அறம் கடிதங்கள்

அறம் விக்கி

அன்புள்ள எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு ஜாக்கிசேகர் எழுதிக்கொள்வது வணக்கம்… வாழிய நலம்.
தங்களின் அறம் சிறுகதைகளில் சோற்றுக்கணக்கு கதையை சில நாட்களுக்கு முன் வாசித்தேன்… கடைசி பாராவுக்கு வரும் போது கண்கள் ஒரு மாதிரி கலங்கியது.. கட்டுப்படுத்தியும் கண்ணீரை அடக்க முடியவில்லை… வாசித்து முடித்தவுடன் உங்களுக்கு கடிதம் எழுத தோன்றியது… உடனே எழுத கை பறபரத்தது.. ஆனாலும் அந்த ஆர்வத்தை கட்டுப்படுத்திக்கொண்டேன்…..

ஜாக்கி சேகர் கடிதம்

அன்புள்ள ஜாக்கி சேகர் அவர்களுக்கு,

நன்றி. உணர்வுபூர்வமாக எழுதியிருந்தீர்கள். இலக்கியத்துடன் நேரடியாக வாழ்க்கை சம்பந்தப்படும் தருணங்கள், அவற்றின் வழியாகவே அப்படைப்பின் நுட்பங்கள் பிடிகிடைக்கும் தருணங்கள் மகத்தானவை. அவை நம்மை நாமே கண்டுகொள்ளும் தருணங்களும்கூட. உங்கள் கடிதத்தில் உங்களைப் பார்த்தேன். ஜெ

அன்புள்ள திரு.ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்

திருச்சி SRV பள்ளியில் தன் ஆசிரியர் பணியை நேசிக்கும் எனது தோழியின் மூலம்”அறம்” புத்தகம் படிக்க நேர்ந்தது.
அற்புதமான படைப்பு…

உண்மையான நிகழ்வுகளை அப்படியே உணர்ந்து படிக்கும் போது நம் மீது ஏற்படுத்தும் தாக்கம் மிக அதிகம்,மற்றும் நாம் வாழ்வதற்கான குறிக்கோளை தெளிவு படுத்துகிறது.

எங்களது மனமார்ந்த நன்றிகள்.
மேலும் ஏன் தாங்கள் அறம் இரண்டாம் பாகம் எழுத கூடாது?

அன்புடன்
மணிகண்டன்.ப
சீனா

அன்புள்ள மணிகண்டன்,

அது ஒரு மனஎழுச்சி. அதை செயற்கையாக நீட்டிக்கச் செய்ய முடியாது. ஆனால் வெவ்வேறு மனஎழுச்சிகளின் விளைவுகளான படைப்புகள் அடுத்த தொகுதிகளான ‘ஈராறுகால்கொண்டெழும்புரவி’ ‘வெண்கடல்’ நூல்களில் உள்ளன.

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 75
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 76