எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சி.கெ.கெ.விருது

ஈரோட்டில் இருந்து முப்பதாண்டுகளாகச் செயல்பட்டுவரும் சி.கெ.கெ. அறக்கட்டளை இவ்வருடத்திய இலக்கிய விருதை எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு வழங்கியிருக்கிறது. ரூபாய் பதினைந்தாயிரமும் பாராட்டு பத்திரமும் அடங்கிய விருது இது.

ஈரோட்டில் உள்ள கொங்கு கலையரங்கத்தில் வரும் ஜூலை 27 ஆம் தேதி  ஞாயிற்றுக்கிழமை மலை ஐந்து மணிக்கு இந்த விழா நடைபெறுகிறது.

இந்தவருடம் ராமகிருஷ்ணனுக்கு வழங்கபப்டும் இரண்டாவது இலக்கிய விருது இது. ராமகிருஷ்ணன் ஏற்கனவே பெரிய அளவில் வாசகர் வட்டத்தைப் பெற்றிருப்பவர். இலக்கிய அங்கீகாரம் கொண்டவர். இவ்விருது அவருக்கு மேலும் ஒரு சிறப்பு.

ராமகிருஷ்ணனை மனமார வாழ்த்துகிறேன்

கனடிய இலக்கியத்தேட்ட விருதுகள்

காமத்துக்கு ஆயிரம் உடைகள்:எஸ்.ராமகிருஷ்ணனின் ‘உறுபசி’

யாமம் :எஸ்.ராமகிருஷ்ணனின் நவீன மீபொருண்மை உலகு

எஸ்ரா

முந்தைய கட்டுரைஒரு குட்டிக்கதை
அடுத்த கட்டுரையாழ்நிலத்துப்பாணன் -2