மேகமலை தாடிக்கொம்பு– கடிதங்கள்

வணக்கம் ஜெயமோகன் சார்,

உங்கள் மேகமலை கட்டுரை படித்தேன். மிக அருமையாக இருந்தது. ஒரு எழுத்தாளனின் வெற்றி தான் எழுதுவதை தனது வாசகர்கள் உணரும்படி செய்வதே. உங்கள் மேகமலை கட்டுரைப் படிக்கும்போது எனக்கும், அந்த இடத்தில் உங்களுடன் சுற்றித் திரிந்த அனுபவம் ஏற்பட்டது. உங்களது எழுத்தாளுமை, சொல்லாற்றல் எல்லாம் அந்த ஒருக் கட்டரையில் மிக அதிக அளவில் தென்படுகிறது. கட்டுரைத் தொடர்ந்து இரண்டு முறைப் படித்து விட்டேன். மீண்டும் இதேப் போன்று இடத்திற்கு நீங்கள் செல்ல வேண்டும். அதனையும் பதிவு செய்ய வேண்டும் என்று நான் வேண்டிக் கொள்கிறேன்.

மேலும், புகைப் படங்களில் நீங்கள் தனியே நிற்கும் புகைப்படத்தை மீண்டும் ஒரு முறை பாருங்கள. ஒரு கதாநாயகன் தோற்றம் அதில் தெரிகிறது. அருமை.

நாங்கள் சமீபத்தில் கூடு என்றொரு இணைய இதழை தொடங்கி உள்ளோம். (www.koodu.thamizhstudio.com) இதழை பார்த்துவிட்டு, படித்துவிட்டு உங்கள் கருத்துகளை பதிவு செய்தால் அது எங்களுக்கு ஊக்கம் கொடுக்கும்.

www.koodu.thamizhstudio.com

நன்றி.
அருண். மோ.

 

அன்புள்ள அருண்,

 

பயணங்களை எழுதிப்பார்ப்பது ஒரு பெரிய இன்பம். சென்று வந்த இடங்களை மொழியால் திரும்ப உருவாக்கிக்கொள்ள முடிகிறது

 

கதாநாயகன் என்றதற்கு நன்றி. ஏற்கனவே ஒரு நண்பர் வில்லன் என்று சொல்லியிருக்கிறார்

 

ஜெ

 

 

அன்புள்ள ஐயா வணக்கம்

 

நலம் நாடுகிறேன்.

 

மேகமலைக்கு எங்களை அழைத்துச் சென்றமைக்கு நன்றி.

அழகிய பதிவு.

 

சின்னமனூர் செப்பேடு தமிழக வரலாற்றில் குறிப்பிடத்தகுந்தது.

“சின்னமனூர் ஓடை சேலுகெண்ட மீனு” இளையராசா பாடலில் மணக்கும்.

அந்தப் பகுதியைப் பார்க்க வேண்டும் எனக்கு ஓர் ஆவல் பல ஆண்டுகளாக இருக்கிறது.

 

முன்பு இதுபோல் வேலூர் மாவட்டம் எங்களுக்கு எட்டாததாக இருந்தது.

பின்னாளில் 7 ஆண்டுகள் வேலூர் மாவட்டத்தில் பணியில் இருந்தேன்.

அதுபோல் பல நாள் தேனி,கம்பம் பகுதியில் இருக்க வேண்டும் என்ற ஆவல் உள்ளது.

 

கட்டுரை படித்துத் தேற்றிக்கொண்டேன் மனதை.

மு.இளங்கோவன்

புதுச்சேரி

 

 

அன்புள்ள இளங்கோவன்

 

சின்னமனூர் மலைகள் சூழ கிட்டத்தட்ட கன்யா

குமர் மாவட்டம் போலவே இருக்கிறது. ஆனால் அழகிய இடங்கள் இந்நாட்டில் ஏராளமாக உள்ளன. எல்லா இடத்துக்கும் சென்று வேலைபார்க்க முடியுமா என்ன?

