லோகிததாஸ் வாழ்க்கைக்குறிப்பு

லோகித தாஸ் மலையாளத்தின் முக்கியமான திரைக்கதையாசிரியர்களில் ஒருவர். எம்டிவாசுதேவன்நாயர் .பி.பத்மராஜன் ஆகியோருக்குப்பின் லோகிததாஸ் மலையாளத்தின் மிகச்சிறந்த திரைக்கதையாசிரியர் எனப்படுகிறார். முழுபெயர் அம்பழத்தில் கருணாகரன் லோகிததாஸ் . 10.5.1955 ல் பிறந்தார். 28.6.2009ல் இறந்தார்.

 

திரிச்சூர் மாவட்டத்தில் உள்ள முரிங்ஙூர் என்ற கிராமத்தில் பிறந்தவர் லோகிததாஸ். எரணாகுளம் மகாராஜாஸ் காலேஜில் பட்டப்படிப்பு முடித்தபின் திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரியில் ஆய்வக உதவியாளர் படிப்பை முடித்தார். சிறிதுகாலம்டரசு மருத்துவமனை ஊழியராக பணியாற்றினார்.

 

ஆரம்பத்தில் சிறுகதைகள்தான் லோகி எழுதிவந்தார்.  மலையாள நாடக ஆசிரியரும் இடதுசாரி தலைவருமான தோப்பில் பாசி நடத்திவந்த கெ.பி.ஏ.சி [கேரளா பீப்பிள்ஸ் ஆர்ட் கிளப்]க்காக ஒரு நாடகத்தை 1986ல் லோகிததாஸ் எழுதினார். சிந்து அமைதியாக ஓடுகிறது [சிந்து சாய்தமாய் ஒழுகுந்நு] என்ற அந்நாடகம் பரவலாக கவனிப்பு பெற்றது.  அதற்கு மாநில அரசின் சிறந்த நாடகத்துக்கான விருது கிடைத்தது. பிற்பாடு ‘ கடைசியில் வந்த விருந்தாளி [அவசானம் வந்த அதிதி ] கனவு விதைத்தவர்கள் [ஸ்வப்னம் விதச்சவர்] போன்ற நாடகங்களையும் எழுதினார்

 

நாடக நடிகராக இருந்து சினிமாவில் புகழ்பெற்றிருந்த திலகன் லோகித தாஸை சினிமாவுக்குக் கூட்டிவந்தார். சிபி மலையில் இயக்கிய தனியாவர்த்தனம் லோகிததாஸின் முதல் படம்.  ஒரு பாரம்பரிய நாயர் குடும்பத்தில் இருந்துவரும் மூடநம்பிக்கைக்குப் பலியாகும் பள்ளி ஆசிரியரைப்பற்றிய அந்தப்படம் மிகப்பரவலான கவனத்தைப்பெற்று லோகிததாஸை பிரபலப்படுத்தியது.1997ல் பூதக்கண்ணாடி என்ற படத்தை லோகிததாஸ் இயக்கினார். இதுதான் இயக்குநராக அவரது முதல் முயற்சி.

 

லோகிததாஸின் மனைவி பெயர் சிந்து, ஹரிகிருஷ்ணன் விஜயசங்கர் என்று இரு மகன்கள் இருக்கிறார்கள்.

 

 

லோகி கீழ்க்கண்ட திரைப்பட விருதுகளை பெற்றிருக்கிறார்

.திரைக்கதைக்கான கேரள அரசு விருது தனியாவர்த்தனம் 1987

நல்ல திரைபப்டத்துக்கான கேரள அரசு விருது 1997

 

மிகச்சிறந்த அறிமுக இயக்குநர் படத்துக்கான தேசிய விருது  பூதக்கண்ணாடி 1997

 

மிகச்சிறந்த திரைக்கதைக்கான ·பிலிம் கிரிட்டிக்ஸ் அசோஷியேஷன் விருதுகள்

 

தனியாவர்த்தனம் [1987]

