்கிலே பார்த்தேன்
Panuval – Online Tamil BookStore
Price: Rs.500.00
Brand: கண்மணி குணசேகரன்
வந்தாரங்குடி”, படையாச்சிகள் ஒற்றுமையாய் இருக்கவேண்டியதன் தேவை பற்றிப் பேசுகிற நாவல்.
இந்த புத்தகம் தேவைப்பட்டால் +91-8939967179 ,044-43100442என்ற எண்ணுக்கு அழைக்கவும் . ( VPP மற்றும் Door Delivery வசதி உண்டு )
சும்மா ஒரு தகவலுக்காக
சரவணன்
அன்புள்ள சரவணன்,
படையாச்சிகள் அதிகம் புத்தகங்களெல்லாம் படிப்பதில்லை. பதிப்பகங்களிடம் விசாரித்தால் தெரியும். ஆகவேதான் அவர்கள் இதுவரை ஒற்றுமையாக இருக்கிறார்கள்
ஜெ
ஜெ,
)))
திருநெல்வேலி ஆச்சிகள் ஒற்றுமையாக இருக்கவேண்டியதைப்பற்றி வண்ணநிலவன் ஒரு நாவல் எழுதியிருக்கிறாராமே? உண்மையா?
சரவணன்
சரவணன்,
‘நல்லவர்க்கெல்லாம் ஆச்சிகள் ரெண்டு ஒன்று மனசாச்சி’ என்று வாழும் நாஞ்ச்ல்நாட்டு வேளாளர்களைப்பற்றித்தான் நான் அறிவேன்
ஜெ
8888
ஜெ,
கீழ்க்கண்ட வசனத்தை எழுதிய இலக்கியவாதி யார்?
இதை இட்லியென்றால் சட்னிகூட நம்பாது’ என்றொரு வசனம் வருமே..அதுபோல் இதைச் சிறுகதை என்றால் அராத்துக் கூட நம்பமாட்டார்.
செல்வா
அன்புள்ள செல்வா,
எழுதச்சாத்தியமானவர்கள் பலர். இரா முருகன், ஷோபா சக்தி , செல்வேந்திரன்… ஏன் அராத்துவாகவேகூட இருக்கலாம்
ஜெ
ஜெ,
கூகிளில் தேடிப்பார்த்திருக்கிறீர்கள். கிடைக்காது
ஷோபா சக்திதான்
செல்வா