 

ஜெ

 

அன்புள்ள ஜெயமோகன்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குறித்தும், புது மண்டபம் குறித்தும் என் மன வேதனையைச் சொல்லியிருக்கிறீர்கள். நான் முன்பு ஒரு முறை இணையத்தில் இது குறித்துப் புலம்பியதைக் கீழே இட்டுள்ளேன்.

 

கோவிலுக்குள் கடைகள் இருந்தால் என்ன என்றார்கள். எப்படிச் சொல்லி புரிய வைப்பது என்று தெரியவில்லை. கோவிலுக்குள் கடைகள் இருந்தால் உனக்கென்ன, புது மண்டபட்தின் உள்ளே போய் பார்க்க முடியாவிட்டால் உனக்கு என்ன? அங்கு புழுதி அப்பிக் கிடந்தால் யாருக்கு என்ன என்ற உணர்வுதான் நம் மக்களுக்கு இருக்கிறது. இதை நான் சொன்னால் என்னை கிறுக்கன் மாதிரிப் பார்க்கிறார்கள்.

 

நீங்கள் அமெரிக்காவிலோ, ஆஸ்தேரிலியாவிலோ, தாய்லாந்திலோ எந்தவொரு வரலாற்று சிறப்புமிக்க இடத்தையும் இப்படிக் கேவலமாக வைத்திருப்பதைக் கண்டதுண்டா? எந்த ஒரு தொன்மையான இடங்களையும் அசிங்கமான கடைகளால் நிரப்பியிருப்பதைக் கேட்டதுண்டா?

தமிழர்கள் இது போன்ற பொக்கிஷங்களுக்கு எல்லாம் அருகதையுள்ளவர்கள்தானா? பாமியான் புத்தரை தாலிபான்கள் உடைத்தற்கும் நம் கோவில்கள் எல்லாம் வியாபார ஸ்தலங்களாக்குவதற்கும், மணலால் அடித்துச் சிலைகளை மூளியாக்குவதற்கும், அக்ரிலிக் பெயிண்ட் அடித்து அசிங்கப் படுத்துவதற்கும், இடிபாடுகளில் குப்பைக் கூளங்களாக இருக்க விடுவதற்கும் என்ன வித்யாசம்?

 

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இன்னுமொரு விதத்திம் மிகுந்த ஆபத்தில் இருக்கிறது. கோவிலில் இருந்து 20 அடி தூரத்தில், சித்திரை வீதியில் பல காஷ்மீரக்  கடைகள் உள்ளன. காஷ்மீரத்தில் நாம் போய் ஒரு அடி நிலம் கூட வாங்க முடியாது. ஆனால் அங்கிருக்கும் தீவீரவாதிகள் இங்கு வந்து சர்வசாதாரணமாகக் கடை போட முடிகிறது. அதுவும் கோவில் மதில் சுவரில் இருந்து பத்திருபது அடிக்குள்ளேயே.

 

அவர்கள் யாரும் அங்கு எதையும் விற்பதற்காக கடைகள் வைத்திருப்பதாக எனக்குத் தெரியவில்லை. சாதாரண பேப்பர் கூழ் பொம்மையை ஆயிரம் ரூபாய் என்கிறார்கள்.  ஏற்கனவே இந்தக் கடைக்காரர்களில் சிலர் தீவீர்வாத செயல்களுக்காகக் கைது செய்யப் பட்டிருக்கிறார்கள் என்னும் பொழுது இவர்களை எப்படி கோவிலுக்கு மிக அருகில் கடை வைக்க அனுமதித்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அவர்கள் கடைகளின் உள்ளிருந்து கொண்டு கோவிலைத் தாக்கினால் கோவில் தரை மட்டமாகி விடும். இனியொரு முறை மாலிக்காபூர்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை அழித்தால் மீண்டும் கட்டித் தருவதற்கு நாயக்க மன்னர்கள் வரப் போவதில்லை. இடிபாடுகளை எடுத்து விட்டு அங்கு அப்பார்ட்மெண்ட் கட்டி விட்டு விடுவார்கள்.

