தாமஸ் ஒரு கருத்தரங்கு

அன்புள்ள ஜெ,

இந்த போஸ்டரை இணையத்தில் பார்த்தேன். இந்தக்கூட்டத்தைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? ஃபேஸ்புக்கில் இந்துமதம் என்பது புனித தாமஸால் உருவாக்கப்பட்ட ஆதிகிறித்தவம் என்றும் அதை பிராமணர்கள் கைப்பற்றிக்கொண்டு இந்துமதமாக ஆக்கிவிட்டார்கள் என்றும் இவர்கள் சொல்வதாக கேள்விப்பட்டேன்.

ராமகிருஷ்ணன்

foto

அன்புள்ள ராமகிருஷ்ணன்

இதைப்பற்றி நான் முன்னர் எழுதிய கட்டுரைகளின் சுட்டிகள்

தமிழர்களுக்குச் சிந்திக்கச் சொல்லித்தந்த புனித தாமஸ்


புனித தோமையர் ஓர் அறிமுகம்


தாமஸ் ஞானி கடிதம்


ஞானியின் பதில்

தாமஸ் குமரிமைந்தன் கடிதம்


தாமஸ் கடிதங்கள்


தாமஸ் கடிதங்கள்


ஆத்திச்சூடி ஒரு கிறித்தவநூலே


ஆர்ச் பிஷப் ரெவெ சின்னப்பா அவர்களின் கடிதம்

*

இந்தத்தரப்பு மிகுந்த கேலிக்குரியதாக இன்று தோற்றமளிக்கலாம். நம்மில் பலர் சிரித்துவிட்டும் விலகிச்செல்லலாம். நாம் கவனிக்கவேண்டியது இரண்டு விஷயங்கள்.

தெய்வநாயகம்

இதேபோல இந்தியாவின் பழைய வரலாறு குறித்து உருவாக்கி பரப்பப்பட்ட ஒரு பொய்க்கதைதான் ஆரிய திராவிட இனவாதம். இதை விவேகானந்தர் முதல் அம்பேத்கர் வரை எந்த இந்திய சிந்தனையாளரும் ஆதரித்ததில்லை. அப்பட்டமான மோசடி என்றே சொல்லிவந்தனர். கேலிக்குரிய சிந்தனையாகவே ஐம்பதாண்டுக்காலம் அது கருதப்பட்டது. அடுத்த ஐம்பதாண்டுக்காலத்தில் அதை மாற்றமுடியாத உண்மையாக நிறுவி விட்டனர். இன்று அறிவியல்பூர்வமான தொல்பொருள்தரவுகள் வழியாக அச்சிந்தனைக்கு அடிப்படையே இல்லை என நிறுவப்பட்டுவிட்டபின்னரும் கல்வித்துறை முழுக்க அது நீடிக்கிறது. அரசியல் அதனடிப்படையில் நிகழ்கிறது. பிடிவாதமாக அது பல அதிகாரபூர்வ தரப்புகளில் பேணப்படுகிறது

இன்று நாம் ஆப்ரிக்கா குறித்தும் சீனாகுறித்தும் கொண்டுள்ள பல வரலாற்றுச்சித்திரங்கள் இத்தகைய உள்நோக்கம்கொண்ட பொய்ப்பிரச்சாரம் சலிப்பில்லாமல் முன்னெடுக்கப்பட்டமையின் விளைவுகளே. இந்த வகையான இனவாதம் கிறித்தவ மிஷனரிகளில் ஒருசாராரால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டு பரப்பப்பட்டதன் விளைவே ஆப்ரிக்காவில் ரவாண்டா, உகாண்டா, எதியோப்பியா, நைஜீரியா, காங்கோ, சியரா லியோன், கென்யா போன்ற நாடுகளில் உருவான மாபெரும் மானுடப்படுகொலைகள்.

தெய்வநாயகம் என்பவரால் முன்வைக்கப்படும் மிக அபத்தமான இச்சிந்தனையைப் பரப்ப பலநூறு நூல்கள் இதற்குள் தமிழில் எழுதப்பட்டுவிட்டன. இவற்றை நாம் நேரடியாகச் சொல்லப்போனால் பகடிசெய்வதாகவே நினைப்பார்கள். ஆனால் பல கருத்தரங்குகள் மேலைநாடுகளிலும் இந்தியாவிலும் நிகழ்ந்துவிட்டன. இந்தியாவின் முதன்மைக் கல்வியாளர்களில் பலர் இக்கருத்தரங்குகளில் பங்கெடுத்து இந்த தரப்பை ஆதரித்து பேசியிருக்கிறார்கள். இந்தியாவின் பல பல்கலைகளில் இந்த கேனத்தனத்தையே ஒரு சிந்தனைத்தரப்பாக முன்வைத்து முனைவர்பட்ட ஆய்வேடுகளை அளிக்க ஒப்புதல்பெற்றிருக்கிறார்கள். இன்னும் சிலவருடங்களில் நாம் இவற்றை ‘கல்வித்துறை’ கொள்கைகளாக கற்கத்தான் போகிறோம்.

இந்தப் போஸ்டரைப்பார்க்கையில் இந்த அபத்தத்துக்கு வாட்டிகன் அனுமதி இல்லாததனால் இதில் ஆர்வம் காட்டிய சில கத்தோலிக்க துறவிகள் பின்வாங்கிவிட்டதாகத் தெரிகிறது. ஆனால் இது சீர்திருத்தச் சபைகளின் ‘அதிகாரபூர்வ’ தரப்பாக உள்ளது. சீர்திருத்தச்ச்பை போதகர்கள் எல்லாருமே இதை மேடைகளில் மீண்டும் மீண்டும் சொல்கிறார்கள்.

சமீபத்தில் வெண்டி டானிகரின் இந்துக்களைப்பற்றிய ‘வரலாற்று’ நூலிலும் இந்தத் தரப்பு ‘ஆய்வு உண்மை’யாக முன்வைக்கப்பட்டிருந்தது. அந்நூலை இந்துக்களை பற்றிய முதன்மையான வரலாற்று நூலாகச் சிலர் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.அதாவது இங்குள்ள முற்போக்கு அறிவுஜீவிகளில் ஒருசாரார் இதை ஏற்கனவே ஏற்றுக்கொண்டுவிட்டார்கள்!

எத்தனை எதிர்ப்பு வந்தாலும் அவர்கள் தொடர்ச்சியாக அதைச்செய்துகொண்டேதான் இருப்பார்கள். அவர்கள் அடைந்த வெற்றியெல்லாம் அப்பிரச்சார வல்லமைவழியாகத்தான். நாம் அபத்தநகைச்சுவை என நினைக்கும் ஒரு விஷயம் காலப்போக்கில் நம் வரலாறாகவே ஆகிவிடும். தாமஸ் பிராமணர்களால் குத்திக்கொல்லப்பட்டார் என்ற வரலாறு எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் சொல்லிச்சொல்லியே நிறுவப்பட்டு இன்று மறுக்கமுடியாததாக ஆகிவிட்டிருப்பதுபோல.

திரும்பத்திரும்ப நாமும் சொல்லிக்கொண்டிருக்கவேண்டியதுதான்.

ஜெ


தெய்வநாயகம் அவர்களின் பக்கம்

தாமஸ் தொன்மம் ஒரு தளம்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 38
அடுத்த கட்டுரைஆதிச்சநல்லூர் – கோடைக்கொடுமை- எதிர்வினைகள்