கல்விக்களைகள் -கடிதங்கள்

அன்பு ஆசிரியருக்கு,

கல்விக்களைகள் வாசித்தேன். தங்களது வரிகள் அனைத்தும் சத்தியமான உண்மை.
எனது அன்னையார் திருமதி. சரசுவதி, காரமடை அரசு மேனிலை பள்ளியில் உதவி தலைமை ஆசிரியையாகவும், பொன்னே கவுண்டன் புதூர் பள்ளியில் தலைமை ஆசிரியையாகவும் இருந்து ஓய்வு பெற்றவர். அவர் பணி புரிந்த பள்ளியில் கேட்டாலே அவர் எப்படி கண்டிப்புக்கும், நேர்மைக்கும் பெயர் போனவர் என்று அறிய முடியும். பொன்னே கவுண்டன் புதூர் என்ற குக்கிராம பள்ளியை தான் பணி செய்த ஒரு ஆண்டுக்குள் பல கட்டிடங்கள் கட்டி, ஆசிரிய ஆசிரியைகளை கண்டிப்பாக வைத்து சிறப்பாக நடத்தி காட்டியவர்.

ஒவ்வொரு நாளும் வீட்டில் புலம்பி தீர்ப்பார். வயிற்றுக்கு சோறு இல்லாத பிள்ளைகளுக்கு, ஆசிரிய, ஆசிரியைகள் செய்யும் அநியாயத்தை. அவர்கள் ஒரு வகுப்பு நன்றாக ஒரு நாளைக்கு எடுத்தாலே அபூர்வம். நேரம் கழித்து பள்ளிக்கு வருவது, வந்து அறையில் படுத்து தூங்குவது, வகுப்பில் மாணவன் ஒருவனை படிக்க சொல்லி விட்டு, அமர்ந்து கொள்வது, சொந்த வேலைகளை பார்க்க செல்வது என்று ஆசிரிய ஆசிரியைகள் செய்யும் பாவங்களை சொல்லி புலம்பி தீர்ப்பார்.

ஆனால் காரமடை அரசு மேல்நிலைப்பள்ளி மிக மிக சிறந்ததாக இருந்தது. நான் அங்குதான் படித்தேன். கண்டிப்பின் உச்சம் திரு.சந்திரசேகர் என்ற தலைமை ஆசிரியர். 75% ஆசிரியர்களும் எதோ கான்வென்ட் போல மாய்ந்து மாய்ந்து சொல்லி தருவர். அங்கேயும் 25% முழுக்க முழுக்க ஓப்பி அடிப்பவர்களும் இருந்தனர்.
மற்ற பள்ளிகளுக்கு செல்லும் பொழுதும், எனது தாயாருக்கு தெரிந்தவர்கள் பனி புரியும் அரசு பள்ளிகளில் ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் நடந்து கொள்ளும் விதம் குறித்தும் அவரை சொல்ல சொல்லி ஒரு டாகுமெண்டரி எடுக்கலாம்.

குறிப்பாக ஆசிரியைகள், எனது அத்தை ஒரு ஆசிரியைதான். அநேகமாக அவரின் மொத்த சர்வீஸ் இல் ஒரு சில மணி நேரங்களே ஆசிரியை என்ற பணிக்கு வேலை செய்திருப்பார்.

பக்கம் பக்கமாக எழுதலாம். உங்களை தொந்தரவு செய்ய விரும்பவில்லை.

அன்புடன்,
சரவணகுமார்
துபாய்.

அன்புள்ள சரவணக்குமார்,

உங்கள் அன்னைக்கு என் வணக்கத்தைச் சொல்லுங்கள். நானும் அத்தகைய ஆசிரியர்களை பார்த்திருக்கிறேன். பேருந்துநிலையமருகே பைக்கில் செல்கையில் என்னைக் கண்டதும் நிறுத்தி பள்ளியில் உபரி வகுப்பு நடத்திவிட்டு வருவதாகச் சொன்ன ஓர் ஆசிரியர் சக ஆசிரியர்களின் பொறுப்பின்மையையும் அக்கறையின்மையையும் சொல்லும்போது சட்டென்று மனம் உடைந்து கண்ணீர்விட்டதை நினைவுகூர்கிறேன். அவர்கள்தான் ஆசிரியர்கள்.

ஜெ அன்புள்ள ஜெ,

வணக்கம். கல்வி களைகள் பற்றிய உங்கள் கட்டுரை மிக அருமை. அரசு ஊழியர்கள் ஏன் இப்படி பொறுப்பில்லாமல் செயல்படுகின்றனர் என்பதை முழுமையாக புரிந்து கொள்ள job security மற்றும் contract act பற்றியும் பேச வேண்டும்.