 

இப்பொழுது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை விட உயரமாகக் கட்டிடம் கட்டக் கூடாது என்று இருந்த சட்டத்தை சமீபத்தில் நீக்கியிருக்கிறார்கள். இனிமேல் மீனாட்சி அம்மன் கோவில் கோபுரங்களை நீங்கள் விமானத்தில் போகும் பொழுது மட்டுமே காண முடியும்.  நீங்கள் சொன்ன அம்மா கட்சி அரசியல்வாதி ஒரு கிறிஸ்துவர். கோவிலின் பெரும்பான்மையான கடைகளைக் குத்தகைக்கு எடுத்திருப்பவர்களோ முஸ்லீம்களும் நாஸ்திகக் கட்சியினரும். அவர்கள் யாரையும் அங்கிருந்து அப்புறப் படுத்தி விட முடியாது.

 

 

நம்பிக்கையில்லாதவர்களின் கைகளில் கோவில் நிர்வாகம் இருக்கும் பொழுது அதை இப்படித்தான் அசிங்கமாக வைத்திருப்பார்கள். அவர்களுக்கு அதன் மதிப்பும் தெரியாது, பக்தியும் கிடையாது அவர்களுக்கு அது காசு பார்க்கக் கூடிய மற்றொரு வியாபார இடம் அவ்வளவுதான். நான் இங்கு மதவாதம் பேசவில்லை. எந்த மதத்தவராக இருந்தாலும் நம்பிக்கையில்லாதவராக இருந்தாலும் அதன் புராதனப் பாரம்பரியப் பெருமைகளை மதித்து நடப்பவராக இருந்திருந்தால் பிரச்சினையில்லை. அவர்களுக்கு அது வெறும் கருங்கல்லால் ஆன ஒரு ரியல் எஸ்டேட் அவ்வளவுதான். பிற மத வழிபாட்டு தலங்களுக்குள்ளும் அவர்களது புராதனமான சின்னங்களுக்குள்ளும் அவர்கள் மதச் சின்னங்களின் மீது நம்பிக்கையற்றவர்களை கடை வைக்கவோ, குத்தகைக்கு எடுக்கவோ அல்லது வேறு நிர்வாகத்திற்கோ அனுமதிப்பார்களா?

நம்பிக்கையில்லாதவர்கள் கைகளிலும் நம் பாரம்பரியச் செல்வங்களின் அருமை தெரியாதவர்கள் கைகளிலும் இது போன்ற நிர்வாகங்கள் போகும் பொழுது அவை அழிவையே எதிர்கொள்கின்றன. இவர்கள் ஒரு புறம் என்றால் புனருத்தாரணம் செய்கிறேன் பேர்வழி என்று சாண்ட் ப்ளாஸ்ட் செய்யும், அக்ரில்க் பெயிண்ட் அடித்து வைக்கும் நம் அனுகூலச் சத்ருக்கள் இன்னொரு புறம். எங்கு போய் முட்டிக் கொள்வது?

வேதனையுடன்
ச.திருமலைராஜன்

 

 

 

புது மண்டபம்
————————

அம்மன் சன்னதி உள்ளே நுழையுமிடத்து கடைகள், கடைகள், கடைகள். வளையல்
கடைகள், குங்குமம் சந்தனம் விற்கும் கடைகள், செப்புச் சாமான்கள், விளையாட்டுச்
சாமான்கள், ப்ளாஸ்டிக் சாமான்கள், அலங்காரச் சாமான்கள், பொம்மைகள்,
நாமக்கட்டி, சாந்துப் பொட்டு, ஸ்ரீசூர்ணம்,மரப்பாச்சி பொம்மைகள், மாக்கட்டி,சாம்பி
ராணி, தலையாட்டி பொம்மைகள், ரசனையில்லாமல் செய்யப் பட்ட கோவில் படங்கள்,
கவரிங் நகைகள், தலைச் சாமான்கள், நடன அலங்காரப் பொருட்கள் என்று
இன்னெதன்று சொல்ல இயலாத பல வகைச் சாமன்களும் விற்கும் கடைகளால் நிரம்பி
உள்ளன. தமிழ்நாட்டில் மட்டுமே இந்தக் கோவில் பகுதிகளில் வியாபாரம் நடத்தும் அநி
யாயம் நடக்கிறது. இதைத் தட்டிக் கேட்ட ஒருவர் வெட்டிக் கொல்லப் பட்டார்.

