வணக்கம் அண்ணா….
நான் விஜய் விக்கி… ஒருபால் ஈர்ப்பு பற்றி வலைப்பதிவு எழுதுபவன்…
முன்பே எனக்கு சில ஆலோசனைகள் தந்து, தங்களின் வலைப்பக்கத்திலும் என்னை
பற்றிய பதிவை எழுதினீர்கள்….
நாங்கள் நண்பர்கள் இணைந்து “நிமித்தம்” என்கிற ஒருபால் ஈர்ப்பு
சமூகத்தினை பற்றிய விழிப்புணர்வு கொடுக்கும் தமிழ் மாத இதழ் ஒன்று
வெளியிட இருக்கிறோம்…. பிராந்திய மொழிகளில் வெளியாக இருக்கின்ற முதல்
பாலீர்ப்பு சிறுபான்மையினருக்கான அச்சுப்பிரதி அது அண்ணா…. எங்களுடைய
இந்த முயற்சிக்கு, எங்களுக்காக குரல் கொடுத்த உங்களின் ஆசீர்வாதம்
வேண்டியே இந்த மடலை எழுதியுள்ளேன்….
என்றைக்கும் நன்றியுடன்….
விஜய் விக்கி….
envijay.blogspot.in