யாழிசை ஓர் இலக்கியப்பயணம் கல்பற்றா நாராயணனைப்பற்றி தேடிக்கொண்டிருக்கும்போது இந்த இணையதளத்தை கண்டேன். லேகா என்பவர் அவருக்குப்பிடித்தமான நூல்களைப்பற்றி எழுதியிருக்கிறார். பெரும்பாலும் நேரடியான வாசக அனுபவக்குறிப்புகள். கி.ராஜநாராயணன், வண்ணதாசன், பெருமாள்முருகன்,எஸ்.ராமகிருஷ்ணன் போன்றவர்களின் நூல்களைப்பற்றி எழுதியிருக்கிறார். வாசிப்பை விவாதிக்கவிழைபவர்கள் வாசிக்கலாம்.
கல்பற்றாவை பற்றிய குறிப்பில் பொதுவான வாசிப்பனுபவத்துக்கு அப்பால் செல்லும் ஓர் அந்தரங்க ஈடுபாடு தெரிகிறது.
கல்பற்றாநாராயணன் கவிதைகள் 2 கல்பற்றா நாராயணன் கவிதைகள்