தசரதம் [1989]

கிரீடம் [1990]

பரதம் [1991]

செங்கோல் [1993]

சகோரம் [1994]

சல்லாபம் [1994]

தூவல்கொட்டாரம் [1996]

பூதக்கண்ணாடி [1997]

ஓர்மச்செப்பு [1998]

ஜோக்கர்[ 1999]

வீண்டும் சில வீட்டுகாரியங்ஙகள் [2000]

கஸ்தூரிமான் [2003]

நிவேத்யம் [2007]

 

மிகச்சிறந்த திரைப்படத்துக்கான ·பிலிம் கிரிட்டிக்க்ஸ் அசோசியேஷன் விருது

 

பூதக்கண்ணாடி [1997]

ஜோக்கர்[ 1999]

கஸ்தூரிமான் [2003]

நிவேத்யம் [2007]

 

லோகிததாஸ் திரைக்கதை எழுதிய படங்கள்

 

1987 தனியாவர்த்தனம்

1987 எழுதாப்புறங்ஙள்

1988 குடும்பபுராணம்

1988 விசாரண

1988 முக்தி

1989 கிரீடம்

1989 ஜாதகம்

1989 தசரதம்

1989 முத்ர

1989 மஹாயானம்

1990 சஸ்னேகம்

1990 மாலயோகம்

1990 ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா

1990 குட்டேட்டன்

1991 தனம்

1991 பரதம்

1991 அமரம்

1991 கனல்காற்று

1992 வளையம்

1992 கமலதளம்

1992 ஆதாரம்

1992 கௌரவர்

1993 வெங்கலம்

1993 செங்கோல்

1993 வாத்ஸல்யம்

1994 சகோரம்

1994 சாகரம் சாட்சி

1995 ஸாதரம்

1996 சல்லாபம்

1996 தூவல்கொட்டாரம்

1997 பூதக்கண்ணாடி

1997 காருண்யம்

1998 ஓர்மசெப்பு

1998 கன்மதம்

1999 வீண்டும் சில வீட்டுகாரியங்ங்கள்

1999 அரயன்னங்ஙளுடே வீடு

2000 ஜோக்கர்

2001 சூத்ரதாரன்

2003 கஸ்தூரிமான்

2003 சக்ரம்

2006 சக்கரமுத்து

2007 நிவேத்யம்

 

 

லோகிததாஸ் இயக்கிய படங்கள்

 

1997 பூதக்கண்ணாடி

1997 காருண்யம்

1998 ஓர்மச்செப்பு

1998 கன்மதம்

2000 அரயன்னங்களுடே வீடு

2000 ஜோக்கர்

2001 சூத்ரதாரன்

2003 கஸ்தூரிமான்

2003 சக்ரம்

2005 கஸ்தூரிமான் [தமிழ்]

2006சக்கரமுத்து

2007 நைவேத்யம்

 

 

 

 

 

 

லோகிததாஸ் நடித்த படங்கள்

 

1992 ஆதாரம்

1999 வீண்டும் சில வீட்டுகாரியங்ங்கள்

2002 ஸ்டோப் வயலன்ஸ்

2005 தி காம்பஸ்

2005 உதயனாணு தாரம்

 

 

லோகிததாஸ் தயாரித்தபடம்

 

 

 

2005 கஸ்தூரிமான் [தமிழ்]

 

 

 

லோகிததாஸ் பாடல் எழுதிய படங்கள்

 

2000 ஜோக்கர். பாடல்  ‘அழகே நீ பாடும்’

2000 ஜோக்கர்        ‘செம்மானம் பூத்தே’

2003 கஸ்தூரிமான்      ‘ராக்குயில்பாடி

2007 நிவேத்யம்        ‘கோலக்குழல் விளி கேட்டுவோ

முந்தைய கட்டுரைகண்ணதாசன், கடிதங்கள்
அடுத்த கட்டுரைசு.வேணுகோபாலின் மண் 2