மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
நான் மிகவும் மதிக்கும்,வியந்து போற்றும் எழுத்தாளர் நீங்கள். சிறந்த விமர்சகரும் ஆனவர்.தங்களின் சர்ச்சைகளும்,கலகங்களும் மிகுந்த பாதிப்புகளை ஏற்படுத்தி வருபவை.ஆனால் நான் தங்களின் சர்ச்சைகளை ஆரோக்கியமான கண்ணோட்டத்துடனும் நேர்மறையான சிந்தனையுடனுமே அணுகுகிறேன்.ஒருவேளை,பலரும்பழி சுமத்துவதுபோல்,தங்களின் செயல்களில் உள்ளூர அரசியல் ஒளிந்திருக்கிறதா எனக் கண்டறியும் திறன் எனக்கில்லை.தமிழ் படைப்பாளிகள் பேரியக்கம் பற்றிய தங்களின் விமர்சனம் குறித்தே நான் இங்கு எழுதுகிறேன்.எனக்குத் தெரிந்தவரை.
இது பற்றிய விமர்சனம் உங்களிடமிருந்து வரும் என்பது நான் எதிர்பார்த்ததுதான்.சொல்லப்போனா
தமிழகத்தின் தனிப்பெரும்பான்மையான சமுதாயமாக வன்னியர் சமுதாயம் உள்ளது.எனினும் மிகமிகப் பிற்படுத்தப்பட்ட ,விழிப்புணர்வற்ற சமுதாயமாகத்தான் உள்ளது.அரசியலில் மட்டும் ஓரளவு ஆளுமையுடையதாயிருக்கிறது.தாங்
உதாரணமாக கவுண்டர் என்ற சாதிப்பட்டம் ,எவ்விதமான நிலஅடையாளமும் அற்ற ,பொதுநிலையில்,கொங்கு வெள்ளாள கவுண்டர்களையே குறிக்கிறது.ஏன்? கவுண்டர் என்ற சொல்,உண்மையில் பல பிரிவினருக்குப் பொதுவாக இருந்தபோதும், கொ.வெ.கள் நன்கு முன்னேறியவர்களாக பெரும்பான்மையோர் உள்ளனர்.அச்சு ஊடகம்,திரைப்படம் போன்ற காட்சி ஊடகங்களில் இவர்களே கவுண்டர்கள் என்ற அடையாளத்தோடு,வெளிவந்து,பதிவாகி
கொங்கு வெள்ளாள கவுண்டர் இல்லை.வன்னியக் கவுண்டர்.ஆனால்,இந்த சாதியும் கொ.வெ.க.களுக்கு இம்மியும் குறைந்ததில்லை” என்று.இது பெருமைக்கு வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம்.படிநிலையில் உண்மையில்லை)
மருத்துவர் இராமதாசு வெளிப்படையாகப் பேசுபவர்.நேரடியாகவும்,காட்டமா
பொதுவாக எழுத்தாளர்கள் தங்களை சாதி,மதம்,இனம் சார்ந்து பொது அடையாளத்தின்கீழ் காட்டிக்கொள்ள தயங்குவார்கள். என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.
இதில் எந்தளவு உண்மையிருக்கிறது.அவரவர் சார்ந்த சாதியை அவரவர் பதிவு செய்வது பெரும்பான்மையாக நடந்துகொண்டுதானிருக்கிறது.
நல்ல இலக்கிய வாசகன் ஒருபோதும் எழுதுபவன் தன் இனம்,மதம்,சாதியைச் சேர்ந்தவனாக இருக்கவேண்டுமென எதிர்பார்க்க மாட்டான்
உண்மைதான். ஆனால் அவ்வாறு இருக்கும்பட்சத்தில்,இன்னும் வெளிவராத பலருக்கு ,அது நம்பிக்கையை ,உந்துதலை ஏற்படுத்துமல்லவா.நாம் இன்னமும் சாதி என்பது ஒழியாத,ஒழிக்க விரும்பாத காலகட்டத்தில்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.சாதி
அனைத்துக்கும் மேலாக ஒன்று உண்டு. இத்தகைய அடையாளப்படுத்தல்கள்மூலம் மக்களை ஒன்றாக்கி அதிகாரத்தைக் கைப்பற்ற முயலும் அரசியல்வாதிகளே இத்தகைய அமைப்புகளை உருவாக்குகிறார்கள். அவற்றில் இணைவதன்மூலம் எழுத்தாளர்கள் தங்களை வழிநடத்தும் பொறுப்பை அரசியல்வாதிகளுக்கு அளிக்கிறார்கள். தன்னகங்காரம் கொண்ட ஒரு சாதாரண எழுத்தாளன்கூட அதற்கு துணிய மாட்டான்
துவக்க விழாழா அன்று, மருத்துவர் இராமதாசு,குறைகளைச் சுட்டிக்காட்டி எழுதுங்கள்.என்னைப் பற்றி விமர்சியுங்கள்.அதைத்தான் நானும் விரும்புகிறேன்.வரவேற்கிறேன் என்று பேசினார் என்பது இங்கே குறிப்பிடத்தகுந்தது.இதை பல சந்தர்ப்பங்களில் கடைபிடித்தும் வந்திருக்கிறார்.எ.கா.மக்கள் தொலைக்காட்சி பற்றிய சான்றோர்களின் விமர்சனக்கூட்டம்.
