இருநாவல்கள்

letter from an unknown woman நாவல் வாசித்திருப்பீர்கள்…. அதைப் பற்றிய உங்களுடைய கருத்தை அறிந்து கொள்ள விரும்புகிறேன்… ஹெமிங்வேயின் The old man and the sea நாவலை விட மிகச்சிறந்த நாவலாகத் எனக்குத் தோன்றுகிறது. நண்பரோ The old man and the sea நாவல் தான் சிறந்த நாவல் என்று கூறிகிறார். ஹெமிங்வேயின் அந்த நாவலில் அப்படி என்ன இருக்கிறது என்று என்னால் இன்றுவரை புரிந்து கொள்ள முடியவில்லை. letter from an unknown woman நாவல் ஆழ்மனதை என்னவோ செய்து விட்டது. தங்களின் கண்ணோட்டத்தை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி…

சூர்யா

அந்நாவலை முன்பு வாசித்தது நினைவுக்கு வருகிறது. தமிழில் ராஜா என்பவரால் யாரோ ஒருத்தியின் கடிதம் என்றபேரில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதைத்தழுவி தென்றல் என்றபேரில் தங்கர்ப்சசான் படமும் வந்துள்ளது
இரு நாவல்களையும் ஒப்பிடமுடியாது. கிழவனும் கடலும் அறியப்படாதபெண்ணின் கடிதத்தில் இருந்து முற்றிலும் வேறுவகையான நாவல். அறியப்படாதபெண்ணின் கடிதம் உணர்ச்சிகரமானது. அது உருவாக்கும் அவற்றை விரிக்கமுடியாது. அந்நாவல் உருவாக்கும் மன எழுச்சி சிந்தனைகளாக வளர்வதில்லை. ஆகவே உணர்ச்சிகளே அந்நாவலின் வல்லமை. ஆனால் அந்த உணர்ச்சிகள் எல்லைக்குட்பட்டவை. அந்தச்சூழலில், அந்த மனிதர்களின் உறவுச்சிக்கல்களுக்குள் மட்டுமே அவை அர்த்தம் கொள்கின்றன. அந்தக்கதைக்கு வெளியே நாம் அது நல்லநாவல், அவவ்ளவுதான்
கிழவனும் கடலும் உணர்ச்சியம்சம் இல்லாதது. வெறும் காட்சிச்சித்தரிப்பு. கொஞ்சம் அகச்சித்தரிப்பு. ஆனால் அது குறியீடாக வளர்கிறது. கடலையும் அதில் மீன்பிடிக்கச்செல்லும் மீனவனையும் அந்தமீனையும் எதன் குறியீடுகள் என சிந்திக்கத்தொடங்கினால் வாழ்நாள் முழுக்க ஏதோ வகையில் அந்நாவல் நம் நினைவில் இருந்துகொண்டிருப்பதை, வெவ்வேறு தருணங்களில் நாம் அதை மேற்கோள்காட்டுவதை உணர்வோம். ஆகவே அது முக்கியமான இலக்கியப்படைப்பு

– ஜெ கிழவனும் கடலும் சுனீல் கிருஷ்ணன்

முந்தைய கட்டுரைபெப்பர் தொலைக்காட்சி நேர்காணல்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 67