உதகை காவியமுகாம் 2014 அறிவிப்பு

நண்பர்களுக்கு,

உதகை காவிய முகாம் 2014 மே மாதம் 16, 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் (வெள்ளி, சனி, ஞாயிறு) உதகை நாராயண குருகுலத்தில் நடைபெற முடிவாகியுள்ளது. முகாமில் அதிக பட்சம் 55 பேர் கலந்து கொள்ளலாம். கோடை இறுதி என்பதால் ஆசிரமத்தில் இடப்பற்றாக்குறை. அதிக நபர்கள் தங்க முடியாது.

முன்பதிவு செய்துகொள்ள 

https://docs.google.com/forms/d/1yvfPpCZEjEk_TqBBHPowDBmM9FifGYSwLUDL9ApVWrQ/viewform

 அமர்வுகளின் தலைப்புகள் தோராயமாக

 * உலகக்கவிதைகள்

* இந்தியக்கவிதைகள்

* தமிழ்க்கவிதைகள்

* உலக இலக்கியம்

* இந்திய இலக்கியம்

* தமிழிலக்கியம்

* கம்பராமாயணம்

வழக்கமான ஆசிரியர்களுடன், புதிய எழுத்தாளர்கள் சிலரும் கலந்து கொண்டு அமர்வுகளில் பேச இருக்கிறார்கள். விபரங்கள் விரைவில் பகிரப்படும். முகாம் ஏற்பாடுகளை விஜயராகவனும், நிர்மால்யாவும் கவனிக்கின்றனர்.

முகாமில் கலந்து கொள்ள நபர் ஒன்றுக்கு ரூ.1,200/- நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இடப்பற்றாக்குறை நிலவுவதால் முந்துபவர்களுக்கே முன்னுரிமை. வங்கிக் கணக்கில் தொகையினைச் செலுத்தி பங்கேற்பினை உறுதி செய்து கொள்ளவும்.

 R. VIJAYARAGAVAN
A/C NO: 31839314888
SBI – MOOLAPALAYAM (ERODE)
BRANCH NO:12780
IFSC CODE: SBIN-0012780

 தொடர்புக்கு விஜயராகவன் 98430 321 31 [email protected]

எப்போதும்போல அந்த ஐந்து நிபந்தனைகள் உண்டு.

1. வரக்கூடியவர்கள் எல்லா அமர்வுகளிலும் முழுமையாகப் பங்கேற்க வேண்டும்.

2. தனிப்பட்ட முறையில் விமரிசனம்செய்து பேசக்கூடாது.கடுமையான நேரடி விமரிசனங்களும் கூடாது.

3. சந்திப்பு நிகழும் மூன்று நாட்களிலும் அரங்கிலும் வெளியிலும் மது அருந்தக்கூடாது.

4. சந்திப்புகளின்போது விவாதத்தின் பொதுவான எல்லைக்கு வெளியே அதிகம் செல்லக்கூடாது. மட்டுறுத்தல் உண்டு.

5. வரவிரும்புகிறவர்கள் தகவல் தெரிவித்தால் அழைக்கப்படுவார்கள். அழைக்கப்படாதவர்களுக்கு அனுமதி இல்லை. அனுமதி இல்லாமல் எவரையும் கூட்டி வரக்கூடாது.

6. பதிவு செய்தபின் வர இயலாத சூழல் நேர்ந்தால் முன்னதாக தகவல் தெரிவிக்க வேண்டும்.  காத்திருப்பவர்களை அழைக்க ஏதுவாகும். தகவல் தராமல் வராமல் இருப்பின் பின்பு எந்த நிகழ்ச்சிக்கும் அழைக்கப்பட மாட்டார்கள்.

நிகழ்வு பற்றி மேலும் அறிய


ஊட்டி சந்திப்பு குறித்து

ஊட்டி சந்திப்பு அலைகள்…

முந்தைய கட்டுரைவலசைப்பறவை 7: இரு அகழிகள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 47