https://venmurasudiscussions.blogspot.com/
மீண்டும் பாரதத்தை எழுதிப்பார்க்கையில் சொல்லாத இடங்களை கற்பனையாலும், பல்வேறு பிற நூல்களின் அறிவாலும் நிரப்பி கொள்ளலாம். அதே சமயம் பாரதம் உருவாக்கியுள்ள பாத்திரங்கள் ஒவ்வொன்றும் தனித்தன்மை கொண்டவை. அவற்றின் ஆளுமைகளைக் கொண்டு பல நூறு கதைகள் புனையலாம். இந்த இரண்டையும் சரியாக சேர்த்து செய்யப்பட்டதுதான் முதற்கனல்.