«

»


Print this Post

கழிப்பறைகள்- கடிதங்கள்


“இந்த அத்தனை கிராமங்களிலும் சுலப் அமைப்பு கட்டிக்கொடுத்த நவீனக் கழிப்பறைகள் இருந்தன. எந்தக்கழிபப்றையையும் நெருங்கமுடியாது. அப்பகுதி முழுக்க மலக்குவியல் கழிப்பறையை சுத்தப்படுத்தாமல் அப்படியே விட்டு அதைச்சுற்றியே கழித்து வைத்திருந்தனர்.

‘இதைச் சுத்தமாக வைத்திருக்கக்கூடாதா?’ என பலரிடம் கேட்டோம். ‘ஆமா அதுதான் சோலி…’ என்றார்கள். கட்டப்பட்ட ஒருமாதம்கூட அவை பயன்பாட்டில் இல்லை”

அன்பின் ஜெ..

உங்கள் கட்டுரையின் மிக முக்கியமான வார்த்தைகள் இவைதான். நோய் முதல் நாடி நோக்கினால் வரும் உண்மை. 1970களில், என் கிராமத்தில் பொதுக்கழிவறைகள் கட்டப்பட்ட ஒரு மாதத்தில் அவை இவ்வாறுதான் அழிந்தன. இன்றும் அதே கலாச்சாரம் இருப்பது, ‘ இது, கல் தோன்றி மண் தோன்றாக் காலத்துக்கு முந்திய கலாச்சாரம்’ என்பதைத் தான் நினைவுறுத்துகிறது. “Collective indicipline” நமது மிகப் பெரும் பாரம்பரியம். இதை அடியோடு மாற்ற இன்னொரு குஜராத்தி வர வேண்டும் போல (pun intended). பார்ப்போம்.

இக்கட்டுரையில் சொல்ல இரு விஷயங்கள்:

1. வளர்ச்சிக் குறீட்டெண்கள்: இது தமிழகத்துக்கு மட்டும் உள்ள தனிப்பட்ட முறை அல்ல. பாரதமெங்கும் உள்ள எல்லா மாநிலங்களிலும் இவ்வாறுதான் புள்ளி விவரங்கள் எடுக்கப் பட்டு, குவிக்கப் படுகின்றன. எடுத்துக்காட்டாக, தமிழக பொது விநியோகம் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது – ஆனால், குஜ்ராத்தில் இது அவ்வளவாக நடைபெறவில்லை எனில் – அந்தப் புள்ளி விவரங்களை எடுக்கும் அரசும், சாரா நிறுவனங்களும் தரும் புள்ளி விவரங்கள் அவை. இதை நான் கோண்டல் சென்ற போது, ஒரு பொது விநியோகக் கடையில் பேசிய போது புரிந்தது – அது கலாச்சாரம் சார்ந்த விஷயமாகக் கூட இருக்கலாம் என்று. இவைகளைக் குறிப்பிட்டுப் பேசக் கூடாது எனில், பொது விவாதம் சாத்தியமேயில்லை.

2. ஒத்திசைவு இராமசாமி: அவரின் அர்ப்பணிப்புள்ள களப்பணிக்கு ஒரு பெரும் வந்தனத்தைத் தெரிவித்துக் கொண்டே இதைத் துவங்குகின்றேன். அவர் களப் பணி செய்யும் இடத்தின் மிகப் பெரும் பிரச்சினையை அவர் எழுதி வருகிறார். ஆனால், அவரில் கொந்தளிக்கும் கோபமும், வெறுப்பும், அதே சமயம் இன்னொரு தலைமையின் ஆராதனையும் – ஒரு சமநிலையின்மையைக் காண்பிக்கின்றன. வேறெவரையும் விட, சமூகத்தின் பால் கோபப்பட அவருக்கு மிக அதிகம் உரிமை உள்ளது. தமிழகத்தில் குடியும், குடிமைப் பண்பாடின்மையும் எவ்வளவு பெரும் வியாதியோ, அதேயளவு பெரிய பிரச்சினையாக குட்காவும், பொது இடங்களில் குட்கா எச்சிலும் மலை போல் குவியும் இடங்களும் இருக்கின்றன. எனது நண்பர்கள் 20 ஆண்டுகளாகப் பணிபுரிந்தும், மாற்ற முடியாத விஷயம் மலை ஜாதி ஆண்மக்களின் குடிப் பிரச்சினை தான். ஆனால், அதைத் தாண்டி, மருத்துவம், பொருளாதாரம் போன்ற விஷயங்களில் பணியாற்றிக் கொண்டே இருக்கும் அவர்களும் பெருமூச்சு விடுவது இந்தக் குடி விஷயத்தில் தான். எனக்குச் சொல்ல இரண்டு விஷயங்கள்:

அ. ராமசாமி ஒரு விதி சமைப்பவர்

ஆ. ஆயுர் வேதம் – உடலுக்குச் சேவை செய்யும் ஒரு வழியாகக் காண்கிறது. அல்லோபதி, உடலை ஒரு இயந்திரமாகப் பார்க்கிறது.

அவருக்குக் கோபம் வரும் போதெல்லாம், அவருக்குப் பிரியமான பழம் குஜ்ராத்தியை நினைத்துக் கொள்ளலாம் எனத் தோன்றுகிறது. ராமசாமி போன்றவர்கள் இந்தச் சமூகத்துக்குச் செய்யும் பணிக்கு என நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாலா

ஜெ,

கழிப்பறைகள் பற்றிய கட்டுரை வாசித்தேன். ஒரு பொதுவான மனப்பதிவாக இருப்பினும் முக்கியமான இரு விஷயங்களைத் தொட்டுச்சென்றிருக்கிறீர்கள். அவை ஒன்றுடன் ஒன்று தொடர்பு உள்ளவை. கிராமப்புறங்களின் பிரச்சினை என்பது இன்று ஒரு முரட்டுத்தனமான, மொண்ணைத்தனமான மனத்தேக்கம் [சுந்தர ராமசாமி சொல்லும் வார்த்தை] பண்பாட்டுப்பிரச்சினை. எதிலும் அக்கறை கிடையாது. எந்தவிதமான ஸ்பிரிச்சுவலிசமும் இல்லை. எந்த நல்ல விஷயம் மீதும் நம்பிக்கை கிடையாது. குடி சினிமாப்போதை. இந்த வலையில் இருந்து அவர்களை விடுவித்து நவீன வாழ்க்கையை அவர்களுக்குச் சொல்லிக்கொண்டிருந்தவர்கள் கொஞ்சம் படித்த வர்க்கம். வாத்தியார்கள் போல. அவர்கள் எல்லாரும் கிராமத்தைக் கைவிட்டுவிட்டார்கள் என்பதுதான் சோகம்

சாமி

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/56603