அம்மன் சன்னிதி வழியாக வெளியேறினால் எதிர்த்தாற் போல் மன்னர் திருமலை நாயக்கர்
கட்டிய வசந்த மண்டபம் புது மண்டபம் என்று அழைக்கப் படுகிறது. பெயர்தான் புது
மண்டபமே ஒழிய, புழுதியடைந்து பழைய மண்டபமாக உள்ளது. புது மண்டபத்தைத்
தொட்டடுத்து கோவில் இடத்தில் இருப்பதோ ஹாஜீ மூசா ஜவுளிக் கடல். புதுமண்டபத்தின் உள்ளே 28 அற்புதமான சிலைகள் இருப்பதாகப் பெரியதோர் அறிவிப்புப் பலகை வைத்துள்ளார்கள் (படத்தில்
பார்க்கவும்). ஆனால் உள்ளே நுழைந்தால் கால் வைக்க இடமில்லாமல் வரிசை வரி
சையாக கடைகள். புது மண்டபத்தின் இரு புறமும் அகழி போல் ஒரு நடைபாதையும்
நடைபாதையின் மேலே உள்ள மண்டபப் பகுதியின் ஒரு புறம் வரிசையாகப் புத்தகக்
கடைகள். எல் கே ஜி முதல் டாக்டர் இன்ஜினியர் படிப்புக்கான புத்தகங்க்ள் வரை கி
டைக்கின்றன. ஒரு புறத்தில் இருந்து இன்னொரு புறம் பார்த்தால் வரிசையாக புத்தகக்
கடைப் பெயர்கள் அலங்கரிக்கின்றன. இன்னொரு புறம் வரிசையாக பாத்திரக் கடைகள்.
பித்தளைப் பாத்திரங்கள், வெங்கலப் பாத்திரங்கள், தோசைக்கல், சப்பத்திக் கல், ஜாரிணி
க் கரண்டிகள், பெரிய பெரிய வெங்கலக் குண்டான்கள், தேங்காய் துருவி,
கரி அடுப்பு, அருவாள்மனை, கத்தி, தாம்பாளம், அப்பளக் குழவி, குழிப் பணியாரப்
பாத்திரம் என்று இன்று நவீன சமயலறைகளில் காண முடியாத, எவர்சில்வர் அல்லாத அரி
ய வகைப் பழங்காலப் பாத்திரங்கள் விற்கும் கடைகள். நடுவே உள்ள மண்டபத்திலோ
வரிசை வரிசையாக கண்ணாடி வளையல், கவரிங் நகைகள் விற்கும் கடைகள். அதன்
நடுவே, வரிசை, வரிசையாக தூண்களில் ஆறடி, எட்டடி உயரச் சிலைகள் ஒவ்வொரு சி
லையின் அடியிலும் தையல் மெஷினில் தையற்காரர்கள் அல்லது கடைகள்.
இந்தக் அங்காடிகளின் நடுவே அமைந்துள்ள தூண்களில் சந்தனம், மஞ்சள், குங்குமம்,
விபூதிக் குளியலில் அதி அற்புத அழகுடன் கூடிய சிற்பங்கள் ஒளிந்து கொண்டு நிற்கி
ன்றன. தையல்காரகளையும், கவரிங் கடைக்காரர்களையும், புத்தகம் பாத்திரம் வாங்க
வந்தோரையும் சமாளித்து, சிற்பங்களைத் தேடி, தேடிக் கண்டு பிடிக்க இந்தக் கடைகளி
ன், கும்பல்களின் நடுவே நீந்த வேண்டும். சாம்பிளுக்கு சில சிற்பங்களை படம் பி
டித்துள்ளேன் பாருங்கள், அதுவும் அந்தப் புத்தகக் கடையின் முன்னே கையில் வி
ல்லுடன் நிற்கும் அந்த வீரனை (மன்மதன்?) பாருங்கள். பாவமாக நிற்கிறது அழகு
ததும்பும் அந்த அதி அற்புத சிற்பம், ஒரு மூட்டை தூசியைப் பூசிக் கொண்டு. பாராதியார்
என்ன சொல்வது? இங்கே சிலைகள் நிஜமாகவே (லிட்டரிலி) புழுதியில் கிடக்கி
ன்றன. அதில் அடைந்துள்ள தூசியை அந்தக் கண்றாவியை உங்கள் கண்களால்
பாருங்கள். மண்டபத்தின் மறு பகுதியில் கடைகள் இல்லாமல் இருக்கிறது, ஆனால்
உள்ளே நுழைய விடாமல் கம்பி கிராதிகள் போட்டுத் தடுத்திருக்கிறார்கள். அந்த மண்டபத்தி
ன் விதானத்தில் கலையெழில் வாய்ந்த அருமையான மரவேலைப் பாடுகளும்,
வளைவுகளும் நிறைந்து பிரமாதமாகக் காட்சியளிக்கிறது. ஆனால் அதை பகலில்
சென்றால் கூட பார்க்க இயலாவண்ணம் இருட்டு மண்டிக் கிடக்கிறது. கடைகளும்,
இருளும் தூசியும், அழுக்கும் மண்டிக் கிடக்கின்றது 350 ஆண்டுகள் பழமையான அந்த
மண்டபம். திருமலை நாயக்கர் மண்டபம் இன்றிருக்கும் நிலமையைப் பார்த்தி
ருந்தால் அங்கேயே தூக்கில் தொங்கியிருப்பார் அல்லது வரும் ஆத்திரத்தில் நமது ஆட்சி
யாளர்களின் தலைகளைச் சீவியிருப்பார்.

