மலேசியா மறுபக்கம்

ஆசிரியருக்கு வணக்கங்கள் பல,
தாங்களின் மலேசிய கட்டுரை படித்தேன்…..

அங்கு(மலேசியா) இந்தியாவில் இருந்து வந்து வயிற்று பிழைப்புக்காகவும் தாங்களின் குடும்ப முன்னேற்றத்திற்காகவும் நம் இந்தியர்கள் பலர் கடினமான வேலை செய்கின்றனர்.
அவர்களை மனதளவிலும் மற்றும் உடல்ரீதியாகவும் வேலையிடங்களிலும் மற்ற இடங்களிலும் கொடுமை படுத்துவது நீங்கள் பரிதாபப்படும் இந்திய வம்சாவளி தமிழர்கள்தான் என்பது எனது வருத்தமான செய்தி.
குறிப்பாக தமிழ்த்தன்மையே இல்லாமல் பெரும்பாலான வம்சாவளி தமிழர்கள் வாழ்கிறார்கள்.என் போன்ற இந்தியாவில் இருந்து வந்து இங்கு வேலை செய்பவர்களை ஏளனம்(ஊர்க்காரர்கள்) செய்கிறார்கள்.
இவர்கள் தாத்தா பாட்டிகளும் என்னைப் போல பிழைக்க வந்த அன்றாடம் காய்ச்சிகள் தான் என்பதை அவர்களுக்கு நினைவு படுத்தினால் அவர்களுக்கு கோபம் வறும்.இருந்தும் அவர்களால் நம் மக்கள் மிகவும் கொடுமைபடுத்தப்படுகிறார்கள்.
சில நாட்களுக்கு முன் வந்த செய்தியை இதனுடன் இனைத்துள்ளேன்.
என் பார்வையில் எந்த தமிழனுக்கும்(இந்தியாவில் இறுந்து வந்து வேலை செய்யும்) இந்த மலேசியா வம்சாவளி இந்தியர்கள் உதவி செய்யவில்லை.நாங்களும் எதிர்பார்க்கவில்லை.ஆனால் அவர்கள் எங்கள் மீது பொறாமைப்படுகிறார்கள்.வெகு நேரங்களில் நம்மவர்கள் கடுமையாக தாக்கப்படுகிறார்கள்.மலேசியா காவல் துறையோ அல்ல இந்திய தூதரகம் இது போன்ற வன்செயல்களை கண்டுகொள்வது கூட இல்லை.
ஆனால் மலேசியாவில் உள்ள மலாய் ,சீன மக்களால் நம்மவர்களுக்கு எந்த தொந்தரவும் இல்லை.
மனம் வெதும்பி சொல்கிறேன் இந்த சூழ்நிலையில் இந்திய வம்சாவளியினர் தாக்கப்படுவது எனக்கு  மகிழ்ச்சியே.ஒரு நாள் இலங்கை அகதிகள் போல இந்தியாவுக்கு வருவார்கள் அந்த நாள் கூடிய விரைவில் வறும்.
நான் சொல்வதை தாங்கள் நம்ப மறுத்தால் தாங்கள் ஊரில் கண்டிப்பாக மலேசியா சென்று வேலை செய்பவர்கள் இருப்பார்கள் அவர்களை கேட்டுப் பாறுங்கள்.
பின் வறும் கேள்வி என் மனதில் எழுகின்றன.
நிலைமை இப்படி இருக்க தமிழ்நாட்டில் இருக்கும் நேற்றைய அரசியல்வாதி விஜயகாந்த் முதல் இன்றைய முதல்வர் வரை இருதயமே இல்லாத இந்த மலேசிய தமிழர்களுக்காக மிகுந்த வருத்தப்படுகிறார்கள்.அவர்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு பேசுகிறார்கள் என்னால் இவற்றை எல்லாம் சகித்துக்கொள்ள முடியவில்லை அது தான் தாங்களுக்கு எழுதுகிறேன்,என் கூற்றில் ஏதும் குறை இருந்தால் மன்னிக்குமாறு பண்போடு வேண்டிக்கொள்கிறேன்.
 
உண்மையுடன்
…..
 [கோரிக்கைக்கு ஏற்ப தனிப்பட்ட விவரம் தவிர்க்கப்பட்டுள்ளது]

