வந்தேமாதரம் கடிதங்கள்

வந்தே மாதரம் பாட முடியாது முடியாது முடியாது !!. என்ன செய்வாய்?:

அய்யா, முஸ்லிம்கள் சொல்வதை சிறிது கவனமாக பொறுமையுடன் கேளுங்கள்.(ஹி..ஹி.. என்ன உட்டா வேற‌ யாரால‌ இதெல்லாம் சொல்ல‌ முடியும்?)
———————————————–
“ஹிந்துத்வ தலைவர்களே !. வந்தே மாதரத்தை நாங்கள் பாட மாட்டோம். பாட முடியாது. அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் தலை வணங்க மாட்டோம். தலையை துண்டித்தாலும் சரி. அல்லாஹ்வுக்கு பிறகுதான் நாடு வீடு எல்லாம். விளங்குதா?.

என்ன பண்ண முடியும் உங்களால்?. நாட்டை விட்டு வெளியே போ என்றுதானே சொல்வீர்கள்?. இந்த நாட்டில் எங்களால் முஸ்லிம்களாக‌ வாழ முடியவில்லை என்று தாருல் இஸ்லாமுக்கு வேரோடு புலம் பெயர கோரிக்கை வைத்து விடுவோம்.

25 கோடி முஸ்லிம்கள் நாடு துறக்கத் தயார் என்று கோரிக்கை வைத்தால் என்னவாகும்?.

1. ஏற்கனவே நாட்டின் சட்டதிட்டங்களில் நம்பிக்கை இழந்து விட்ட முஸ்லிம்கள், நாட்டின் மீதே நம்பிக்கை இழந்து விட்டார்கள் என்று அர்த்தம்.

2. வராதே என்று தாருல் இஸ்லாமால் சொல்ல முடியாது.  சொன்னால் திருக்குர்ஆன் சொல்வது பொய்யென்றாகி விடும். அப்புறம் கிருத்துவ‌ நாடுகள் ” ஞானஸ்நானம் போட்டுக்கிட்டு எங்கள்ட்ட வாங்க வாங்க”னு அழைக்க ஆரம்பிச்சுடுவாங்க.  நாங்க கிருத்துவரா மாற ஆரம்பிச்சா பாரதமாத மேரிமாதவா மாறிடும்.  அப்புறம் எதற்கு வே.பு.பெ?.

3. கிட்டத்தட்ட 60 லட்சம் இந்தியர்கள் அரபு நாடுகளில் மட்டும் வேலை செய்கிறார்கள். 50 லட்சத்துக்கும் மேற் பட்டவர்கள் ஹிந்துக்கள். 80 சதவிகிதத்துக்கு மேற்பட்ட உய‌ர் பத‌விகளில் இருப்பவர்கள் பிராமணர்கள்.

4. பெரும்பாலும் முற்படுத்தப்பட்ட வகுப்பினரைக் கொண்ட‌ ஹிந்துத்வவாதிகள், எப்படி கூட்டி கழித்தாலும் 15 சதவிகிதத்திற்கு மேல் தேறவே மாட்டார்கள். ஏனைய 85 சத‌விகிதம் மற்ற வகுப்பினர்.

5. நாங்கள் வெளியேறுகிறோம். நீயே வைத்து அனைத்தையும் சாப்பிடு என்று முஸ்லிம்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் வைத்து விட்டால், ஹிந்து மதமே இல்லையென்றாகி விடும். பிராமணர், ஷத்திரியர், வைசியர், சூத்திரர் எனும் 4 வருணாஸ்ரம குலங்கள்தான் எஞ்சி நிற்கும். பிராமண‌ர் 3 சதவிகிதம். சூத்திரர் 85 சதவிகிதம். மேலிருந்து கீழ் வரைக்கும் அனைத்து உயர் பதவிகளையும் பிடித்து வைத்துக் கொண்டிருக்கும் பிராமணர்களைப் பார்த்து “எங்களுக்கு என்ன செய்து கிழிக்கப் போகிறாய்?” என்று 85 சதவிகிதம் கேட்கும்.

சூத்திரர்களுக்கு அம்பாள் தரிசனம் கிட்டும். அபிஷேகம் நடக்கும்.  அப்புறம் எதற்கு வே.பு.பெ?.

“ஹிந்துத்வ தலைவர்களே !. மீண்டும் சொல்கிறோம். வந்தே மாதரத்தை நாங்கள் பாட மாட்டோம். பாட முடியாது. அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் தலை வணங்க மாட்டோம். தலையை துண்டித்தாலும் சரி. அல்லாஹ்வுக்கு பிறகுதான் நாடு வீடு எல்லாம். விளங்குதா?.

இப்பொழுது புரிகின்றதா “தாருல் இஸ்லாமுக்கு வேரோடு புலம் பெயரும்” கோரிக்கையின் மகத்துவம்? எங்கே சொல்லுங்கள் பார்ப்போம் “துளுக்கனே வெளியேறு” என்று !!!.