எப்படி வேலை செய்தாலும் அல்லது செய்யாவிட்டாலும் வேலை போகவே போகாது என்று சட்டபடி ‘பாதுகாப்பு’ இருந்தால், மனிதன் இப்படி தான் சீரழிவான். அமெரிக்காவில் 90 சத மாணவர்கள் அரசு பள்ளிகளில் தான் பயில்கின்றனர். அங்கு வருடம் சுமார் 3 சத ஆசிரியர்கள் (பல காரணங்களுக்காக, முக்கியமாக போதுமான பணி திறன் இல்லாத காரணத்திற்காக) டிஸ்மிஸ் செய்யப்படுகின்றனர். இது இங்கு சாத்தியமில்லை. எனவே விளைவு இப்படி தான் இருக்கும். சீனாவில் ஆசிரியர்கள் மூன்று வருட ஒப்பந்தத்தில் தான் பணியமர்த்தப்படுகின்றனர்.

ஒப்பந்த முறை என்பது கொடூரமான சுரண்டல் என்ற கற்பிதம் தொடர்ந்து இங்கு பொதுபுத்தியில் ஏற்றபடுகிறது. ஆனால் பெரும் தனியார் நிறுவனங்களில் தலைமை அதிகாரி (CEO) உள்பட அனைவரும் ஒப்பந்த ஊழியர் தான். (அதற்க்காக அங்கு job security அறவே இல்லை என்று பொருள் இல்லை) ; ஆனால் performance, accountability, continuous learning of new skills and technology தொடர்ந்து அங்கு தான் பெரும் அளவில் சாத்தியமாகிறது.

கட்டுரையில் நீங்க சொன்ன காரணிகளுடன் இந்த permanent employment actஆல் ஏற்படும் எதிர்மறை விளைவுகளையும் சேர்க்க வேண்டும்.

அன்புடன்

K.R.அதியமான்
சென்னை

அன்புள்ள அதியமான்,

இந்தப்பிரச்சினை இருமுனை கொண்டது.கையாள்வதற்கு சற்று சிக்கலானது. இந்தியச்சூழலில் பொது அறம் மற்றும் குடிமை அறம் என்பது மிக அரிது. அது தேவையே இல்லை என்றே நம் உலகியல்பார்வை கற்றுக்கொடுத்துள்ளது. மேலைநாடுகளில் அப்படி அல்ல.

ஆகவே பணிப்பாதுகாப்பு பற்றிய எல்லா நெறிகளையும் எடுத்துவிட்டால் அது ஊழியர்களை எந்த அறமும் இல்லாத, எதையும் செய்யக்கூடிய, மேலதிகாரிகளின் காலடியில் பிடித்துத் தள்ளுவதாகவே அமையும். அவர்கள் சாதி மத நோக்குகளால், சுயநல நோக்குகளால் எடுக்கும் முடிவுகளை ஒட்டி ஒவ்வொருநாளும் வாழ்ந்தாகவேண்டியிருக்கும். அது ஊழியனின் தன்னம்பிக்கையை, சுயமரியாதையை மட்டுமல்ல நேர்மையாக பணியாற்றும் உரிமையையும் பறிக்கக்கூடியதாகவே அமையும்.

நான் மதிக்கத்தக்க அதிகாரிகள் என மிகமிகச்சிலரையே அறிந்திருக்கிறேன். பெரும்பாலானவர்கள் பணிக்குவந்த சிலமாதங்களிலேயே பரிபூரண அயோக்கியர்களாக மாறிவிட்டவர்கள். மனசாட்சியே அற்றவர்கள். பெரும்பாலான அரசு அதிகாரிகள் நிழலுலக தாதாக்களை போன்ற மனநிலையில் எப்போதும் இருப்பவர்கள். குடி, விபச்சாரம், ஊழல், துரோகம், அநீதி என அவர்கள் வாழும் உலகமே வேறு. அவர்களிடம் குழுபலமற்றவர்கள், பெண்கள் பணிபுரிவது என்பது நினைத்துக்கூட பார்க்கமுடியாதது.

ஆகவே பணிப்பொறுப்பு என்பதை மிக வெளிப்படையானதாக மட்டுமே வைத்துக்கொள்ளவேண்டும். முழுமையான சட்டபூர்வ நடவடிக்கை மட்டுமே இருக்கவேண்டும். அதிகாரிகளும் முழுமையாக கண்காணிக்கப்படவேண்டும்

ஜெ

அன்புள்ள ஜெ,

பதில் மடலுக்கு நன்றி. அதிகாரிகள் சர்வாதிகாரிகளாக மாறும் அபாயம் உள்ளது தான். இருப்பினும் பள்ளிகளை அந்தந்த நகராட்சி அல்லது பஞ்சாயத்துகளின் partial control இல் ஆவது விட்டால் (முன்பு இருந்த நிலை போல) local control இருந்தால், ஓரளவு சரி செய்ய முடியும். இதை பற்றி ஒரு நல்ல பதிவில் இருந்து : in China , teachers are hired on three-year contracts by counties, and are fired if they do not perform. But in India teachers belong to trade unions that are accountable only to a distant state capital, not the people they serve. Reforms could include empowering panchayats or parents’ association to at least withhold the pay of absentee teachers, if not fire them. But this would antagonise trade unions, and so finds no mention in the CMP. http://swaminomics.org/money-cant-teach-kids-to-read-write/

அன்புடன்
அதியமான்

முந்தைய கட்டுரைவேதாந்த மரபும் இலக்கியப் போக்குகளும்
அடுத்த கட்டுரைவேலை