**
அன்புள்ள சார்,

இந்தக்கடிதம் உங்களுக்கு பிடிக்காது. மலேசியத் தமிழர்கள் மீது அக்கரையுடன் எழுதியிருக்கிறீர். மலேசிய தமிழர்கள் உம்மை கூப்பிட்டு சோறு போட்டு பணம் தந்து விடுவதனால் இப்படியெல்லாம் எழுதுகிறீர்கள். இங்கே ஏராலமான தமிழ்நாட்டு மக்கள் தமிழர்கள் கூலிவேலைக்காக வந்து வாழ்கிறார்கல் என்பது தெரியுமா? கட்டிடங்கல் கட்டுகிரார்கல். எங்களை மலேசிய தமிழர்கள்தான் கூட்டி வருகிறார்கள். மாதம் 5000 இந்திய ரூபாய்க்கு அனுப்பலாமென்று வருகிறோம். எங்கலை அடிமை மாதிரி நடத்துகிஆர்கள். அடி உதை கூட உண்டு. பாஸ்போர்ட் பிடுங்கி கையில் வைத்திருப்பார்கல். கொடுக்க மாட்டார்கல். துரத்திவிட்டால் மலேசிய போலீஸ் பிடித்து அடித்து ஜெயிலில் அடைக்கும். ஆகவே பயந்து வாழ்கிரோம். மலேசியதமிழர்கள் கொஞ்சம்கூட கருணை இல்லாதவர்கள். கூலி கொடுக்க மாட்டார்கள்.சீனர்கள் எல்லாம் மிகமிக நல்லவர்கள். பினாங்கு பக்கம் உல்ல மலாய்காரர் கூட நல்லவர்கள். எல்லா இந்திய தமிழர்களிம் எப்படியாவது மலாய்காரர்கலிடம் போகவே ஆசைபப்டுகிரார்கள். எந்த இந்தியக்கார தமிழர்களாவது மலேசியதமிழர்போராட்டத்தை ஆதரிப்பார்களா என்று கேட்டுப்பாருங்கள். இந்த ஒரு வருசத்தில் மட்டும் 6 பேர் மலேசியாவில் கொடூரமாக காட்டில் கொன்று போட்டிருக்கிறார்கள். எந்த விசாரணையும் இல்லை. ஜூனியர் விகடன் மட்டும் செய்தி போட்டது. வேறு யாரும் போடவில்லை. கூலி கேட்டால் அடிதான். அதையெல்லாம் நீங்கள் கேட்டு எழுதுங்கள். அதுதான் நியாயம். பணம் வாங்கிக் கொண்டு எழுதாதீர்.

செல்வன்

**

அன்புள்ள ஜெயமோகன்

மலேசியா பற்றிய உங்கள் கட்டுரையை படித்தேன். முதல் விஷயம், காந்திஜி இன்றும் முக்கியமானவர் ஆகிறார்.  காரணம் முடிவு மட்டுமே அனைத்தையும் நியாயப்படுத்திவிடாது வழிமுறைகளும் நியாயபப்டுத்தபப்டவேண்டும் என்பதே. அகிம்சை வழிமட்டுமே எந்த இயக்கத்திலும் உரிய வெற்றியை பெறுவதற்கு இன்றியமையாதது. குறுகலான இன பிராந்திய உணர்ச்சிகளைச் சார்ந்த வழிமுறைகள் கடுமையான பிளவுகளை உருவாக்கி கடைசியில் அழிவையே உருவாக்கும். வெறுப்பரசியல் பாசிசத்தை உருவாக்கும். எந்த நல்விளைவுகளையும் அளிக்காது. சிறந்த உதாரணம் பெரியாரின் இயக்கம். கடுமையான பிராமண வெறுப்பை உருவாக்கிய அவர் தேவர் நாடார் வன்னியர் போன்ற மகக்ளிடமிருந்த சாதியவெறுப்புகளை கண்டுகொள்ள மறுத்தார்.

அரசியல் சட்டம் சாதி மத இன மொழி நிலப் பாகுபாட்டுக்கு எதிராக பேசும்போதேஆரசியல் கட்சிகள் இங்கே நேர் எதிராக செயல்பட்டு அதிகாரத்தை பிடிக்கின்றன. இந்தியாவில் மக்களுரிமைச் சட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்டுள்ள அரசியல் கட்சிகள் அரசியல்சட்டத்தின் நெறிகளுக்கு நேர் எதிராகவே எப்போதும் செயல்படுகின்றன. நமது முட்டாள் நீதிமன்றங்கள் இதைப்புரிந்துகொள்வதற்குப் பதிலாக பெரும்பான்மையின் விருப்பத்துக்குப் பணிந்து சாதி,இன அரசியலுக்கு பணிந்துபோகின்றன

இறால்பண்ணை விவகாரத்தில் ஜெகன்னாதன் செய்த முயற்சிகள் சரியான வழியில் அமைந்தவை. வன்முறை உருவாக்கும் குறுகியகால விளைவுகள் எப்போதுமே நேர் எதிராகத் திரும்பக்கூடியவை. நான் இன்னொருவனை வன்முறைமூலம் அடக எண்ணுவேன் என்றால் அவனும் அதை ஓரளவு அறிந்திருப்பான் என்றே நினைத்தல் வேண்டும். விளைவாக வன்முறையை நம்பும் இருசாராருமே அழிவை நோக்கிச் செல்லுவது எளிது என்று உணர வேண்டும்.

மனித உரிமைகள் பாதுகாக்கப்படும் சூழலை பல்வேறு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் மற்றும் இயக்கங்களைத் தொடர்புகொள்ளுதல் மூலம் உருவாக்குதல் நல்ல விளைவை அளிக்கும். அதற்கான வழிமுறைகள் இந்நூற்றாண்டில் ஏராளமாகவே உள்ளன.

வழக்கறிஞர் கெ.எம்.விஜயன்
சென்னை

*

மலேசியா, மார்ச் 8, 2001

முந்தைய கட்டுரைஇரு படைப்பாளிகள்
அடுத்த கட்டுரைமலையாள சினிமா கடிதங்கள்