வெண்முரசு வெளியிடும் நேரம்

அன்புள்ள ஜெ.,

தினமும் வெண்முரசு படித்தபிறகே உறங்கச் செல்கிறேன்… என்னைப்போல் பலர் இருக்கலாம்…

இந்த அத்தியாயங்களை சற்று முன்னதாகப் பதிவேற்றினால் மிகவும் உதவியாக இருக்கும்.

சிரமத்திற்கு மன்னிக்கவும்.

நன்றி
ரத்தன்

அன்புள்ள ரத்தன்,

இரவு பன்னிரண்டு என்பது ஒரு தேதியின் முதல்கணம். இரவு பத்துமணி என்பது முந்தைய தேதியின் பிந்திய நேரம். எதைச்செய்வதென்பது குழப்பமே.

ஒரு குழு ஒவ்வொருநாளும் அத்தியாயங்களை சீர்செய்கிறது. படம் வருவது இரவு 11 மணிக்கு. எல்லா வேலையும் முடிந்து அத்தியாயம் அச்சேறுவதே 12 மணிக்குத்தான்.

சொல்லப்போனால் நானே பலநாட்கள் படத்தைப் பார்ப்பதற்காக 12 மணிவரை விழித்திருக்கவேண்டிய நிலை.

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 26
அடுத்த கட்டுரைமகரந்தங்கள் மறையும் புயல்