அன்புள்ள ஜெ
நீங்கள் எழுதிய மூத்த எழுத்தாளர்கள் அடிக்கடி சொல்லும் பொய்கள்-ஐ சற்று முன் படித்தேன்
உங்கள் கட்டுரையில் ஏராளமான எழுத்துப்பிழைகள். அதை சொன்னால் கோபம் கொள்வீர்களா? இல்லை என்றால் அதை 26 ஆவது பொய்யாக சேர்த்துக் கொள்ளுங்கள்
அன்புடன்
அருண்
பி.கு
உங்கள் எல்லா படைப்புகளையும் படித்தவன் என்று பொய் சொல்ல மாட்டேன். படித்தது இல்லை. நவீன தமிழிலக்கிய அறிமுக்ம் மட்டும் வாங்கி வைத்திருக்கிறேன். படிக்கவில்லை. உங்கள் இணைய தளத்தை மட்டுமே படிக்கிறேன்
அன்புள்ள அருண்
இணைய நிலையத்தில் அடித்த கட்டுரை. உடையாத விசைப்பலகை கொண்ட இணைய நிலையம் உலகில் இல்லை
ஜெ.
***
அன்புள்ள ஜேயெம்
சாரு கட்டுரை படித்தீர்களா? அடேய்! டைப்….கேட்கக்கூடாது என்று எண்ணி எண்ணி முடியவில்லை
சாம்,சென்னை
அன்புள்ள சாம்
படிக்கவில்லை. ஆனால் சாரு மீது எனக்கு நம்பிக்கை உண்டு.நாம் அவரைப்பற்றி எதைச் சொன்னாலும் உடனே அதை நிரூபித்துவிடுவார்