«

»


Print this Post

வாசகர் சந்திப்பு ஒரு கடிதம்


அன்புக்குரிய தோழர் ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்.

தங்களைப்போல், ஆழ்ந்த புலமையுள்ளோர் அதைக் காசாக்க நினைக்காமல், சக மனிதர்பால் பரிவும் நம்பிக்கையும் கொண்டு சீரிய ஆக்கங்களை வலைத்தளத்தில் சற்றும் சளைக்காமல் பதிவு செய்துவருவது சாலச்சிறந்த செயலாகும் – ஊர்நடுவே பழுத்த நிழல்தரும் மரம் தான் என் மனதில் தோன்றுகிறது.

அத்துடன், தங்கள் வலைத்தளமே ஒரு பொது மேடையாக உருவாகி பன்முகத்தன்மை கொண்ட செழுமையான கருத்துக்கள் வெளிப்படுத்துவதை நம்ப இயலாததொரு செயல்பாடாக வியப்புடன் நான் காண்கிறேன். தேர்ந்த நுட்பமும் கூரிய ஞானமும் தரும் செருக்கு சற்றுமின்றி, மிகச் சாமானிய கருத்துக்களுடனும், எள்ளல்களுடனும் மற்றும் ஏசல்களுடனும்கூட உரையாடித் தெளிவிக்கும் தங்களது பண்பு போற்றற்குரியது மட்டுமல்ல, பாடமாய்க் கற்றலுக்குமுரியது.

இக்கணத்தில் நான் தங்கள் முன் வைக்கும் கோரிக்கை என்னவென்றால் இதுபோன்றதொரு குழாம் தங்களுடன் நேரடியாக உரையாற்ற, தங்கள் உரைகேட்க, ஆண்டிற்கு ஓரிருமுறையேனும் ஒரு பொது அரங்கில் வாய்ப்பு அளிப்பீர்களா ? இது சாத்தியமல்ல என்று சுருக்குவதற்கு பதிலாக, சாத்தியக்கூறுகளுக்கு அவசியம் உண்டு என்று உணரும் பட்சத்தில், இதர தேவைகளை நாம் பங்கிட்டுச் சந்திக்கலாம். –ஜெயமோகன் ரசிகர் கூட்டம் சேர்க்கிறார் – என்ற வசையை எதிர்கொள்வது உங்களுக்கொன்றும் பெரிய கவலையளிக்கக்கூடியதொன்றல்ல. சற்றே யோசிக்கவும்.

– ஜேயார்ஸி

அன்புள்ள ஜேயார்ஸி

அப்படி ஒரு ஆலோசனையை வேறு சில நண்பர்களும் சொன்னார்கள். ஆனால் இத்தகைய நிகழ்ச்சிகளை என் செலவில் அமைக்கும் நிலையில் நான் இல்லை. செலவில்லாமல் இவற்றை அமைக்கவும் இயலாது. இதுவே முக்கியமான பிரச்சினை. இன்று தமிழ்நாட்டில் எங்கே சிலர் சந்திப்பதென்றாலும் அது செலவேறிய ஒன்றாகவே உள்ளது. ஏதேனும் வேறு சந்தர்ப்பங்களை ஒட்டி சாதாரணமாக சந்திப்புகளை உருவாக்க முடிந்தால் பார்ப்போம்.

ஜெ

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/5712

13 comments

Skip to comment form

 1. Dondu1946

  நாங்கள் பிளாக்கர் மீட்டிங்குகள் பீச்சில் வைத்திருக்கிறோமே, காலணா செலவில்லாமல்? என்ன, எங்கள் சந்திப்பில் 10-20 பேர்தான் இருப்பார்கள்.

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

 2. Arangasamy.K.V

  கோவையில் ஒரு வாசகர் சந்திப்பு ஏற்பாடு செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம் ஜெ அண்ணா , (செலவு ஒன்றும் பெரிதாக ஆகும் என தோன்றவில்லை, நாங்கள் உடனே தயார்தான் )

  எப்போ வசதிப்படும் என்று சொன்னால் ஏற்பாடுகளை தொடங்கி விடலாம் , கோவை பகுதியில் எவ்வளவு பேர் கலந்து கொள்வார்கள் என கணிக்க முடியவில்லை , 100 பேர் கலந்து கொள்ளுமாறு ஒரு ஏற்பாடு செய்யலாமா ?

