விவேக் ஷன்பேக், கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,

 

விவேக் ஷான்பேகின் சிறுகதை ‘வேங்கைச்சவாரி’ அருமையான ஒரு படைப்பு. தமிழிலே பொதுவாக நாம் உள்ளூர் அனுபவங்களை மட்டும்தான் கதைகளாக எழுதுகிறோம். நம்முடைய கிராமம் நமுடைய குடும்பம் …ஆனால் இன்றைய மனிதர்கள் இந்த தனிப்பட்ட அனுபவங்களை கடந்து ஒரு உலக மனிதனாக உணரக்கூடிய சில தருணங்கள் வாழ்க்கையில் உண்டு. நான் வியாபார விஷயமாக சிங்கப்பூர் மலாயா ஜப்பான் போன்ற நாடுகளுக்குச் செல்வதுண்டு. உஅலகமே ஒரே இடத்தில் கூடிவிட்டது போல உணர்வேன். தனித்தனி நாடுகளெ இல்லை. வியாபாரம் மட்டும் ஒரு தனி உலகத்தை உருவாகிக்கொண்டது போலத்தான் இருக்கும். இந்த அனுபவத்தை கணினி தொழிலில் உள்ளவர்களும் அடைந்திருப்பார்கள். நாம் இந்தியர்கள் என்று அடையாளப்படுத்திக்கொள்வதேகூட ஒரு வசதிக்காகத்தான். அங்கே எல்லாருமே ஒன்றுபோலத்தான் இருப்பார்கள். அந்த அனுபவத்தைச் சார்ந்து தமிழில் எனக்கு தெரிந்து அ.முத்துலிங்கம் அவர்கள் மட்டுமே சில நல்ல கதைகளை எழுதியிருக்கிறார்கள். மற்றபடி எல்லா கதைகளுமே அவரவர் நிலத்தில் நிற்கக்கூடியவை. தமிழ் எழுத்தாளர்களில் ‘உலகளாவிய’ அனுபவம் கொண்டவர்கள் அனேகமாக வேறு யாருமில்லை. அந்த அனுபவம் கொண்டவர்கள் வெறுமே ‘நஸ்டால்ஜியா’ க்களை மட்டுமே எழுதிக்கொண்டிருக்கிறார்கள். இந்தக்கதையில் உள்ள அந்த உலகளாவிய அனுபவத்தை நான் மிகவும் ரசித்தேன். ஏனென்றால் அது மிகவும் அனுபவப்பட்டது எனக்கு.

 

சுந்தர மகாலிங்கம்

 

[தமிழாக்கம்]

 

அன்புள்ள சுந்தர மகாலிங்கம் அவர்களுக்கு,

 

உங்கள் கடிதத்தில் குறிப்பிட்டிருப்பது உண்மை. ஆனால் தொழிலில் அல்லது வணிகத்தில் உலகளாவிய தொடர்புகள் கொண்டிருப்பவர்களின் அனுபவம் அது. அவர்களில் சிலரே தமிழில் கதைகளை எழுதுகிறார்கள். முத்துலிங்கம் குறிப்பிடத்தக்கவர். ஆஸ்திரேலியாவின் ஆசி கந்தராசா அத்தைகைய நல்ல கதைகளை எழுதியிருக்கிறார்

 

ஜெ

 

அன்புள்ள ஜெ

 

விவேக் ஷன்பேகின் சிறுகதையை ரசித்து வாசித்தேன். வியாபாரத்தில் ஏதோ ஒரு இடத்தில் நாம் எல்லாவற்றையும் லாப நஷ்ட விளையாட்டாக மட்டுமே எடுத்துக்கொள்ள பழகிவிடுகிறோம். நமக்கு எந்த அநீதியும் மனதில் உறைக்காமல் ஆகிவிருகிறது. அந்த மாதிரி சூழலில் சிலசமயம் சில விஷயங்கள் கொஞ்சம் தொந்தரவு கொடுக்கும். நானும் கீழ்நிலையில் இருந்து வந்தவன் தான், நானும் ஏழைகளுக்கு உதவி செய்கிறேன் என்றெல்லாம் சொல்லி அந்த தொந்தரவை சமாளித்துக்கொள்வோம். வியாபார விருந்துகளில் கொஞ்சம் குடித்துவிட்டால் எல்லாருமே இதைத்தான் பேசிக்கொண்டிருப்பார்கள். புலம்பிக்கொண்டிருப்பார்கள் என்று சொல்லவேண்டும். அந்த நுட்பங்களை எல்லாம் அழகாகச் சொன்ன முக்கியமான சிறுகதை இது. அதிலும் ஆப்ரிக்கக்காரரிடம் வெள்ளைககரன் என்ன சொல்லி மடிய வைத்தான் என்பதை  அப்படியே ஊகத்திற்கே விட்டிருப்பது மிகவும் அற்புதமான முடிச்சு

 

ராம்குமார்

[தமிழாக்கம்]

 

அன்புள்ள ராம் குமார்

 

விசித்திரமான விஷயம், இந்தக்கதைக்கு ஒரு தமிழ்க் கடிதம்கூட வரவில்லை. இது இந்திய மொழிகளில் எழுதப்பட்ட ஒரு ஆங்கிலக்கதை என்பதனாலா?

 

ஜெ

சிறுகதை, விவேக் ஷன்பேக் வேங்கைச்சவாரி

முந்தைய கட்டுரைமேற்குச்சாளரம் -சில இலக்கியநூல்கள்
அடுத்த கட்டுரைபுத்தக வெளியீடு,கடிதங்கள்