இலக்கியத் தளத்தில் எழும் கேள்விகள் மிக அடிப்படையானவை. இனிமேல் இந்த எழுத்தாளர்கள் ஒரு குழுவாகச் செயல்படுவார்களா? ஒருவர் எழுதியதை பிறர் பாராட்டிக் கொள்வார்களா? இலக்கிய மதிப்பீடுகளில் இனி வன்னியர் என்ற பரிசீலனையும் இடம்பெற வேண்டும் என்று கோருவார்களா?
இப்படிப்பட்ட ஐயங்கள் எழுப்புவது தேவையற்றது.மற்ற கலை, இலக்கிய அமைப்புகளைப்போலத்தான் இதுவும்.
உயிர்மை,காலச்சுவடு, உயிர் எழுத்து, தீராநதி, வார்த்தை,தமிழினி என எந்த இதழும் இதில் ஏதேனும் பிரச்சினை இருப்பதாக காணவில்லை
கலகம் வரவேற்கத்தகுந்ததுதான்.அவர்களு
மருத்துவர் ராமதாஸ் அவர்களின் தமிழ்ப்பற்று, மக்கள் தொலைக்காட்சியின் செயல்பாடு இரண்டியிலும் மரியாதை கொண்டவன் என்பதை இங்கே சொல்லிக் கொள்கிறேன்
நேர்மையான பதிவு.பாராட்டத்தகுந்தது.நன்றி.
கண்மணி குணசேகரனும்.பழமலய் அவர்களும் மேடையில் உரசிக்கொண்டது,ஒரு குடும்பத்திற்குள் நடக்கும் சாதாரண சிக்கல் போன்றதே.பாவம்.அதைக்கூட அவர்கள் ஒளிவுமறைவாய்,உள்ளொன்று வைத்து புறமொன்று பேசத்தெரியாதவர்களாக நேரடியான செயல்பாடுகளும்,மனமும் உள்ளவர்களாகவே இருக்கிறார்கள்.மற்றபடி,அவர்களு
இலக்கியப் பயிற்சிப் பட்டறை நடத்துவது,எழுத்தாளர்களுடனான உறவை வைத்துக்கொண்டு ஒருவர் தன்னை வளர்த்துக்கொள்வது ,நம்பிக்கையையும் ,உந்துதலையும்,ஆர்வத்தையும் ஏற்படுத்துவது போன்ற செயல்பாடுகள் ஆரம்ப நிலையில் இருக்கும் ஆர்வமுள்ள எழுத்தாளர்களை வளர்த்தெடுக்க உதவுமல்லவா.நீங்கள் கூட அவ்வப்போது எழுதி வழிகாட்டி உதவுகிறீர்கள் அல்லவா.அதுபோன்றதொரு நோக்கத்தோடு செயல்படவே துவங்கப்பட்டதுதான் த.ப.பே.
இதில் மிகவும் முக்கியமான,அடிப்படையான ஒன்று.இது வன்னியர்களுக்கு மட்டுமேயான அமைப்பு என்பதே மிகவும் தவறு.ஆலோசகர்களாக பலரும் பல சாதியினரும் இருக்கிறார்கள்.ஆதரவுக்கரம் நீட்டி ,இணைந்துகொள்ள விரும்பும் யாவரையும் ,ஏற்றுக்கொள்ளவும் தயாராக உள்ளனர் என்பதே நான் அறிந்தது.
நடந்து முடிந்தது ஒரு குடும்ப நிகழ்வு.இதில் நண்பர்களுக்கும் இடம் உண்டு.
முத்து
*
அன்புள்ள முத்து,
உங்கள் கடிதம். நீங்கள் சொல்வது சரி– இம்மாதிரி விஷயங்களின் சாதகமான தரப்பை மட்டும் பார்த்தால். ஆனால் அதை இந்தியாவில் நிகழும் விஷயங்களின் பார்வையில் நோக்கினால் தவறானவையே நிகழும் என்பதே மனதில் எழுவதாக இருக்கிறது.நான் ஏற்கனவே பலமுறை எழுதியிருப்பதுபோல, தர்மபுரி திருப்பத்தூர் மாவட்டங்கள் வன்னியர், யாதவர்,தலித் சாதிகளின் முன்னேற்றம் மூலமே வளர்ச்சிப்பாதையில் காலெடுத்துவைக்க முடியும். நான் தர்மபுரியில் வாழ்ந்த நாட்களில்பாட்டாளி மக்கள் கட்சி உருவானது. அது வன்னியரிடையே உருவாக்கிய உணர்வு, அதன் மூலம் உருவான பொருளியல் மாற்றம் எல்லாவற்றையும் கண்டிருக்கிறேன். ஆகவே அதை எப்போதும் சாதகமாகவே குறிப்பிடவும் செய்கிறேன். ஆனாலும் கோட்பாடு- கலை இரு தளத்திலும் சாதிய அடையாளத்துடன் திரள்வது உண்மைகளை பார்க்க முடியாத நிலையையே உருவாக்கும், பார்வையை குறுக வைக்கும், நீண்டகால அளவில் தேக்கத்தை உருவாக்கும் என்றே எண்ணுகிறேன். என் நோக்கில் எழுத்தாளர்கள் எந்த அடையாளத்துடன் திரண்டாலும் நிகழ்வது இதுவே. தலித்தாக திரண்டாலும்கூட. நீங்கள் சொல்வதுபோல நல்லது நடந்தால் அது வரவேற்கத்தக்கதே. பாப்போம்
ஜெ