  ஒரு மாலை நேர அமர்வு ஏற்பாடு செய்யலாம் அல்லது முழுநாள் கூட்டம் ,

  புத்தக வெளீயீடு விழாவில் கலந்து கொள்ள முடியாதது வருத்தம் அளிக்கிறது

 3. chandran_pon

  Good idea.If a meeting like that arranged any where in Tamilnadu I will attent.
  chandran

 4. bheema

  கோவை பகுதியில் சந்திப்பு கூட்டம் வைப்பது நல்ல யோசனை.. செலவை நாம் ( வாசகர்கள் ) பகிர்ந்து கொள்ளலாம். ஆனால் முதலில் நம் தலைவரின் அனுமதி கிடைக்க வேண்டும் :)

 5. vkrishnaraj

  I am looking forward to it.
  Krishnaraj

 6. jrc

  My original suggestion itself puts forth the idea that the participants can share the expenses. This cost-based, expenses-sharing approach will also eliminate people without serious approach towards participating such meets.

 7. ஜெயமோகன்

  நண்பர்கள் விரும்பினால் பிப்ரவரி இறுதியில் கோவையில் சந்திக்கலாம்.

  ஆனால் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அது உரையாடலாக இருந்தால் பங்குகொள்பவர்கள் முன்னரே ஒரு நண்பரை தொடர்பு கொண்டு தங்கள் விருப்பத்தை தெரிவிக்க வேண்டும். அவரை மதிப்பிட்ட பின் அழைக்க வேண்டும். அதாவது யார் என ஓரளவு தெரிந்தவர்களே அழைக்கப்படவேண்டும். எல்லா கருத்து தரப்பில் இருந்தும் யாரும் வரலாம். ஆனால் சபை நாகரீகம் போன்றவற்றில் நம்பிக்கை கொண்டவராக இருக்கவேண்டும். ஏனென்றால் தமிழ்நட்டில் இது முக்கியமான ஒரு விஷயம். ஒரே ஒருவர் நினைத்தால் ஒரு கூட்டத்தை ஒட்டுமொத்தமாக சீரழிக்க முடியும். இது தமிழ்நட்டில் பலமுறை நடந்திருக்கிறது

  ஆகவே பொது அழைப்பு இல்லாமல் வலை அழைப்பு மூலம் ஒழுங்குசெய்யலாம்

  ஜெ

 8. Marabin Maindan

  பிப்ரவரி 22க்குப் பிறகு நிகழ்ச்சி அமையலாம் என்றால் கோவையில் ஒருங்கிணைப்புப் பணிகளையும் அரங்க செலவையும் நான் ஏற்றுக் கொள்கிறேன்.
  உரையாடல் அமர்வாக இல்லாத பட்சத்தில் பொது அழைப்பின் மூலம் ஆர்வமுள்ள பலரை ஒன்று சேர்க்கலாம்.

 9. jrc

  நல்லது, சந்திப்பு என்ற அளவில் ஜெமோவின் ஒப்புதல் பெற்றபின், இனி அவரே நிகழ்ச்சியின் தன்மையை முடிவு செய்யட்டும். செலவுகள் அனைத்தையும் பங்கேற்பவர்கள் பங்கிட்டுக்கொள்வது நலம்.

 10. Arangasamy.K.V

  //பிப்ரவரி 22க்குப் பிறகு நிகழ்ச்சி அமையலாம் என்றால் கோவையில் ஒருங்கிணைப்புப் பணிகளையும் அரங்க செலவையும் நான் ஏற்றுக் கொள்கிறேன்.
  உரையாடல் அமர்வாக இல்லாத பட்சத்தில் பொது அழைப்பின் மூலம் ஆர்வமுள்ள பலரை ஒன்று சேர்க்கலாம்//

  மரபின் மைந்தன் முத்தையாதானே நீங்கள்? மிக்க மகிழ்ச்சி ,

  உங்களுடன் பகிர்ந்து கொள்ள எங்களையும் அனுமதியுங்கள் ,

  முதலில் கோவைதான் என்பது மகிழ்ச்சியளிக்கிறது

 11. arun

  அன்புள்ள ஜெ

  என்னையும் ஸேத்துக்கொங்க. நெம்பொ’ ஆசையா இர்ருக்கு

  அருண், கோவை

 12. ஜெயமோகன்

  sure arun,see my new post
  கோவையில் வாசகர் சந்திப்பு

 13. சங்கரன்

  நானும் சேர்ந்து கொள்கிறேன்.அனுமதியுங்கள்.

Comments have been disabled.