ஒரு தாஜ் மஹாலிலோ, ஒரு செங்கோட்டையிலோ, ஒரு வேளாங்கன்னியிலோ, ஒரு
கோவாவின் பழமையான சர்ச்சுகளிலோ, ஒரு மைசூர் அரண்மனையிலோ, ஒரு
ஜெய்ப்பூர் அரண்மனையிலோ இந்த அக்கிரமத்தைக் காண முடியுமா? பழம் பெரும் சி
ன்னங்களை முழுக்க முழுக்க ஒரு வியாபாரஸ் ஸ்தலமாக்க அனுமதிப்பார்களா?
பழமையையும், பாரம்பரியத்தையும், சிற்பக் கலைகளின் உன்னதங்களையும்,
தொன்மையான அழகினையும் பேணிப் பாதுகாக்காத , புழுதியிலும் தூசியிலும் எறிந்த
ஒரு சமுதாயத்தை எங்காவது காண முடியுமா? நாம் இத்தனைச் சிறப்பு மிக்க ஒரு
நகரத்துக்கு அருகதையானவர்கள்தானா? தனது முன்னோர்களின் பாரம்பரியப்
பெருமைகளைக் கட்டிக்காக்காமல் அதை புழுதியில் விட்டெறிந்த, கடைகளின் நடுவே சீரழி
த்துக் கொண்டிருக்கும் ஒரு தலைமுறையில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இந்தக் கொடுமையயை மதுரைப் புது மண்டபத்தில் வயிறெரியக் காணலாம். வேறு எந்த
மத நினைவுச் சின்னங்களும் இந்த அளவு பாழ்பட்டுக் கிடப்பதில்லை. ஏன் இந்த அலட்சி
யம்? ஏன் இந்த அலங்கோலம்? கோவில்களின் உள்ளே ஏன் கடைகள் இருக்க
வேண்டும்? ஏன் அவைகளை வெளியேற்றக் கூடாது? புது மண்டபம் மீட்டெடுக்கப் பட
வேண்டும். அதன் உள்ளேயுள்ள கடைகள் அப்புறப் படுத்தப் பட்டு அதன் முழு
வனப்பும், அழகும், சிற்பங்களும் மக்களின் பார்வைக்கு வைக்கப் பட
வேண்டும். அருங்காட்சியகங்களில் உள்ளது போன்ற விளக்குகள் பொருத்தப்
பட்டு அதன் எழிலார்ந்த விதானங்களை, அழகுப் பொக்கிஷங்களை, இதுகாறும் மறைத்து
வைக்கப் பட்ட புதையல்களை உலகுக்கு அறிவிக்கப் பட வேண்டும். இந்துக் கோவி
ல்கள் மட்டும் ஏன் மீண்டும் மீண்டும் இப்படிச் சூறாயாடப் படுகின்றன? அலட்சி
யமும் அலங்கோலமும் தாண்டவமாடுகின்றன? இத்தனைக்கும் இதன் வருமானம்
முழுவதும் அரசாங்கம் எடுத்துக் கொள்கிறது. இருந்தும் இந்த பாரபட்சம்.
என்றாவது ஒரு நாள் நமது பாரம்பரியப் பெருமைகளை உண்மையாகவே மதிக்கத் தெரி
ந்த ஒரு அரசாங்கம் வருமானால், இந்துக் கடவுள்களையும், கோவில்களையும், சரித்திரச்
சின்னங்களையும் அவமரியாதை செய்யாத, கொள்ளையடிக்காத ஒரு அரசாங்கம்
வருமானால் இந்த பாரம்பரியச் செல்வங்களின் சூறையாடல்களுக்கு ஒரு முடிவு கி
ட்டலாம். ஆனால் அதற்கு ஒரு கிருஷ்ணதேவராயரோ, திருமலைநாயக்கரோ, குலசேகரப்
பாண்டியனோ, சுந்தர பாண்டியனோ பிறந்துதான் வர வேண்டும். ஆனால் அது வரை
இந்த வரலாற்றுப் பெருமை மிக்க சின்னங்கள் நிலைக்குமா? எதிர்காலத்தில் இப்படிக்
கடைகளைப் பரத்தி அசிங்கப் படுத்தத்தான் போகிறார்கள் அதற்கு நாமே இடித்து விட்டுப்
போய் விடலாம் என்று மாலிக் கா·பூர் நினைத்திருப்பானோ?