இதற்குப் பெயர்தான் இருமுனை ஆப்பு.
———————————————–

அய்யா, இத நான் சொல்லல. முஸ்லிம்க சொல்றாங்க !. எனக்குத் தேவை ஒரே ஒரு பூணுல். அப்புறம் நானுண்டு எனது வேதங்கள் உண்டென்று, கமண்டலத்தையும் யோக தண்ட‌த்தையும் கையிலெடுத்துக் கொண்டு காசி, ராமேஸ்வரம், ரிஷிகேஷ், ஹரித்துவார், பத்ரிநாத், கேதாரநாத், கைலாசம் என்று ஆன்மீகத்தைத் தேடி புனிதயாத்திரையில் போய்விடுவேன்.

My blogsite:
http://alamsha.sulekha.com/blog/posts.htm

 

அன்புள்ள நண்பருக்கு

ரொம்ப ஆழமாக ஏதோ சொல்கிறீர்கள் போல, சரியாகப்புரியவில்லை

ஜெ

 

அன்புள்ள ஜெயமோகன்,
விஷயத்தில் உள்ள முக்கியமான பிரச்சனை இஸ்லாமிய பத்வாக்கள் அல்ல. அந்த பத்வா வெளிவந்த அதே நாள் இந்தியாவின் உள்துறை அமைச்சர் அந்த அமைப்பின் தலைவரின் காலில் விழாத படி பணிந்து நின்ற காட்சி அனைத்து ஊடகங்களிலும் வந்தது.
தி ஹிண்டு பத்திரிகை மிகவும் சாமர்த்தியமாக இந்த பத்வாவை ஆதரித்து கட்டுரைகள் வெளியிட்டது. தி ஹிண்டு மற்றும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆகிய இரு பத்திரிகைகளும் இந்த விஷயத்தில் செய்தி வெளியிட்ட விதத்தை யாராவது ஒப்பிட்டு பார்க்கலாம். தி ஹிண்டு தனது வாசகர் கடிதங்களிலும் கூட வந்தேமாதர எதிர்ப்பைக் காட்டும் கடிதங்களுக்கே முக்கியத்துவம் கொடுத்தது.
அப்பாடலை பாடுவதே இஸ்லாமிய உணர்ச்சிகளை புண்படுத்திவிடும் என்னும் விதத்தில் இந்த நாட்டின் ஆளும் கட்சியின் தலைவி நடந்து கொண்டார். அப்பாடலின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் உடல்நிலை சரியில்லை என வராமல் இருந்து விட்டு மறுநாளே பிற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
இஸ்லாமியர்களை சக இந்தியர்களாக எண்ணும் கோடிக்கணக்கான இந்தியர்களின் முகத்தில் இந்த பத்வா காறி உமிழ்வது இருக்கட்டும், இந்த போலி மதச்சார்பின்மைவாதிகள் எத்தனை கோடி தேசபக்தி கொண்ட இஸ்லாமியரின் முகத்தில் காறி உமிழ்கின்றனர் பாருங்கள். நேற்று இந்தியன் எக்ஸ்பிரஸில் உத்தரபிரதேசத்திலுள்ள ஒரு இஸ்லாமிய மதரஸா ஏறக்குறைய 40 ஆண்டுகளாக வந்தேமாதரம் பாடலுடன் ஆரம்பிப்பதாகவும் இன்று வரை அங்கு பிரச்சனை வந்ததில்லை என்றும் செய்தி வந்துள்ளது.
இப்படி இந்தியாவெங்கும் உள்ள இஸ்லாமியர்களுக்கு எதிராக ஓட்டுவங்கி அரசியல் வியாபாரிகளால் செய்யப்படும் இந்த துரோகத்தையும் அதற்கு இவர்கள் காந்தியையும் மதச்சார்பின்மையையும் பயன்படுத்திக் கொள்வதையும் என்னவென்று சொல்லலாம்?

அரவிந்தன் நீலகண்டன்

அன்புள்ள  அரவிந்தன்,

ஒன்றை எதிர்ப்பதற்காக எதை வேண்டுமானாலும் சொல்லலாம். எந்தக் காரணத்தையும் காட்டலாம். எளிமையான கேள்வி. இந்து என்ற சொல்லில் இருந்துவந்தது என்பதற்காக இந்துஸ்தான் இந்தியா போன்ற சொற்களை மாற்றவேண்டும் என ஒருவர் கேட்க ஆரம்பித்தால் என்ன விளக்கம் அளிக்க முடியும்?

ஒரு நவீன சமூகத்தில் வாழ்வதற்கு இத்தகைய பழைவாத நிபந்தனைகளை விதிப்பதில் உள்ள அரசியல் ஆபத்துதான் உண்மையான சிக்கல்

ஜெ

 

முந்தைய கட்டுரைசாதியை வைத்துக்கொண்டு என்ன செய்வது?
அடுத்த கட்டுரைதிருவனந்தபுரத்தில்…