ஒரு வலைப்பதிவு

அன்புள்ள ஜெயமோகன்,
வணக்கம். என் பெயர் சோ.சுப்புராஜ். உங்களின் தீவிர வாசகன் நான். உங்களின் வலைத் தளப் பதிவுகளையும் தினசரி வாசித்துக் கொண்டு தான் இருக்கிறேன். எப்படி தினசரி உங்களால் இவ்வளவு எழுத முடிகிறது என்கிற ஆச்சர்யமும் பிரமிப்பும் எனக்கு விலகவே இல்லை. வாசகர்கள் ஆர்வக் கோளாறீல் கேட்கிற கேள்வியிலிருந்தே புதிய கட்டுரைகளைத் தொடங்கி விடுகிறீர்களே! ஆனால் அப்படித் தொடங்கினாலும் சும்மா மேலோட்டமாய் பேசாமல் விஷயத்தின் அடி ஆழம் வரைப் போய் வண்டல் வண்டலாய் விஷயங்களை வாரி இறைக்கிறீர்கள்! தொடரட்டும் உங்களின் இலக்கியப் பணி!
சமீபத்தில் நானொரு வலைப்பதிவு தொடங்கியிருக்கிறேன். யாராலும் பார்வையிடப் படாமல் நானே எழுதி நானே வாசித்துக் கொள்வதான அலுப்பு மேலிடுகிறது. உங்களின் வலைத் தளத்தில் என்னுடைய வலைப் பதிவு பற்றிய குறிப்பைக் கொடுக்க முடியுமா? அதன் மூலமாவது யாராவது வந்து வாசிக்கிறார்களா என்று பார்க்கலாம்.
என்னுடைய வலைப் பதிவின் முகவரி: www.silviamary.blogspot.com.
மிக்க நன்றி!
அன்புடன்
சோ.சுப்புராஜ்.

அன்புள்ள சுப்புராஜ்

நலம்.

வலைப்பதிவு கண்டேன். தீவிரமாக எழுத முயன்றிருப்பதற்கு பாராட்டுக்கள்.

வலைப்பதிவுக்கு முதல்முறை வாசகர்களை வரவழைப்பது எளிது. தக்கவைப்பதுதான் கடினம். முயலுங்கள்

ஜெ

முந்தைய கட்டுரைகாந்தியின் பிள்ளைகள் கடிதங்கள்
அடுத்த கட்டுரைசர்வதேச தமிழ் எழுத்தாளர் விழா