பழசி ராஜா தள்ளிவைப்பு

தமிழகத்தில் புயல்சின்னம் காரணமாக பழசி ராஜா வெளியாவது நவம்பர் இருபதுக்கு தள்ளிவைக்கப்படுவதாக தயாரிப்புத் தரபில் சொன்னார்கள். தமிழ்கத்தில் மழை பொதுவாகவே வசூலை பாதிக்கிறது, காரணம் மழையில் சாலைகள் சீரழிந்துவிடுவதும் கடுமையான போக்குவரத்து

நெரிசல் உருவாவதும் வழக்கம். வேறு வழியில்லை

நவம்பர் இருபதுக்கு இன்னமும் பத்து நாட்கள்…
ஜெ

அன்புள்ள ஜெ

 

பழசிராஜாவின் ‘குந்நத்தே கொந்நய்க்கும்’ என்ற பாடலின் காட்சித்தொகுப்பை இணைத்திருக்கிறேன். மிகச்சிறப்பாக எடுக்கப்பட்ட பாடல் இது. வீடியோ நன்றாக இல்லை என்றாலும் ·ப்ரேம்களில் இருக்கும் அழகையும் பர்·பக்ஷனையும் ஊகிக்க முடிகிறது. இன்னொருபாடலான ஆதியுஷஸ் சந்திய பூத்தது இவிடே வும் நன்றாகவே எடுக்கப்பட்டிருக்கிறது

 

சிவம்

 

 

 

http://www.youtube.com/watch?v=eD-1nk0vQKw

http://www.youtube.com/watch?v=bGxS-es__rc

http://www.getacd.org/listen_xsrfxZNhPRA/pazhassi_raja_mammootty_kunnathe_konnakkum_song_hd_malayalam_movie_mammootty_kaniha

http://ragadhevan.blogspot.com/2009/10/blog-post_1104.html

 

http://www.musicplug.in/songs.php?movieid=6710&movietypeid=1&langid=15

 

 

அன்புள்ள ஜெ

 

மம்மூட்டியைவிட சரத் குமார் நடிப்பை புகழும் விமரிசனக்குறிப்புகள் கீழே.

 

சிறில் அலெக்ஸ்

 

http://varnachitram.com/2009/10/16/review-roundup-pazhassi-raja/ –

 

http://blog.nikhil.co.in/2009/10/pazhassi-raja-movie-review.html – he says he liked Sarath’s acting better


Regards,
Cyril Alex
http://www.cyrilalex.com

 

 

 

அன்புள்ள ஜெயமோகன்

 

இந்த இணைப்பில் டிரெய்லெர்களின் சுட்டிகள் உள்ளன. உங்களுக்கு ஆர்வமிருக்கும் என நினைக்கிறேன்

 

ஆனந்த்

 

 
http://tamil.galatta.com/entertainment/livewire/id/Pazhassi_Raja_trailers_Tamil_32198.html

 

அன்புள்ள ஜெயமோகன்,

பழசி ராஜா படத்தை நீங்கள் பிரமோட் செய்கிறீர்களா என்ன? ஏன் இத்தனைசெய்திகள் கொடுக்கிறீர்கள்? இதற்கு உங்களுக்கு விளம்பரக்கட்டணம் உண்டா?
ஸ்ரீ£னிவாஸ்

 

அன்புள்ள ஸ்ரீனிவாஸ்

பிரமோஷன் என்று வைத்துக்கொண்டால் அதில் தவறில்லை என்றே சொல்லலாம். கொடுக்கும் கட்டணம் அதற்கும் சேர்த்துத்தான் என்று ஏன் சொல்லக்கூடாது?

இந்தச்செய்திகளை யாரோ நண்பர்கள் அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள். போடுகிறேன். என் வரையில் இவற்றால் அபாரமான பயன் இருப்பதை நான்கடவுள்படம் வெளியானபோது கண்டுகொண்டேன். தேடல் வழியாக பல ஆயிரம்பேர் என் இணையதளத்துக்குள் வந்துவிட்டார்கள். படம்போனபின்னரும் அவர்கள் போகவுமில்லை. இப்போதும் அலெக்ஸா ரேட்டிங்கில் என் இணையதளம் குதித்திருப்பதைப் பார்க்கலாம்.

நம் மக்களுக்கு சினிமா மீதுள்ள ஆர்வம் அப்படிப்பட்டது. சினிமா மூலமே போய்சேர முடிகிறது. சினிமா இல்லையேல் இந்த தனிப்பட்ட வலைத்தளம் இன்று ஒரு பெரிய இணைய இதழின் இடத்துக்குச் சென்று சேர்ந்திருக்காது. எம்ஜிஆர் சிவாஜிக்கும் ஆனந்தவிகடனுக்கும் முகப்பிலேயே நன்றி சொல்லவேண்டும்.

பிரமோஷன் இந்த இணையதளத்துக்குத்தான்.ஆனால் சினிமாவுக்காக உள்ளே வருபவர்கள் தங்கிவிடுவதே ஆச்சரியம். இந்த இணையதளத்தில் தமிழிலேயே தீவிரமான எழுத்துக்களில் ஒருபகுதி வெளியாகின்றது. அந்த தரத்தில் சமரசமே இல்லை. ஆனாலும் வாசிக்கிறார்களே

ஜெ

 

முந்தைய கட்டுரைநெடுங்குருதி -2
அடுத்த கட்டுரைஇருகவிஞர்கள்