நோயும் அடைக்கலமும் -கடிதங்கள்

unnamedஅன்புள்ள ஜெ

உங்கள் கட்டுரை வாசித்தேன். பல புரிதல்களையும் மன நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.

இலவச புற்று நோய் காப்பகம் – அடையார் கஸ்தூரிபாய் ரயில் நிலையம் அருகே உண்டு. அங்கே இருக்கும் நோயாளிகள் மற்றும் அவர்களுக்கு உதவும் உறவினர்களுக்கு இடம், உணவு அளிப்பது மற்றுமன்றி, உச்ச வலி நீக்க (அல்லது மறக்க என்று சொல்லலாமோ!) மருந்துகள் மற்றுமன்றி, சமூகமும் இணைந்து உதவ செய்வது சில – அவர்களுடன் ஒரு நாள் காலைச் சிற்றுண்டி, அல்லது மதிய உணவு அருந்துவதிலிருந்து, மாலை நேர பிரார்த்தனை, நாம சங்கீர்த்தனம், மற்றும் செய்தித் தாள் வாசித்து காண்பிப்பது போல –

நாங்கள் ஒரு சிறு குழுவினர் – மாதம் ஒருமுறை – கடைசி சனிக்கிழமை – மாலை நேர பிரார்த்தனையில் கலந்து கொள்கிறோம் – அங்கே உள்ள சிறுவர், சிறுமியர், மற்றுமுள்ள நோயாளிகளின் கண்களை சந்திப்பது எளிதல்ல. முக்கியமாக சிறுவ சிறுமியரின் – அவரவர் நிலை கடந்த உத்சாகம் மற்றும் புன்னகை – நம் கண்ணில் நீர் பெருக்கும்.

இதனைப் பற்றிய அறிதலும் புரிதலும் அனைவருக்கும் மிக அவசியம். பகிர்தலுக்கு நன்றி.

உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே – என்ற உங்கள் வரி புது அர்த்தத்துடன் பொலிகிறது.
அன்புடன் முரளி

ஜெ,

ராமாயணத்தில் வரும் ரிஷ்யமுக பர்வதம் ஒரு அஞ்சினான் புகலிடமாக இருந்திருக்கலாம் என்றும் தோன்றுகிறது.

Regards,

ராஜேஷ்.

முந்தைய கட்டுரைநிமித்தம்
அடுத்த கட்டுரைவலி