அருவி

ஜெ,

வண்ணக்கடல் 20ல் வரும் எத்திபொத்தலா அருவி இப்போதிருக்கும் அருவிதானா? அப்படியென்றால் இளநாகன் செல்லும் வெற்றித்திருநகர் அல்லது விஜயபுரி எது? அவன் திரும்பி வந்துகொண்டிருக்கும் நெற்குவைநகர் எது? சும்மா தகவலுக்காகத்தான்

சிவராம்
_dsc6105

அன்புள்ள சிவராம்,

இப்போதிருக்கும் அருவிதான். அருவிகளும் மலைகளும் காவியங்களுக்கும் மொழிக்கும் அப்பாற்பட்ட காலத்தில் நிற்பவை அல்லவா? எத்திபொத்தலா பிரம்மாண்டமான அருவி. தென்னகத்தின் பெருவியப்புகளில் ஒன்று. அணுகமுடியாது. நீராடவும் முடியாது.

விஜயபுரி என்பது பின்னாளில் நாகார்ஜுனகொண்டா. அது இன்று நாகார்ஜுனசாகர் அணையின் நீருக்குள் உள்ளது. நெற்குவைநாடு என்பது தான்யகடகம். பின்னாளில் அமராவதி. இப்போது சிற்றூர். வரலாற்றுச்சிறப்புடையது.

இவற்றை எல்லாம் வாசகர்களே கொஞ்சம் தேடிக்கொள்ளட்டும் என்று விட்டுவிடவே விரும்புகிறேன். அந்தத் தேடல் அவர்களை ஓர் இந்தியதரிசனம் நோக்கி கொண்டுசெல்லும். பயணம்செல்லும் இயல்புடையவர்கள் தேடிக்கண்டுகொண்டுதான் இருக்கிறார்கள்.

ஜெ

ஓவியம்: ஷண்முகவேல்
ஓவியம்: ஷண்முகவேல்