கல்வி – இரு கட்டுரைகள்

என் மகளை ஆங்கில இலக்கியப்படிப்புக்குச் சேர்த்திருக்கிறேன். மகன் சூழியல் படித்தான். ஆகவே எப்போதுமே நான் பொறியியல் கல்வியைப்பற்றி கவலைப்பட்டதில்லை. ஆனால் எப்போதும் அதைப்பற்றி கேள்விப்பட்டுக்கொண்டே இருக்கிறேன். நண்பர்களின் குழந்தைகளுக்காக. நண்பர்களுக்காக. இத்துறையின் சிக்கல்கள் ஒரு சாமானியனாக எனக்கு புரிவதில்லை என்பதே உண்மை.

சமீபத்தில் வாசித்த இரு கட்டுரைகள் இருவேறு கோணங்களில் ஒன்றையே சொல்கின்றன. கல்விவணிகத்தின் முகங்கள். இது கல்வி அல்ல, வேலைக்கான பயிற்சி. ஆனால் உண்மையில் பெரும்பாலானவர்களுக்கு இங்கே தேவைப்படுவது இதுதான். கல்விக்கான தேவையை உணரும் மாணவர்கள் சிலரே. அவர்கள்தான் மாட்டிக்கொள்கிறார்கள் என்று படுகிறது.

பொறியியல் கல்லூரிகளில் ஐடி பாடப்பிரிவு நீக்கம் பத்ரி சேஷாத்ரி

தரகர், அலுவலர்,வேலை பெற்றுத் தருபவர் தேவை- ஆசிரியர்கள் தேவையில்லை. த.நி. ரிஷிகேஷ் ராகவேந்திரன்

முந்தைய கட்டுரைவண்ணக்கடல் – உருவகங்கள்
அடுத்த கட்டுரைதற்கொலை தியாகமாகுமா?