 

 

 

அன்புள்ள திருமலைராஜன்

 

பல ஆலயங்களில் இப்போது சிற்பங்களுக்கு அக்ரிலிக் பெயின்ட் அடிக்கிறார்கள் தெய்வங்களுக்கு கோடுபோட்ட அன்டர்வேர் அணிவித்து விடுகிறார்கள். தேவியருக்கு பிரா போட்டுவிடுகிறார்கள். நாளைக்கு அந்த பெயின்ட் கறுக்கும்போது அதைச் சுரண்டி எடுக்க மணல்வீச்சுதான் செய்யவேண்டும் .சிற்பத்தை அழிக்க இதுவே சிறந்தவழி.

 

பல ஆலயங்கலில் கோயில்களுக்கு கீழ்த்தரமான மார்பில் அல்லது டைல்ஸ் ஒட்டுகிறார்கள். நான்குவருடங்களில் உடைந்து கறுத்து அழுக்கு தேங்கி கிடக்கின்றது.  அசிங்கமான பெரிய படங்களை காசுகொடுத்து வாங்கி தங்கள் பெயரை எழுதி கொண்டு மாட்டுகிறார்கள்.

 

நமது கோயில்கள் இங்கே முழுமையாக அழிக்கப்படுகின்றன. எ, எஃ உசைன் பற்றி கேட்ட ஒருவருக்கு நான் சொன்ன பதில் இதுவே. உச்சேன் ஒன்றும் செய்யவில்லை. நம் கோடில்களை அழிப்பது நாமேதான் என. அதற்கு எதிராக சிறிய ஒரு குரல்கூட தமிழ்நாட்டில் இருந்து எழுவதில்லை

 

ஜெ

முந்தைய கட்டுரைசு.வேணுகோபாலின் மண் 2
அடுத்த கட்டுரைஉயிர்மை வெளியீடாக ஜெயமோகனின் 10 நூல்கள்