மலேசியா பயணம்

இன்று காலை ஒன்பதுமணிக்கு திருச்சியில் இருந்து ஏர் ஏசியா விமானத்தில் நானும் கிருஷ்ணன் ராஜமாணிக்கம் இருவரும் மலேசியா கிளம்புகிறோம். அங்கே கொலாலம்பூரில் ஒரு சந்திப்பு நிகழ்ச்சி. அதன்பின் கூலிம் ஆசிரமத்தில் தங்குகிறோம். இலக்கிய முகாம்.

இன்றே [16-3-2014] மாலையில் கொலாலம்பூரில் ஒரு கவிதை வெளியீட்டுவிழா. முதல் அமர்வில் இரு கவிதை நூல்கள் வெளியீடு. நவீன், பாலமுருகன் ஆகியோர் எழுதியவை. அதன்பின் நான் கவிதைபற்றி பேசுகிறேன்.

இடம் :  Hotel Grand Pacific
Kuala lumpur Near MIC Building
நேரம் :  மாலை 6.30 மணி

தொடர்புக்கு [email protected]

அனைத்து தொடர்புக்கும் / முன்பதிவுக்கும் : 0149005447

அறிவிப்பு

தயாஜி தொடங்கி நடத்திவரும் புத்தகச் சிறகுகள் இன்று நாட்டில் தீவிர வாசகர்களுக்கான ஊடகமாக உள்ளது. 16.3.2014-இல் நடைபெறும் இந்த நிகழ்வை ‘கவிதை மாலை’ என்ற தலைப்பில் இந்நிறுவனம் வழிநடத்தும். ‘காலம் தோறும் கவிதைகள்’ என்ற தலைப்பில் இந்நிகழ்வில் ஜெயமோகன் உரையாற்றுகிறார். ஒவ்வொரு காலத்திலும் கவிதை எனும் வடிவம், அதன் பேசும் பொருள், அதன் அரசியல், தத்துவம் அனைத்தும் எவ்வாறு மாற்றம் கண்டுள்ளன என்று ஜெயமோகன் பேசுவார்.

நவீன்
பாலமுருகன்
முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 21
அடுத்த கட்டுரைபொன்னூஞ்சல் ஆடும் இளமை