முதற்கனல் சிறப்புப்பதிப்பு

அன்புள்ள ஜெமோ

முதற்கனல் நாவலுக்கு ஒரு சிறப்புப் பதிப்பு வெளியிடுவதாக அறிவித்திருந்தீர்கள். 300 பிரதிகள் முன்பதிவு நடந்தால் மட்டுமே வெளியிடப்படும் என்று சொல்லியிருந்தீர்கள். பணம் கட்டுவதற்குமுன்பு உறுதியாக அந்தப்பதிப்பு வெளிவருமா என அறியவிரும்புகிறேன்.

ஸ்ரீராம்

அன்புள்ள ஸ்ரீராம்,

600 ரூபாய்க்கு மேல் பெறுமானமுள்ள விஷயங்களிலும் இந்த எச்சரிக்கையுணர்வுடன் இருப்பீர்கள் என நினைக்கிறேன். இருக்க வாழ்த்துக்கள்.

முதற்கனல் 500 பிரதிகளுக்குமேல் முன்பதிவாகியிருக்கிறது. காலச்சுவடு விளம்பரத்தில் 10 ஆம் தேதி இறுதியாகச் சொல்லப்பட்டிருப்பதனால் 600 பிரதிகளுடன் முன்பதிவை முடித்துக்கொள்ளலாமென நினைக்கிறோம். அதற்குமேல் பிரதிகள் விற்கப்படுமென்றால் என்னால் கையெழுத்திட முடியாது. அதுவே பெரும்பணியாகிவிடும்.

இது சிறப்புப் பதிப்பு ஆகையால் முன்பதிவில் மட்டுமே பெறமுடியும். கடைகளில் கிடைக்காது. ரூ 300 விலையுள்ள மலிவுப்பதிப்பு மட்டுமே வாங்குவதற்குக் கிடைக்கும்

மலேசியாவில் பதிவுசெய்தவர்களுக்கு நானே நேரில் கொண்டுசெல்வேன். சிங்கப்பூரில் பதிவுசெய்தவர்களின் பிரதிகளை மலேசியா கொண்டுசென்று அஞ்சலில் அனுப்புவோம். அஞ்சல்செலவைக் குறைப்பதற்காக.

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 12
அடுத்த கட்டுரைசிங்கப்பூரில் சில தினங்கள்…