தமிழகத்தில் இருந்து பல்லாயிரம்பேர் புலம்பெயரக் காரணமாக இருந்த பெரும் பஞ்சங்களைப்பற்றிய இலக்கியப்பதிவுகள் மிகமிகக் குறைவு. சொந்த அனுபவம் என்னும் கோழிமுட்டை வட்டத்தை விட்டு வெளியே வரமுடியாத ‘பதிவு’ எழுத்தாளர்களின் இயலாமையே அதற்குக் காரணம். மிகக்குறைந்த வருடங்களே எழுதிய புதுமைப்பித்தன் அனைத்து வகையிலும் அவ்வெல்லைகளை உடைத்துத் திறந்து வெளிப்பட்ட மேதை. அவர் எழுதிய துன்பக்கேணிதான் அவ்வகையில் சொல்லப்படவேண்டிய முதல் படைப்பு. அக்கதையின் பின்புலம் பற்றிய ஓர் அரிய ஆய்வு